ஈஷா குப்தாவின் மேற்கத்திய தோற்றத்திற்கு நேர் எதிரான இண்டோ-வெஸ்டர்ன் தோற்றம்!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஈஷா குப்தாவின் இரண்டு வெவ்வேறு தோற்றங்களினால் ஏற்பட்ட ஆடை மோதலை நாங்கள் பார்த்தோம். ஒரு முறை துடுக்கான மேற்கத்திய பயண தோற்றத்தில் அவர் ஆளுமை செய்வதை கண்ட நாங்கள், மறுமுறை அவரை இண்டோ-வெஸ்டர்ன் தோற்றத்தில் கண்டோம். அவர் மிகவும் அழகாகவும், ஸ்டைலாகவும் காட்சியளித்தார். ஈஷா குப்தாவின் எந்த தோற்றம் மிகவும் எடுப்பாக இருந்தது என்று இப்போது கூற வேண்டியது நீங்கள் தான்.

1. ஈஷா குப்தாவின் பயண தோற்றம்

Esha Gupta's Western look

ஸ்டைல் - மேற்கத்திய ஸ்டைல்

வகை - சன்ஷைன் டேன்க் வகை மேலாடை மற்றும் டெனிம் பேன்ட்

நிறம் - மஞ்சள் மற்றும் ஊதா

இடம் - விமான நிலையம்

மஞ்சள் நிற சன்ஷைன் டேன்க் வகை டாப் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து ஈஷா குப்தாவை கண்டோம். அவர் மிகவும் அழகாக தென்பட்டார். அவருடைய பயண தோற்றம் மிகவும் துடுக்காக இருந்தது. பழுப்பு நிற கௌபாய் பூட்ஸ் அணிந்து தன் தோற்றத்தை முழுமையாக்கினார். உங்களுக்கு பிடித்துள்ளதா?

2. ஈஷா குப்தாவின் இண்டோ-வெஸ்டர்ன் தோற்றம்

Esha Gupta's Indo-Western Look

ஸ்டைல் - இண்டோ-வெஸ்டர்ன்

வகை - முன்பக்கம் திறக்கக்கூடிய சல்வார் / ட்யூனிக் வகை உள்சட்டை

நிறம் - வெளிரிய பழுப்பு வண்ணம்

இடம் - ஹ்ரித்திக் ரோஷனுடைய தீபாவளி பார்ட்டி

வாவ்! ஹ்ரித்திக் ரோஷனுடைய தீபாவளி பார்ட்டியில் எடுத்த ஈஷா குப்தாவின் புகைப்படம் இது. வெளிரிய பழுப்பு நிறத்தில் தரையை தொடக்கூடிய நீளத்தில் முன்பக்கம் திறக்கக்கூடிய சல்வார்/ட்யூனிக் வகை உள்சட்டையை அவர் அணிந்து காணப்பட்டார். முன்பக்கம் திறக்கக்கூடிய சல்வாரில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தது. இதில் அலங்காரம் குறைவாகவே இருந்தது. இவருடைய இந்தோ-வெஸ்டர்ன் தோற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 Esha Gupta's Western Versus Indo-Western Look

வாசகர்களே, இது உங்களது நேரம்... உங்களுக்கு பிடித்துள்ளது ஈஷா குப்தாவின் துடுக்கான பயண தோற்றமா அல்லது இண்டோ-வெஸ்டர்ன் தோற்றமா? உங்களது கருத்துக்களை கீழே பகிரலாம்.

English summary

Celebrity Wardrobe Clash: Esha Gupta's Western Versus Indo-Western Look

Esha Gupta was wearing western & indo-western attire at airport & diwali party. Yellow tank top with denim & front open salwar were her look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter