For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிகினியில் கலக்கிய தென்னிந்தியா நடிகைகள்... அன்று முதல் இன்று வரை...!

|

இந்தி சினிமாவில் 60, 70களிலேயே ஹாலிவுட்டுக்கு நிகரான கவர்ச்சியும் தாராளமும் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டது. ஆனால், தென்னிந்திய சினிமாக்களில் யாரேனும் நடிகை மாராப்பு விலகி நடித்தாலே அவர்களை ஊரே மோசமாக பேச துவங்கிவிடும். அதுவொரு திரைப்படத்தில் தோன்றும் கதாபாத்திரம் மட்டுமே என்ற மனோபாவம் அன்று ரசிகர்கள் மத்தியில் இல்லை.

இன்றுமே, இந்த மனோபாவம் நம் மத்தியில் குறைவு தான். காரணம், நாம் சினிமா மற்றும் கிரிக்கெட் போன்ற சில துறைகளுடன் மிகவும் ஓட்டி உறவாடும் தன்மை கொண்டிருக்கிறோம். அதில் உருவாகும் ஸ்டார்களை நமது ரோல் மாடலாக, அடுத்த தலைவனாக காணும் அளவிற்கு நாம் கொஞ்சம் ஓவர் டோஸ் அடிக்ஷனில் இருப்பது ஊரறிந்த நிதர்சனம்.

தென்னிந்தியாவில் கவர்ச்சியே இல்லையா என்று சிலர் கேட்கலாம்... இருந்தது... அன்றும் அரைகுறை ஆடையுடனான நடனம், பிகினி அணிந்து திரையில் தோன்றிய நடிகைகள் இருந்தனர். உதாரணமாக கூற வேண்டும் என்றால், ஜெமினி கணேஷன், பாரதி, காஞ்சனா, முத்துராமன் நடித்த அவளுக்கென்று ஒரு மனம் படத்தின் பல காட்சிகளில் அப்போதே பிகினியை தெறிக்க விட்டிருப்பார்கள்.

அன்று முதல் இன்று வரை பிகினியில் கலக்கிய தென்னிந்திய நடிகைகளின் தொகுப்பு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மஞ்சுளா...

எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மஞ்சுளா.

#2

#2

ஸ்ரீதேவி

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை. தெனிந்தியா மட்டுமின்றி, இந்தியிலும் பெரும் நடிகை என்று பெயர் பெற்றவர். 80, 90களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமைக்குரியவர்.

#3

#3

மாதவி

17 வருடங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற ஐந்து மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்தவர் மாதவி. இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. இவர் இந்தியில் நடித்த 'ஏக் துஜே கேலியே' மற்றும் 'மரோச்சரித்திரா' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

#4

#4

அமலா

டி.ஆர்-ன் மைதிலி என் காதலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஹோம்லியான நடிகை என பெயர் பெற்ற அமலா, சத்யராஜ் உடன் நடித்த 'ஜீவா' (1988) என்ற படத்தில் சூப்பர் ஹாட் பிகினியில் தோன்றி ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தினார்.

#5

#5

சில்க் ஸ்மிதா

சில்க் குறித்து சொல்லி தான் அறிய வேண்டும் என்றில்லை. 80களில் தென்னிந்திய ரசிகர்களுக்கு கவர்ச்சி கடலாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் பெரும்பாலான படங்களில் பிகினியில் தோன்றி இருக்கிறார்.

#6

#6

மும்தாஜ்

டி.ஆர் மூலம் அறிமுகமானவர் மும்ஜாஜ். முதல் படத்தில் இருந்தே செக்ஸி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க துவங்கியவர். ஆரம்பத்தில் கவர்ச்சியில் கலக்கியவர். இப்போது தனது முதிர்ச்சியான அனுபவத்தின் மூலம் பிக் பாஸ் வீட்டை கலக்கி கொண்டிருக்கிறார்.

#7

#7

சிம்ரன்..

நெடுங்காலமாக தென்னிந்திய ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகைகள் என்ற பட்டியல் எடுத்தால், அதில் வெகு சிலரே இடம் பிடித்திருப்பார்கள். அதில் ஒருவர் சிம்ரன். ஹோம்லி, கவர்ச்சி என எந்த ரூட்டை எடுத்தாலும் அதில் கட்சிதமாக பொருந்தக் கூடிய நடிகை சிம்ரன்.

#8

#8

கிரண்

ஜெமினி, அன்பே சிவம், வில்லன் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த கிரண், வின்னர் படத்திற்கு பிறகு காணாமல் போய்விட்டார் என்றே கூறலாம்.

#9

#9

நயன்.. தாரா...

கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த பிகினியை மீண்டும் பில்லா மூலம் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த நடிகை நயன் தாரா. தொடர்ந்து ஒருசில படங்களில் இவர் பிகினியில் தோன்றி இருந்தார். இவரை தொடர்ந்து பலர் தென்னிந்தியாவில் பிகினியில் நடிக்க துவங்கினார்கள்.

#10

#10

அனுஷ்கா

தமிழ் பில்லாவில் நயன்தாரா பிகினியில் வர, தெலுங்கு பில்லாவில் அனுஷ்கா பிகினியில் களமிறங்கினார். கவர்ச்சி, நடிப்பு, திறமை, பாக்ஸ் ஆபீஸ் என அனுஷ்கா, நயன்தார தனிக்காட்டு ராணியாக தெலுங்கு, தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்கள்.

#11

#11

ப்ரியாமணி

பருத்திவீரன் மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்த ப்ரியாமணிக்கு அதற்கு அடுத்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தெலுங்கு, கன்னடம் என இவர் தொடர்ந்து நடித்து வந்தார். துரோணா என்ற படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பிகினியில் நடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

#12

#12

எமி ஜாக்சன்

மறந்துட்டியா... என்ற ஒற்றை வார்த்தை மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற நடிகை எமி ஜாக்சன். இவருக்கு பிகினி என்பது பெரிதல்ல.. லண்டனில் இவர் மாடலாக இருந்த போது, டாப்லஸ் போட்டோஷூட்டுகளில் எல்லாம் நடித்திருக்கிறார்.

#13

#13

ராய் லட்சுமி

கற்க கசடற என்ற படத்தில் லட்சுமி ராயாக அறிமுகமாகி, பிறகு ராய் லட்சுமியாக மாறியவர். ஆனால், ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இவரது கவர்ச்சியில் மட்டும் மாற்றமே இல்லை. சமீபத்தில் ஜூலி 2வில் இருந்து, இப்போது இவர் நடித்து கொண்டிருக்கும் நீயா 2 வரை கவர்ச்சியில் பஞ்சமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fashion: South Indian Actresses in Bikini Then to Now

Fashion: South Indian Actresses in Bikini Then to Now