Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Rashmika Mandanna Birthday: புடவையில் கிறங்க வைக்கும் ராஷ்மிகா மந்தனாவின் சில போட்டோக்கள்!
Rashmika Mandanna Birthday Special: தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர், தான் 'ரெயின்போ' என்னும் ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் திரைப்படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 07 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா ஏப்ரல் 05 ஆம் தேதி, அதாவது இன்று தனது 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராஷ்மிகா மந்தனா எத்தனை திரைப்படங்கள் நடித்திருந்தாலும், கீதா கோவிந்தம் என்னும் தெலுங்கு திரைப்படம் இவரை மிகவும் பிரபலமாக்கியது. அதன் பின் அவர் புஷ்பா என்னும் திரைப்படத்தில் நடித்து, ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

தென்னிந்திய நடிகையான ராஷ்மிகாவிற்கு அனைத்துவிதமான ஆடைகளுமே பொருந்தும். குறிப்பாக இவர் புடவையில் மிகவும் அழகாகவும், லட்சணமாகவும் இருப்பார். இன்று நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால், புடவையில் கிறங்க வைக்கும் இவரது சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் உங்களுக்கு ராஷ்மிகாவின் எந்த லுக் பிடித்துள்ளது என்பதை சொல்லுங்கள்.
சிவப்பு நிற புடவையில் ராஷ்மிகா
இது ஃபோட்டோ சூட்டிற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா கோல்டன் பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவையை அணிந்திருந்த போது எடுக்கப்பட்டது. இந்த புடவைக்கு ராஷ்மிகா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தது, அவரது அழகை இன்னும் மேம்படுத்திக் காட்டியது. மேலும் இந்த புடவைக்கு ராஷ்மிகா ஆபரணங்கள் அதிகம் அணியாமல், காதுகளுக்கு மட்டும் பெரிய வைர காதணியை அணிந்து, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டிருந்தது, இவரது தோற்றத்தை இன்னும் அழகாக காட்டியது.
வெள்ளை மற்றும் கோல்டன் எம்பிராண்டரி புடவையில் ராஷ்மிகா
விருது விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, ராஷ்மிகா இந்த வெள்ளை மற்றும் கோல்டன் எம்பிராய்டரி புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு குட்டை கை கொண்ட பச்சை நிற எம்பிராய்டரி ஜாக்கெட் அணிந்து, காதுகளுக்கு மட்டும் காதணியை அணிந்து, வேறு எந்த ஆபரணங்களும் அணியாமல் சிம்பிளாக இருந்தது, இவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
அடர் சிவப்பு நிற ஜார்கெட் புடவையில் ராஷ்மிகா
இது சுல்தான் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, அடர் சிவப்பு நிற ஜார்கெட் புடவையில் ராஷ்மிகா வந்த போது எடுத்தது. இந்த புடவைக்கு இவர் சிங்கிள் ஸ்ட்ராப் கொண்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கழுத்தில் கற்கள் பதிக்கப்பட்ட சோக்கர் மற்றும் அதற்கு மேட்ச்சான காதணியை அணிந்து வந்திருந்தது, இவரது அழகை கூட்டி காண்பித்தது.
சந்தன நிற ஆர்கன்சா புடவையில் ராஷ்மிகா
இது ராஷ்மிகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது சந்தன நிற ஆர்கன்சா புடவையை அணிந்து வந்திருந்த போது எடுத்தது. இந்த புடவைக்கு இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். அதோடு இந்த புவைக்கு இவர் அணிந்திருந்த ஆபரணங்கள், இவரது அழகை மேம்படுத்திக் காட்டியது. உங்களுக்கு ராஷ்மிகாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?
சீக்வின் புடவையில் ராஷ்மிகா
இது ராஷ்மிகா மந்தனா விருது விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, சீக்வின் ட்ரான்ஸ்பரண்ட் புடவையை அணிந்து வந்திருந்த போது எடுத்தது. இந்த புடவைக்கும் இவர் செக்ஸியான தோற்றத்தைத் தரக்கூடிய அழகான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து வந்திருந்தார். முக்கியமாக இந்த புடவைக்கு ஏற்றவாறு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் பிற ஸ்டைல்கள் இவரது தோற்றத்தை மேம்படுத்திக் காட்டியது என்றே கூற வேண்டும்.



Click it and Unblock the Notifications




