Latest Updates
-
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்
மனதை மயங்க வைக்கும் அற்புதமான டை-கள், அதுவும் ரூ.500-க்கும் குறைவாக!
ஆண்கள் மிகவும் விருப்பத்துடன் வாங்க நினைப்பதும், அதே அளவிற்கு வெறுப்பை உமிழக் காரணமாக இருப்பதும் அவர்கள் அணிந்திருக்கும் டை தான்! அதை அணிந்து கொள்ளத் தெரியாத சிலர், அதனை வெறுப்பார்கள். ஏனெனில், அதன் மூலம் மூச்சு முட்டுவது போன்ற நிலை ஏற்படும். மேலும் சிலர், தங்களுடைய உருவத்திற்கு அது பொருத்தம் இல்லாததாக இருப்பதை நினைத்து வெறுப்படைவார்கள்.
ஆனால், ஒரு மனிதனை நன்றாகவும், பண்பட்டவனாகவும், ஒழுக்கம், மென்மை போன்ற குணங்களைக் கொண்டவனாகவும், கவர்ச்சியாகவும் காட்டும் திறமை 'டை'களுக்கு உண்டு என்பது தான் உண்மை. பெரும்பாலான நேரங்களில் தவறான அல்லது வழக்கில் இல்லாத வகை 'டை'களை ஆண்கள் அணிந்திருப்பார்கள். 'டை' என்பது உங்களை பெருமையுடனும், மேன்மையாகவும் நடக்கச் செய்யும் ஆபரணமாகும். சரியான 'டை'-ஐ எடுத்துச் செல்வதும் மற்றும் அதை சரியான நிகழ்வுக்கு எடுத்துச் செல்வதுமே 'டை'-ஐ பயன்படுத்துவதற்கான சிறந்த அணுகுமுறையாகும்.
ஆண்களே, எந்த நிகழ்ச்சிக்கு, என்ன மாதிரியான டை-ஐ அணிய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? மாறுபட்ட சர்ட்களுக்கு, எந்த டை மேட்ச்சாக இருக்கும் என்று தெரியுமா? இல்லையா? வருத்தப்பட வேண்டாம், இதோ பேஷன் டிரெண்ட் பற்றிய இந்த பயணத்தில் உங்களுடன் வந்து, இவ்விஷயங்களை நாங்கள் கற்றுத் தருகிறோம். அனைத்து நேரங்களிலும், அணியக் கூடிய 4 வகை டை-கள் பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கோடு போட்ட டைகள் (Striped Ties)

இவற்றை குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை மிகவும் ஃபார்மலாகவும், அமைப்பாகவும் இருக்கும். நீங்கள் அலுவலகத்திற்கோ அல்லது விருந்திற்கோ அல்லது வேறு ஏதேனும் அலுவல் ரீதியான சந்திப்பிற்கோ செல்லும் போது. உங்களுடைய கழுத்தில் இந்த கோடு போட்ட டை இருக்கட்டும்.
பூ போட்ட டைகள் (Floral Ties)
பெயரே ரொமான்டிக்காக உள்ளதா? ஆம், இந்த வகை டைகள் காதல் உணர்வைக் கொண்டவையாக இருக்கும், அணிபவரிடமும் அந்த உணர்வைத் தூண்டும். ஸ்பெஷல் டின்னர், தேனிலவு, பால்ரூம் நடனம் மற்றும் திருமணம் போன்ற நன்னாட்களிலும் (சர்ச் அல்லது ரிஷப்சன்) கூட இந்த வகை டை-களை அணியலாம்.
கட்டம் போட்ட பௌ டைகள் (Checked Bow Ties)
இது உங்களை போதையூட்டும் மனிதராகச் செய்யும் வல்லமை பொருந்திய டை ஆகும். நீங்கள் 'ப்ரெஞ்ச் (Brunch)'-க்கோ அல்லது உங்களுடைய கேர்ள்-பிரண்டை சந்திப்பதற்கோ அல்லது பார்ட்டிகளுக்கோ செல்வதாக இருந்தால், இந்த செக்-போ டை-களை அணிந்து செல்லுங்கள். அவை கவர்ச்சி, வசீகராமாகவும் மற்றும் எளிதில் கவனிக்கப்படக் கூடியவையாகவும் இருக்கும்.
புள்ளி அல்லது போல்கா புள்ளி டைகள் (Dotted ties or polka dot ties)
இவை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டவையாகவும் மற்றும் இயற்கையிலேயே நவநாகரீகமானவைகளாகவும் உள்ளன. இவற்றை எந்த இடங்களிலும் அணிந்து செல்லலாம். இவற்றின் வண்ணம் மற்றும் டைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புள்ளிகளின் அச்சு போன்றவற்றை கவனித்தால் மட்டும் போதும். சிறிய புள்ளிகளைக் கொண்ட வேளிர் நிற டைகளை அலுவலக நிகழ்வுகளுக்கும், வண்ணமயமான பெரிய புள்ளிகளை டைகளை வெண்மை நிற பின்னணியுடன் பார்ட்டிகளிலும் பயன்படுத்தலாம்.
எங்களுடைய பரிந்துரைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்றும் மற்றும் இவற்றை வாங்காமல் இருப்பதற்காக நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? வேகமாகச் சென்று, அவற்றை இப்பொழுதே வாங்கிடுங்கள்.
நீங்கள் ஏதாவது பரிந்துரைகளைச் சொல்ல விரும்பினால், கீழே அவற்றை எழுதவும்.



Click it and Unblock the Notifications


