நமக்கெல்லாம் ஒரு பிரச்சனையினா இவருக்கு என்ன பிரச்சனையினு பாருங்க!

By Staff
Subscribe to Boldsky
ஊருக்கே ஒரு பிரச்சனை.. இவருக்கு ஒரு பிரச்சனை..!!- வீடியோ

புதுவருடம் பிறந்ததிலிருந்து ஏன் அதற்கு முன்பிருந்தே பல பிரச்சனைகள் நம்மை திண்டாட வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் 2ஜி முடிவுகள், ஆர்.கே நகர் இடைத்தேர்தல், ரஜினியின் அரசியல் பிரவேசம்,ஒகி புயல் ,மீனவ மக்களின் இழப்பு, என்று 2018 பெரும் சோகத்துடனே வரவேற்க முடிந்தது.

சரி புத்தாண்டிற்கு பிறகாவது சீராகிடும் என்று நினைத்தால் நிலைமை எங்கோ சென்று கொண்டிருக்கிறது. 2017 ஜனவரியில் எழுச்சியுடன் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துடன் துவங்கியது. ஆனால் 2018 ஜனவரியிலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இம்முறை ஜல்லிக்கட்டிற்காக அல்ல போக்குவரத்திற்காக, ஆம், அரசு பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தற்காலி ஓட்டுநர்களை வைத்து திகில் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள்.

Different Looks Of Nithyanandha

Image Courtesy

ஒவ்வொரு நாளிலும் புதிது புதிதாக எதாவதொரு சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே நேரத்தில் அவை குறித்தும் அவற்றின் பின்னணி குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சம்பவம் குறித்தோ அல்லது அதன் பின்னணி குறித்து நாமும் விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இவற்றில் எதுவும் தனக்கு தொடர்பில்லை என்று ஒரு மனிதன் இந்த சமூகத்தில் வாழ்ந்திட முடியுமா? எவ்வித கவலையும் இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த சிலரில் ஒருவரை இங்கே பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

டெக்னோ சாமியார் என்று சொன்னால் தகும் தானே.... கையே மொபைல் போனுடம் அடக்க முடியாத அளவிற்கு அப்படியொரு ஆனந்தம். அவராவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று அமைதியாகிட வேண்டியது தான்.

Image Courtesy

#2

#2

எல்லாமே மேட்சிங்காக இருக்க வேண்டும் என்ற மறைமுக கட்டளை இருக்கும் போல. உடைக்கு மேட்சிங்காக தலைப்பாகை. அதிலிருக்கும் டாலர் கூட. லைட் கலரில் உடை இருப்பதால் டார்க் நிறத்தில் கழுத்துக்கான மாலையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இதில் வித்யாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக எப்போதும் ருத்ராட்சை மாலையுடன் காட்சியளிக்கும் நித்யானந்தா இந்த முறை சற்று பட்டையான வடிவத்தில் மாலை அணிந்திருக்கிறார்.

#3

#3

இது தான் நார்மல் டேஸ் கெட்டப். அள்ளி முடிந்து கொண்டை போட்டுக் கொண்டு ஒரேயொரு ருத்ராட்சை மாலையுடன் பெரும் புன்னைகையுடன்.

Image Courtesy

#4

#4

அமைதி அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி என்று நம்மை சாந்திபடுத்தும் லுக். இந்த கெட்டப் போடும் போது இளவயது என்பதால் ஃப்ரீ ஹேர் போலும்!

Image Courtesy

#5

#5

அடுக்கடுக்கான ருத்ராட்சை, புலித்தோலில் சிம்மாசனம்,கம்பீர பார்வையுடன் உட்கார்ந்திருக்கும் நித்யானந்தாவின் தலைப்பாகை தான் இதில் ஹைலைட். அருகில் அவர் படம் பொறித்த டீ கப்பும், செங்கோலும் இருப்பதை பாருங்கள்.

Image Courtesy

#6

#6

புலித்தோலை சிம்மாசனத்தில் மட்டும் ஏன் போட வேண்டும் இதோ என் உடலிலும் போட்டுப்பார்க்கிறேன் என்று களத்தில் இறங்கிய போது.

அணிந்திருக்கும் ஆடையை விட இதற்கு பலம் சேர்ப்பது கையில் பிடித்திருக்கும் மணிகள் கட்டிய கம்பும், உடலில் சுற்றிக் கொண்டிருக்கும் மணியும் தான்.

Image Courtesy

#7

#7

கைலாய மலையிலிருந்து அந்த பரமசிவனே..... இதெல்லாம் போங்கு பாஸ் என்றெல்லாம் சொல்லாமல் படத்தை மட்டும் இரண்டு நொடிகள் உற்றுப்பாருங்கள்.

Image Courtesy

 #8

#8

நாங்க அவுட்டிங் போனா கூட இந்த அவுட்ஃபிட் வோடத்தான் போவோம் மொமண்ட். ப்ளீஸ் யாரும் நித்யானந்தா அணிந்திருக்கும் செருப்பை மட்டும் கவனிக்க வேண்டாம்.

Image Courtesy

#9

#9

பலே பலே பாகுபலி..... லுக். தலைப்பாகைக்கோ ஹேர் ஸ்டைல் செய்யவோ நேரமில்லாத காரணத்தினால் இன்று ஒரு நாள் நீங்கள் இந்த கோலத்தில் தரிசிக்கலாம்.

Image Courtesy

#10

#10

மலர்களே.... மலர்களே இது என்ன கனவா என்று மனதில் பாடிக்கொண்டே இந்த படத்தை பாருங்க..... மலர் அலங்காரத்தில் காட்சி தரும் நித்யானந்தா.

மாலை அணிந்தால் மட்டும் போதாது கழுத்தில் இடம் நிறைய மிச்சமிருக்கிறதே என்று பெரிய பெரிய தங்க மாலைகளையும் சேர்த்து அணிந்திருக்கும் அழகைப் பாருங்க மக்கா.....

Image Courtesy

#11

#11

தரையில் பாய் விரித்து அதற்கு மேல் ஒரு மேடை அதற்கு மேல் சின்ன மெத்தை அதனை காவித் துணியினால் பக்காவாக க்ளோஸ் செய்து தியானம் செய்கிறார். தியானம் செய்யும் போதும் பெரிய ருத்ராட்ச மாலை அவசியம் யாராவது கெக்க பெக்கே என்று சிரித்தால் கமண்டலத்தில் இருக்கும் நீரைத் தெளித்து சாபம் அளித்து விடுவார் ஜாக்கிரதை.

Image Courtesy

#12

#12

இந்த கண் சாந்தமாகவும் பார்க்கும் கொடூரமாகவும் பார்க்கும். இப்போ லஞ்ச் டைம் இந்த கைய அன்னத்துல தான் கை வைப்பேன் என்று காண்பித்த போது.....

Image Courtesy

#13

#13

என்ன வாழ்க்கைடா என்று ஆனந்தத்துடன் கேட்ட போது..... மன்னா ஒண்ணு குறைகிறதே....

என்னா?

தலைப்பாகை....

அதான் ஹேர் ஸ்டைலையே தலைப்பாகையே மாற்றிவிட்டோமே இதற்கு மேலும் தலைப்பாகை தேவை தானா?

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

Image Courtesy

#14

#14

நித்யானந்தா மட்டுமில்ல நம்ம செல்ஃபி எடுத்தாக்கூட மூஞ்சி இப்டித் தான் இருக்கும். அதுக்குத்தான் ரொம்ப க்ளோஸப் ல வச்சு படம் பிடிக்காதீங்கனு சொல்றது. இப்ப நமக்கே பகீர்னு இருக்கா இல்லையா.

Image Courtesy

#15

#15

தீப்பிளம்பாக அவதரித்திருக்கும் நித்யானந்தா . ஒரு கையில் சவுக்கு இன்னொரு கையில் உடுக்கையுடன் கூடிய சூலாயுதம். மேக்கப் எல்லாம் ஓகே... அதென்ன உடல் முழுவதும் ஏதோ மூக்குப் பொடி டப்பா போல....

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: fashion
  English summary

  Different Looks Of Nithyanandha

  Different Looks Of Nithyanandha
  Story first published: Wednesday, January 10, 2018, 16:51 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more