For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜும்பா ஹே ஜும்பா... ஓ! ஜும்பா ஹே ஜும்பா... - இது மோடியின் அவதாரங்கள்!

இது இந்திய பிரதமரின் பல்வேறு அவதாரங்கள் - மோடியின் தீராத ஃபேஷன் தாகம்!

By Staff
|

Recommended Video

ஃபேஷன் ஃப்ரீக் மோடியின் கண்ணை கவரும் அவரதாங்கள்- வீடியோ

இந்திய பிரதமர்களில் ஃபேஷன் ஃப்ரீக் என்று வெளிப்படையாக மக்களால் கூறப்படும் ஒரே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். தான் செல்லும் இடத்தின் பாரம்பரிய உடை எதுவோ அதை ஒருமுறையாவது அணிய முயற்சி செய்திடுவார் மோடி.

Different Avatars of Indian Prime Minister Modi Ji

இப்படியாக இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சார்ந்த விதவிதமான கலாச்சார உடைகள், பழங்குடியினரின் கலாச்சார உடைகள் என யார் என்ன கூறுவார்கள் என்றெல்லாம் யோசிக்காமல் பல கெட்டப்புகள் போட்டுள்ளார்.

அதிலும், மோடிக்கு பலவிதமான முண்டாசு அணிந்துப் பார்ப்பதில் தனி மகிழ்ச்சியே இருக்கும் போல. அவர் அணியாத முண்டாசு இல்லை என்றே கூறலாம். முண்டாசில் மட்டும் பல வெரைட்டி காட்டியுள்ளார் மோடி.

இதோ! இனி, மோடியின் பல்வேறு அவதாரங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மினுமினுக்கும் வெள்ளி!

மினுமினுக்கும் வெள்ளி!

நான்கு ஆப்ரிக்கா நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றிருந்தார் பிரதமர் மோடி ஜி அவர்கள். இந்த பயணத்தின் போது இந்தியாவை ஆயுத தயாரிப்பு பற்றி எடுத்துரைத்து மோடி பேசினார் என்று அறியப்படுகிறது.

இந்த பயணத்தின் போது ஒரு நாள் மோடி அணிந்திருந்த ஜிகுஜிகு வெள்ளி ஷிம்மேரி சட்டை இதுவாகும்.

Image Source: twitter

தொப்பி!

தொப்பி!

ஜபி எனப்படும் அசாம் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பி அணிந்து மகிழ்ந்த பிரதமர் மோடி. கடந்த 2014 நவம்பர் மாதம் கவ்ஹாத்தி சென்றிருந்த போது, இந்த நிகழ்வில் இல்லீகலாக வங்காள தேசத்தில் இருந்து ஆசாம் வரும் மக்கள், வடகிழக்கு மாநிலங்களில் சேதம் உண்டாக்குகிறார்கள் என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: pinsdaddy

நாகா பழங்குடி உடை!

நாகா பழங்குடி உடை!

நரேந்திர மோடி அவர்கள் நாகா பழங்குடி மக்களின் பாரம்பரிய உடையில். இதை நாகா வட்டத்தில் இருக்கும் மக்கள் விரும்பி அணியும் தோ (Dao) எனும் பாரம்பரிய உடை ஆகும். நாகாலாந்தின் தலைநகர் கோஹிமா எல்லையில் அமைந்திருக்கும் கிஸாமாவில் ஹார்ன்பில் திருவிழாவில் கலந்துக் கொண்ட போது பிரதமர் இந்த உடை அணிந்து மகிழ்ந்தார்.

Image Source: twitter

தங்கமே தங்கம்!

தங்கமே தங்கம்!

ஹிமாலயாவில் இருக்கும் ஒரு உயர்ந்த பாலைவன பகுதியாகம் லெஹ் (Leh). இங்கே நிம்மோ பாஸ்கோ ஹைட்ரோ பவர் திட்டம் துவக்க சென்றிருந்தார். கார்கில் போருக்கு பிறகு இந்த இடத்திற்கு செல்லும் முதல் பிரதமர் எனும் பெருமையும் பெற்றார் மோடி. இது மிகவும் சென்ஸிடிவான இடமாக கருதப்படுகிறது. 1999ல் பாகிஸ்தான் இராணுவ படை தாக்குதலின் போது இரு நாட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

Image Source: twitter

ராஜாதி ராஜா!

ராஜாதி ராஜா!

பிரதமர் மோடி தலையில் அணிந்திருப்பது விளையாட்டு பொருள் அல்ல. அது ஒருவகையான மகுடம் ஆகும். இது அருணாச்சல் பிரதசதின் தலைநகர் இடாநகரில் (Itanagar) 29வது ஸ்டேட்ஹூட் நாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட போது இந்த மகுடம் அணிந்து சென்றார். தனது ஆட்சிக் காலத்தில் இது தான் மோடி அருணாச்சல் பிரதேஷம் முதல் முறையாக சென்ற நிகழ்வாகும்.

Image Source: pagalparrot

முண்டாசு பாண்டியரே!

முண்டாசு பாண்டியரே!

தனது 63வது பிறந்தநாள் நிகழ்வில், தலையில் வெள்ளிநிற பெரிய முண்டாசு அணிந்த கெட்டப்பில் இந்திய பிரதமர் மோடி அவர்கள்.

பிறந்தநாள் கொண்டாட்டம்!

பிறந்தநாள் கொண்டாட்டம்!

தனது 63வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் மோடி. இது காந்திநகரில் 2013 ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இது தலையில் கட்டப்படும் பாரம்பரிய முண்டாசு எனப்படுகிறது.

Image Source: pinterest

பஞ்சாப் சிங்!

பஞ்சாப் சிங்!

பிப்ரவரி 23, 2014 அன்று பஞ்சாப் மாநிலத்தின் லுதினியா மாவட்டத்தின் ஜாக்ரோன் டவுன் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பஞ்சாப் சிங் அணியும் டர்பன் அணிந்து பிரதமர் மோடி அவர்கள் பங்கெடுத்துக் கொண்ட போது.

Image Source: punjabi.dailypost

மயிலு!

மயிலு!

இந்திய தேசிய பறவையான மயில் தோற்றத்தில், வெள்ளி கொண்டு தோகை அலங்காரம் செய்யப்பட்ட மின்னும் டர்பன் அணிந்து விழா ஒன்றில் மோடி அவர்கள் கலந்துக் கண்ட போது.

Image Source: wallpapersw

அதி பழங்குடி!

அதி பழங்குடி!

அருணாசல பிரதேசத்தை சேர்ந்த அதி எனும் பழங்குடி மக்கள் அணியும் பாரம்பரிய உடை மற்றும் டர்பன் உடையுடன் பிரதமர் மோடி ஜி, ஒரு நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட போது. இது பிப்ரவரி 22, 2014ல் அருணாசல பிரதேசத்தின் பசிகாத் எனும் இடத்தில் எடுக்கப்பட்ட படமாகும்.

Image Source: tecake

நமோ - நமஹா!

நமோ - நமஹா!

அம்ரிஸ்டர் தங்க கோவிலில் அவரது பாரம்பரிய காவி உடையில் இந்திய பிரதமர் மோடி சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படமாகும். இதை யாரும் மாண்புமிகு இந்திய பிரதமர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் என்று கருதிவிட வேண்டாம். அவர் மெய்மறந்து கடவுளை தொழுதுக் கொண்டிருந்த போது போட்டோகிராபர் எடுத்த படம் இதுவாகும்.

Image Source: pagalparrot

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Avatars of Indian Prime Minister Modi Ji

Did You Ever Noticed His Fashion Desire? Here it is a Different Avatars of Indian Prime Minister Modi Ji.
Desktop Bottom Promotion