Latest Updates
-
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
வோக் இந்தியா ஃபோட்டோசூட்டின் போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் சில லேட்டஸ்ட் லுக்ஸ்!
2019 ஆம் ஆண்டிற்கான அக்டோபர் மாத வோக் இந்தியா அட்டைப்படத்தில் முதன்முறையாக தென்னிந்திய நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையுமான நயன்தாரா இடம் பெற்றுள்ளார்.
Recommended Video
வோக் பத்திரிக்கை உலகளவில் மிகவும் பிரபலமானது. இந்த பத்திரிக்கை மாதந்தோறும் வெளிவரும் ஒரு ஃபேஷன் சம்பந்தமான பத்திரிக்கை. இந்தியாவிலும் இதன் கிளை உள்ளது. அது தான் வோக் இந்தியா. இந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இதுவரை பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே இடம் பெற்று வந்தனர். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடிகைகள் இப்பத்திரிக்கையின் அடட்டைப்படத்தில் இடம் பெறுவர்.
ஆனால் 2019 ஆம் ஆண்டிற்கான அக்டோபர் மாத வோக் இந்தியா அட்டைப்படத்தில் முதன்முறையாக தென்னிந்திய நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையுமான நயன்தாரா இடம் பெற்றுள்ளார். வோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நயன்தாரா.

வோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் போடுவதற்கான சில போட்டோசூட்டுகள் நயன்தாராவைக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த ஃபோட்டோசூட்டில் நடிகை நயன்தாரா பல அருமையான மற்றும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து, செக்ஸியான பல போஸ்களைக் கொடுத்துள்ளார். மேலும் தற்போது இவரது வோக் போட்டோசூட் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நீங்கள் நயன்தாராவின் அந்த ஃபோட்டோக்களை பார்த்ததில்லையா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பச்சை நிற கவுன்
இது வோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்பட ஃபோட்டோசூட்டின் போது நயன்தாரா அணிந்திருந்த பச்சை நிற கவுன் ஆகும். இந்த உடையை வடிவமைத்தவர்கள் கவுரி மற்றும் நைனிகா என்னும் டிசைனர்களாவர். நயன்தாரா அணிந்திருந்த இந்த பச்சை நிற கவுன் அவருக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுத்துள்ளது. மேலும் இந்த உடைக்கு நயன்தாரா மேற்கொண்டிருந்த மேக்கப், அவரை ஹாட்டாக வெளிக்காட்டியது. குறிப்பாக லிப்ஸ்டிக் அவரது தோற்றத்தை சிறப்பாக காட்டியது எனலாம். அதுமட்டுமின்றி, இந்த உடைக்கு இவர் போனிடைல் போட்டிருந்தார்.

டாப்ஸ் மற்றும் ஷாட் ஸ்கர்ட்
இது நயன்தாராவின் மற்றொரு லுக். இந்த போட்டோவில் நயன்தாரா சுருக்கங்கள் மற்றும் அடுக்குகளைக் கொண்ட டாப்ஸ் மற்றும் கோல்டன் நிற ஷாட் ஸ்கர்ட் அணிந்துள்ளார். இந்த டாப்ஸ் காலர் கொண்டிருப்பதோடு, டீப் லோ-நெக் மற்றும் ஃபுல் ஸ்லீவ் கொண்டிருந்தது, நயன்தாராவிற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுத்தது.

சிங்கிள் ஸ்ட்ராப் கவுன்
இது போட்டோசூட்டின் போது வெளிர் நீல நிற சிங்கிள் ஸ்ட்ராப் கவுன் அணிந்து நயன்தாரா கொடுத்த மற்றொரு போஸ். இந்த கவுன் டீப் லோ நெக் கொண்டிருந்தது, நயனின் தோற்றத்தையே ஹாட்டாக காட்டியது. மேலும் இந்த உடைக்கு நயன்தாரா மேற்கொண்டிருந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் அவருக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தது.

மின்னும் சிங்கிள் பீஸ் உடை
இது வோக் இந்தியா போட்டோசூட்டின் போது நயன்தாரா அணிந்திருந்த மற்றொரு உடை. நயன்தாரா அணிந்திருந்து சிங்கிள் பீஸ் உடை ஆகும். இந்த ஸ்லீவ்லெஸ் உடையில் நயன்தாரா செக்ஸி லேடியாக காட்சியளித்தார். மேலும் இந்த உடைக்கு நயன்தாரா கண்களுக்கு கண் மை மற்றும் உதட்டிற்கு லிப் க்ளாஸ் போட்டு, கன்னங்களுக்கு லேசாக ப்ளஷ் போட்டிருந்தது, அவரை சிறப்பாக காட்டியது. முக்கியமாக நயன்தாரா இந்த உடைக்கு ஆபரணங்கள் ஏதும் அணியவில்லை.

பிரிண்ட்டட் கவுன்
இது நயன்தாராவின் மற்றொரு செக்ஸியான லுக். இவர் எச் அண்ட் எம் எக்ஸ் ஜியாம்பட்டிஸ்டா வள்ளி டிசைனர் வடிவமைத்த பிரிண்டட் ரஃபிள் கவுன் அணிந்துள்ளார். இந்த உடை லோ நெக் கொண்டிருந்தது, நயன்தாராவை படு ஹாட்டாக வெளிக்காட்டியது எனலாம். மேலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டிருந்த மேக்கப் மற்றும் மெஸ்ஸி ஹேர் ஸ்டைல் நன்றாக இருந்தது.

ரிலாக்ஸ் லுக்
இது வோக் இந்தியா போட்டோசூட்டின் போது நயன்தாரா தரையில் அமர்ந்து ஏதோ யோசிப்பது போன்று எடுக்கப்பட்ட போட்டோ.



Click it and Unblock the Notifications