Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
காதணி செலக்ட் செய்வதற்கு முன்னால் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியான முக அமைப்பு இருக்கும் அதற்கு ஏற்றார் போல எப்படி காதணியை தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும் குழப்பமே ஏற்படும். இதனை தீர்க்க, உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு காதணிகளை ஏற்ற
என்னதான் அழகான ஆடைகளை அணிந்தாலும், அதற்க்கேற்ற நகைகள் அணிந்தால் தான் கச்சிதமாக இருக்கும். அதுவும் காதணி செலக்ஷன் ரொம்பவே கஷ்டம். அதற்கு நிறைய மெனக்கடல்கள் தேவை தோடு, பார்த்தவுடன் தெரிவதால் மட்டுமல்ல,முகத்தை அழகு மிளிர எடுப்பாய் காண்பிக்கும் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியான முக அமைப்பு இருக்கும் அதற்கு ஏற்றார் போல எப்படி காதணியை தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும் குழப்பமே ஏற்படும். இதனை தீர்க்க, உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு காதணிகளை ஏற்றவாறு தோடுகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதற்கான சூப்பர் டிப்ஸ் இங்கே....

முக அமைப்பை எப்படி கண்டறிவது?
சிலருக்கு முகம் என்ன வடிவில் இருக்கிறது என்பதை கண்டறிவதில் சிரமமிருக்கும். மற்றவர்களிடம் ஆலோசனைக்கேட்டால் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வடிவங்களின் பெயர்களைச் சொல்லி இன்னும் குழப்பி விடுவர். இதனை தவிர்க்க, கண்ணாடி முன்பாக நின்று லிப்ஸ்டிக்கால் உங்களின் முகத்தை பார்டர் போல கண்ணாடியில் வரைந்து பாருங்கள். இப்போது உங்கள் முகம் என்ன வடிவம் என்பதை துல்லியமாக நீங்களே கண்டுபிடித்து விடலாம்.

ஓவல் வடிவிலான முகம் :
இவ்வகை முக அமைப்பு உள்ளவர்கள் லக்கி என்றே சொல்ல வேண்டும்.ஏனென்றால், இவர்களுக்கு எந்தமாதிரியான தோடு போட்டாலும் எடுப்பாய் தெரியும். காதை ஒட்டிய சிறிய தோடும் சற்றே பெரிய தொங்கட்டானும் இவர்களுக்கு அழகாக இருக்கும்.

நீளமுகம் :
நீளமான முக அமைப்பு உள்ளவர்கள் ரவுண்ட் வடிவிலான வளையங்களை அணியலாம்
இவை நீளமான உங்கள் முகத்தை சற்றே அகலமாக காட்டும் என்பதால் இது பெஸ்ட் சாய்ஸ் .

வட்ட வடிவிலான முகம் :
இவர்கள் முகத்தின் நீளமும் அகலமும் ஒரே அளவில் இருக்கும். இவர்கள் பெரிய அளவில்
மெனக்கெட தேவையில்லை. தொங்கட்டான் அல்லாது காதையொட்டிய சிறிய அளவிலான தோடு அணிந்தாலேஎடுப்பாய் தெரியும்.

இதய வடிவிலான முகம் :
இவர்களுக்கு நெற்றி பெரிதாகவும் கன்னம் சிறிதே ஒடிசலாக காணப்படும். இவ்வகை முக அமைபு உள்ளவர்கள் சிறிய தொங்கட்டான்களை அணியலாம்.

சதுரவடிவிலான முகம் :
இவர்கள் காதையொட்டிய வட்டவடிவிலான தோடுகளை அணியலாம். இவை நீளமான உங்கள்
கன்னப்பகுதியை சற்றே அகலமாக காட்டும்.

டைமண்ட் வடிவிலான முகம் :
மிகவும் அரிதான முக அமைப்பு இது. இவர்கள் நீளமான தொங்கட்டான்களை அணியலாம்.
அடர்த்தியான செயின்கள் தொங்கும் டிசைன்கள் இவர்களுக்கு எடுப்பாய் தெரியும்.



Click it and Unblock the Notifications
