For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாராலும் இந்த அழகையும், கவர்ச்சியையும் அடிச்சுக்க முடியாது... மர்லின் மன்றோ # Iconic Pics

யாராலும் இந்த அழகையும், கவர்ச்சியையும் அடிச்சுக்கவே முடியாது... மர்லின் மன்றோ # Iconic Pics

By Staff
|

இப்படி ஒரு கவர்ச்சி கன்னி மீண்டும் பிறப்பாரா என்பது மிகவும் ஆச்சரியம் தான். அந்த காலக் கட்டத்தில் ஒரு நடிகைக்கு உலகளாவிய புகழ், பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தது எனில் அது மர்லின் மன்றோ தான்.

அனைவருக்கும் கவர்ச்சி கன்னியாக, அழகு சுந்தரியாக மட்டும் தெரிந்தான் மர்லின் மன்றோ. வெகு சிலருக்கு மட்டுமே அவரது ஆரம்பக் காலம் எப்படி இருந்தது... மாடலிங் காரணத்தால் அவர் இழந்த இல்லறம் போன்ற சில கசப்பான பக்கங்களும் தெரியும்.

Marilyn Monroe Remains Our Ultimate Sexy Style Goddess

ஏறத்தாழ மர்லின் மன்றோ மற்றும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை ஒரே கோட்டில் பயணித்ததாக தான் அறிய முடிகிறது. எங்கேயோ துவங்கிய இவர்களது வாழ்க்கை பயணம் பல திருப்பங்கள், திடீர் பிரபலம், எதிர்ப்பார்த்திடாத அளவுக்கு புகழ்... மர்மமான மரணம் என அமைந்தது.

மர்லின் மன்றோவுக்கு நிகர் மர்லின் மன்றோ தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நார்மா ஜேன் என்பதே மர்லின் மன்றோவின் இயற்பெயர். தனது தந்தையர் யார் என்பதே மர்லின் மன்றோவுக்கு தெரியாது. குழந்தை பருவதில் தனது கார்டியங்களின் பாதுகாப்பில் இருந்தார். காப்பகத்தில் வளர்ந்து வந்த இவருக்கு 11 ஜோடியினர் உதவி வந்ததாக அறியப்படுகிறது.

#2

#2

திரையில் தனது பெயரை ஜேன் அடைர் என்று தான் வைத்துக் கொள்ள விரும்பினாராம் மர்லின் மன்றோ. ஆனால், கடைசியில் மர்லின் மன்றோ என்ற பெயர் இவருக்கு திரை பெயராக சூட்டப்பட்டது என அறியப்படுகிறது.

#3

#3

பதின் வயதிலேயே நிச்சயிக்கப்பட்ட திருமண உறவில் இணைந்தவர் மர்லின் மன்றோ. சாதாரண வேலை செய்துக் கொண்டிருந்த மர்லினை ஒரு புகைப்பட கலைஞர் எடுத்த போட்டோ மூலமாக மாடலாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சில காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இவர் முதல் திருமண பந்தத்தில் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

#4

#4

பிறவியிலேயே அழகான தோற்றம் கொண்டவர் மர்லின். ஆனால், இவரது ஏஜண்டான ஜானி ஹைட் என்பவரின் வற்புறுத்தல் காரணமாக இரண்டு முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டார் மர்லின். மூக்கு நுனி மற்றும் தாடை / கன்னம் பகுதியில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டதாக அறியப்படுகிறது.

#5

#5

டைமண்ட்ஸ் ஆர் எ கேர்ள்ஸ் பெஸ்ட் பிரெண்ட் என்ற பாடல் மர்லின் மன்றோவுக்கு பெரும் புகழை தேடி தந்தது. ஆனால், உண்மையில் வைர நகைகள் மீது பெரும் ஈர்ப்பு இல்லாதவர் மர்லின் மன்றோ. ஒரே ஒரு வைர மோதிரம் மற்றும் முத்துக்கள் மட்டுமே இவர் பயன்படுத்தி வந்தார் என்றும். மற்றபடி ஆடைகள் மீது தான் மர்லின் மன்றோவுக்கு மோகம் அதிகம் இருந்ததாக அறியப்படுகிறது.

#6

#6

ஆரம்பக் காலக்கட்டத்தில் திரை துறையில் தனக்கான சொந்த தயாரிப்பு கம்பெனி வைத்திருந்த பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறது. மர்லின் மன்றோ புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை வைத்திருந்தார் இவர். இதன் மூலம் தி பிரன்ஸ் அண்ட் தி ஷோ கேர்ள் என்ற ஒரே படத்தை மட்டும் தயாரித்திருந்தார் மர்லின்.

#7

#7

நாடக கதையாசிரியர் ஆர்தர் மில்லர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பிறகு யூத மதத்திற்கு மதமாற்றம் செய்துக் கொண்டார் மர்லின் மன்றோ. இவர்களது திருமண பந்தத்தின் போது குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்தார் மர்லின். குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது மர்லினின் நீண்ட நாள் கனவு, ஆசை. ஆனால், இவர் எக்டோபிக் பிரகனன்சி என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது.

#8

#8

நாடக கதையாசிரியர் ஆர்தர் மில்லர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பிறகு யூத மதத்திற்கு மதமாற்றம் செய்துக் கொண்டார் மர்லின் மன்றோ. இவர்களது திருமண பந்தத்தின் போது குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்தார் மர்லின். குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது மர்லினின் நீண்ட நாள் கனவு, ஆசை. ஆனால், இவர் எக்டோபிக் பிரகனன்சி என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது.

#9

#9

தனது நடிப்பு திறனுக்காக பலமுறை பாராட்டுகள் பெற்றுள்ளார் மர்லின் மன்றோ. ஆனால் ஒருமுறை கூட இவர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது இல்லை. ஆனால், சம் லைக் இட் ஹாட் என்ற படத்தில் சுகர்கேன் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது வென்றிருந்தார் மர்லின் மன்றோ.

#10

#10

புகழின் உச்சியில் இருந்த போது மை ஸ்டோரி என்ற பெயரில் தனது சுய சரிதை எழுதினார் மர்லின் மன்றோ. இந்த புத்தகத்தை எழுத இவரது நண்பர் திரைக்கதை ஆசிரியர் பென் ஹெச்ட் உதவினார். இவர் இறந்த பல வருடங்கள் ஆன போதிலும் கூட அந்த புத்தகம் வெளியாகவில்லை என்று அறியப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Marilyn Monroe Remains Our Ultimate Sexy Style Goddess

Born in Los Angeles in 1926 as Norma Jeanne Mortenson, Marilyn Monroe was the sexy siren, femme fatale, cute chic, and yet this troubled girl.
Desktop Bottom Promotion