Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2023 சைமா விருது விழாவிற்கு கண்கவர் ஆடைகளை அணிந்து சும்மா நச்சுன்னு வந்த நடிகைகள்!
SIIMA Awards 2023: ஒவ்வொரு ஆண்டும் சைமா விருது விழா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான சைமா விருதுகளின் 11 ஆவது பதிப்பு துபாயில் உள்ள துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதி நடந்தது.
இந்த விருது விழாவில் நடிகர் நடிகைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் நடிப்பை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு துபாயில் நடந்த விருது விழாவில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அதுவும் நடிகை த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ஸ்ருதி ஹாசன், அதிதிசங்கர், ஸ்ரேயா சரண், ஜோனிடா காந்தி போன்றோர் மிகவும் அழகான ஆடைகளை அணிந்து, சைமா விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடந்தனர். இந்த சிவப்பு கம்பளத்திற்கு த்ரிஷா மற்றும் ஸ்ருதி ஹாசன் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தனர். நடிகை கீர்த்தி சுரேஷ் நீல நிற ஜம்ப்சூட் அணிந்து வந்திருந்தார்.
மேலும் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் சைமா விருது விழாவில் கலந்து கொண்டார். இப்போது 2023 சைமா விருது விழாவில் கலந்து கொண்ட நடிகைகளின் சில போட்டோக்களை காண்போம்.
கருப்பு நிற உடையில் த்ரிஷா
நடிகை த்ரிஷா கருப்பு மற்றும் சில்வர் நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் த்ரிஷா க்யூட்டாக தேவதைப் போன்று இருந்தார். அதுவும் இந்த உடைக்கு த்ரிஷா மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.
நீல நிற உடையில் கீர்த்தி சுரேஷ்
2023 சைமா விருது விழாவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் கண்ணைப் பறிக்கும் நீல நிற ஜம்ப்சூட் அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். முக்கியமாக இந்த உடைக்கு இவர் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்திருந்தார்.
கருப்பு நிற உடையில் ஸ்ருதி ஹாசன்
2023 சைமா விருது விழாவில் நடிகை ஸ்ருதி ஹாசனும் கலந்து கொண்டார். அவர் கருப்பு நிற புடவை அணிந்து, மேலே மின்னும் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தது அற்புதமாக இருந்தது. இந்த உடைக்கு ஸ்ருதி சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். மேலும் கைகள் மற்றும் கழுத்தில், புடவைக்கு பொருத்தமான ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார். நடிகர் கமல்ஹாசனும் மகளுக்கு ஏற்றவாறு கருப்பு நிற கோட்சூட்டில் விருது வாங்க வந்திருந்தார்.
அதிதி சங்கர்
பிரபல இயக்குனரின் மகளும், நடிகையுமான அதிதி சங்கரும் சைமா விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் வெளிரிய ப்ரௌன் நிற ஸ்லீவ்லெஸ் லாங் கவுன் அணிந்து வந்திருந்தார்.
கல்யாணி பிரியதர்ஷன்
நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் சைமா விருது விழாவில் கலந்து கொண்டார். இவர் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் சைடு தை ஹை ஸ்லிட் கவுனை அணிந்து வந்திருந்தார். இது நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து அரட்டை அடிக்கும் போது எடுத்த போட்டோ.
Image Courtesy: Twitter



Click it and Unblock the Notifications




