Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பிற்கு செக்ஸியான லெஹெங்காவில் வந்த தமன்னா!
Anant-Radhika's Wedding Reception: உலகமே வியந்து பார்க்கும் வகையில் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தியுள்ளார். இந்த திருமணத்திற்கு பிற நாட்டு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, ஏராளமானோரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு 6 மாதத்திற்கு முன்பிருந்தே இந்த திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திருமணம் முடிந்து 2 நாட்கள் வரை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதில் ஜூலை 12 ஆம் தேதி ஆனந்த்-ராதிகாவின் திருமணம் நடைபெற்றது. அதற்கு மறுநாள் ஜூலை 13 ஆம் தேதி சுப ஆசிர்வாத் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை 14 ஆம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த மூன்று நாட்களும் ஒரு பண்டிகை போன்று மும்பை ஜொலித்தது.

இந்த அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவருமே பல அழகான ஆடைகளை அணிந்து வந்தனர். அதில் நடிகை தமன்னா ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமண வரவேற்பிற்கு அழகான மற்றும் செக்ஸியான கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த லெஹெங்காவில் வந்திருந்தார். தமன்னா அணிந்து வந்த லெஹெங்காவை வடிவமைத்தவர் 'டோரனி'. இந்த லெஹெங்காவின் விலை சுமார் ரூ. 3.85 லட்சமாகும்.
தமன்னா அணிந்து வந்த லெஹெங்காவின் பெயர் 'பத்ரா நலிகா லெஹெங்கா' ஆகும். இந்த லெஹெங்காவில் தமன்னா ஒரு தேவதை போன்று இருந்தார் எனலாம். இவர் அணிந்து வந்த லெஹெங்காவில் மிகவும் சிக்கலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டீப்-லோ நெக் கொண்ட இந்த லெஹெங்காவின் ஜாக்கெட் மற்றும் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துப்பட்டாவை அணிந்து வந்த விதம் இவரை கவர்ச்சிகரமானதாக வெளிக்காட்டியது.
முக்கியமாக அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இந்த லெஹெங்காவிற்கு தமன்னா கழுத்தில் ஆபரணங்கள் அதிகம் அணியாமல் காதுகளில் ஜமிக்கையையும், நெற்றியில் நெற்றிச்சுட்டியையும் மட்டும் அணிந்து வந்தது, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளது.
தமன்னா பாட்டியா நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர். எந்த ஒரு நிகழ்ச்சி அல்லது விழாக்களில் கலந்து கொண்டாலும், அனைவரது பார்வையையும் ஈர்க்கும்படியான உடையில் வந்து அசத்துவார். அதேப் போன்று தான் அம்பானி வீட்டு திருமண வரவேற்பிலும் வந்து, அனைவரது பார்வையையும் கவர்ந்துள்ளார். உங்களுக்கு தமன்னாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?
Image Courtesy: Twitter



Click it and Unblock the Notifications

