For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனுஷ்கா ஷர்மா தெரிந்தே தான் இந்த நிறத்தை தேர்ந்தெடுத்தாரா!

இந்த ஆண்டு உடைகளில் எது ட்ரெண்ட் என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு எல்லாரிடத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எதிர்ப்பார்ப்பு கூடிக் கொண்டே தான் இருக்கிறது. இதோ 2017 ஆம் ஆண்டு ட்ரெண்ட்டான ஆடைகள்

|

ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாய் பல ட்ரண்ட் உருவாகி வருகிறது. மக்கள் மத்தியில் சில உடைகள் வரவேற்ப்பை பெறுவதும், சில வந்த இடம் தெரியாமல் ஓடுவதும் உண்டு. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துவங்கிய புத்தாண்ட்.... பல நினைவுகளை நிரப்பி விட்டு இதோ இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது. அரசியல், சினிமா, செய்திகள்,மனிதர்கள் என எண்ணற்ற நிகழ்வுகளை நிகழ்த்தி விட்டுச் செல்லும் இந்த நேரத்தில் 2017 ஆம் ஆண்டு ட்ரெண்டான சில ஆடைகளைப் பற்றிய ஒரு தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலம்காரி:

கலம்காரி:

2017 ஆம் ஆண்டின் டாப் ட்ரெண்ட் இந்த கலம்காரி தான். இதில் வருகின்ற டிசைன்களை ப்ளாக் பிரிண்ட் மற்றும் பெயிண்டிங் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது . இதன் டிசைன்கள் பண்டைய கால முறைப்படி அதன் வடிவமைப்புகளை கொண்டிருப்பதால் இன்றைய பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

அதை விட அவர் விரும்பங்களுக்கு ஏற்ப சேலை,சுடிதார், டாப் என பெண்கள் விரும்பி அணியும் எல்லா உடைகளிலும் கலம்காரி டிசைன் ப்ரிண்ட் செய்திருக்கிறார்கள்.

ஷர்க் :

ஷர்க் :

காலேஜ் செல்லும் பெண்கள் மத்தியில் பிரபலமான ஃபேஷன் என்றால் அது இது தான். வழக்கமாக நீங்கள் அணிந்திடும் ப்ளைன் டிரஸ் மற்றும் பேட்டர்ன் டிசைன் கொண்ட டிசைன் இருந்தால் லாங் ஷர்க் போட்டுப் பாருங்கள் உங்களுக்கு டாப் லுக் கிடைத்திடும்.

ஷர்ட்,டீ ஷர்ட்,குர்த்தா என எந்த உடை அணிந்தாலும் லாங் ஷர்க் பயன்படுத்தலாம்.

டூனிக் :

டூனிக் :

இந்த உடை பார்க்க ப்ளைன் குர்த்தா போலத்தான் இருக்கும். ஆனால் உள்ளே ஸ்பகெட்டி அல்லது ப்ளைன் டீ ஷர்ட்டுடன் இதைப் போட்டால் சூப்பர் டூப்பர்.

இது பெரும்பாலும் ப்ளைன் உடையாகத்தான் இருக்கும். இது எளிமையாக இருந்தாலும் பார்க்க எலகெண்ட் லுக் கொடுக்கும்.

க்ராப் டாப் :

க்ராப் டாப் :

இண்டோ-வெஸ்டர்ன் உடைகள் இரண்டிலும் பல டிசைன்களில் வெளிவந்த கிராப் டாப், இந்த ஆண்டில் அதிகம் விற்பனையான உடை. இது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பொருந்தாது.ஒல்லியாக இருப்பவர்கள் இதனை உடுத்திக் கொண்டால் கிராண்ட் லுக் கிடைக்கும்.

இதற்கு மேட்சாக ஸ்கர்ட், பலாசோ பேன்ட், ஜீன்ஸ் உடுத்தலாம்.

ஜம்ப் ஷூட் :

ஜம்ப் ஷூட் :

கழுத்திலிருந்து கால் வரை ஒரே ஆடையாக இருக்கும். ப்ளவுஸுக்கான துணி மற்றும் பேண்ட்டினை இணைத்து கழுத்திலிருந்து கால் வரை ஒரே உடை வந்திருக்கும்.

சிலவற்றில் பெல்ட் கூட இருக்கும். மிகவும் எளிமையான டிசைன் முதல் ஹெவி டிசைன் வரை பல வெரைட்டிக்கள் இதில் கிடைக்கின்றன. அதோடு இந்த ஆடையின் கழுத்து பேட்டர்ன் பல விதங்களில் கிடைக்கிறது.

விண்வெளி வீரர்கள் :

விண்வெளி வீரர்கள் :

இந்த ஜம்ப் ஷூட் உடை முதலில் யார் பயன்படுத்தினார்கள் என்று தெரியுமா? இது போன்ற உடைகளை முதலில் பாராசூட்களில் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு விமானஓட்டிகள், விண்வெளி வீரர்கள் ஆகியோர் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

குறிப்பாக அதிக உயரத்தில் பணியாற்றும் நபர்களுக்கான உடையாக இது இருந்தது. அதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி சில மாற்றங்களை செய்து இன்று நாம் அனைவரும் பயன்படுத்திடும் ஒர் உடையாக மாறிவிட்டிருக்கிறது.

சாலிட் சாரீ :

சாலிட் சாரீ :

ப்ளைன் சாரி.... அதற்கு மேட்சிங்காக அதன் காண்ட்ராஸ்ட் நிறத்தில் ப்ளவுஸ். பார்க்க கிளாசிக்கல் லுக் கிடைக்கும். சிம்பிளாக இருந்தாலும் இது கல்லூரிப் பெண்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. கடந்த வருடம் குட்டிப் பூக்கள் நிறைந்த சேலை ஃபேஷன், 2017ல் இந்த சாலிட் சாரீ...

ஜோ பிங்க் :

ஜோ பிங்க் :

சூர்யா ஜோதிகா... திருமணமான புதிதில் எல்லாரும் ஒரு நிறத்தை பயித்தியமாக லயித்து அணிந்தார்கள். சேலை, சுடிதார், டாப்ஸ் என பெண்களுக்கான உடைகள் எல்லாமே அந்த நிறத்திலேயே தொடர்ந்து வந்தது.

ஏன் இன்று வரை பட்டுச் சேலை.... என்றால் தேர்ந்தெடுக்கிற ஒரு நிறம் பிங்க் அதிலேயே குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் இன்று வரை பலரும் ‘ஜோ பிங்க்' என்று தான் சொல்கிறோம்.

அந்த அளவிற்கு ஜோதிகாவின் திருமண நாள் சேலை பிரபலம். அதே போல இந்த வருடம் ஃபேமஸானது விருஷ்கா கலர்.

விருஷ்கா கலர் :

விருஷ்கா கலர் :

விராத் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா திருமணத்தில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த ஆடையிது. எந்த நிறம் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஒரு மாதிரியான வெள்ளை நிற ஷேடுடன் மல்டிகலர் டிசைன் இருக்கும். இந்த நிறம் தான் இந்த ஆண்டின் ட்ரெண்டிங் கலர் என்றே சொல்லலாம்.

டார்க் நிறத்துடன் வெள்ளை நிறம் சேர்த்தால் கிடைக்கிற ஒரு லைட் ஷேட் தான் இதற்கான அடிப்படை. இதில் அணியும் கிராண்ட் லுக் கொண்ட ஆடைகள் தனி அழகு சேர்த்திடும்.

கோல்ட்-ஷோல்டர் :

கோல்ட்-ஷோல்டர் :

ஸ்லீவ்லெசும் இல்ல, ஃபுல் ஸ்லீவும் இல்ல, என்ன வகை டிரஸ் இதுனு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கும். அவை கோல்ட்-ஷோல்டர் உடைகள்.

முழு நீளச் சட்டைகளில் தோள்பட்டைப் பகுதியில் ஓப்பன் இருக்கும். ஃபுல் டிரஸ், டீ-ஷர்ட், ஷர்ட், டாப், குர்த்தா என எல்லா வகை உடைகளிலும் இந்த கோல்ட்-ஷோல்டர் ஸ்லீவை பொருத்தி பெரிய ட்ரெண்ட் ஆனது.

போன்ச்சோ :

போன்ச்சோ :

லெஹெங்கா, கவுன், டாப் போன்றவைகளில் ஸ்லீவ்களுக்குப் பதிலாக, எம்ப்ராய்டரி போன்ற கூடுதல் வேலைப்பாடுகள் நிறைந்த தனிப்பகுதியை, தோள்பட்டை முதல் இடை வரை நீண்டு அமைக்கப்படும் உடைதான் போன்ச்சோ. சில நேரங்களில் இது வேலைப்பாடு ஏதுமின்றி ப்ளைனாகவும் கிடைக்கிறது.

ஃப்ரண்ட் ஸ்லிட் :

ஃப்ரண்ட் ஸ்லிட் :

முன்பெல்லாம் சல்வார் கமீஸ்களில் இருபக்க முடிவில்தான் சைட் ஓபன் இருக்கும். ஆனால், இப்போதைய ட்ரெண்ட் என்ன தெரியுமா? முன்னால் இருப்பது. அதனைத் தான் ஃப்ரண்ட் ஸ்லிட் என்கிறார்கள்.

இது ட்ரடிஷனல் மற்றும் வெஸ்ட்டர்ன் இரண்டு வகையான உடைகளிலும் இருக்கிறது. ஜின்ஸுடன் கூட இதை அணியலாம்.

இரண்டும் காண்ட்ராஸ்ட் கலரில் இருந்தால் பார்க்க அழகாக தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion dress celebrities
English summary

2017 Top Trending Fashion Dress

2017 Top Trending Fashion Dress
Story first published: Thursday, December 21, 2017, 17:22 [IST]
Desktop Bottom Promotion