Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு ஹாட்டான மஞ்சள் நிற லெஹெங்காவில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா..!
Priyanka Chopra at Anant Ambani Radhika Merchant's Wedding: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தன்னை விட குறைந்த வயதுடைய பாப் பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார். தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் நேற்று கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் இந்திய பாரம்பரியத்தை வெளிக்காட்டும் ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனால் இத்திருமணத்தில் கலந்து கொண்ட இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் இந்திய பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்தனர்.

அதில் நடிகை பிரியங்கா சோப்ரா டிசைனர் தருண் தஹிலியானி டிசைன் செய்த மஞ்சள் நிற லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார். இந்த லெஹெங்காவின் 3டி எம்பிராய்டரி பூக்கள் மற்றும் இதழ்களும் டிசைன் செய்யப்பட்டிருந்தன. அதே வேளையில் பாடகர் நிக் ஜோனஸ் பவுடர் பிங்க் ஷெர்வானியுடன், பிங்க் நிற மொஜாரிகள் மற்றும் ப்ரோச் அணிந்து வந்திருந்தார்.
நடிகை பிரியங்கா சோப்ராவின் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் குறித்து கூற வேண்டுமானால், பிரியங்கா சோப்ரா இந்த லெஹெங்காவிற்கு ஆபரணங்கள் எதுவும் அதிகம் அணியவில்லை. மாறாக சிம்பிளான மற்றும் அழகை தோற்றத்தைப் பெற வைர நெக்பீஸ் மட்டும் அணிந்து, அழகான பிரேஸ்லெட்டை கையில் அணிந்திருந்தார். இவர்கள் இருவரும் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு இனிமையான தருணத்தை படம்பிடித்தனர். அதை நிக் ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் கலந்து கொண்ட போது, பிரியங்கா சோப்ரா பாடல் ஒன்றிற்கு குத்தாட்டமும் போட்டுள்ளார். இந்த திருமண விழாவில் பிரியங்கா சோப்ரா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. நீங்கள் பிரியங்கா சோப்ராவின் அந்த நடன வீடியோவை பார்க்காவிட்டால், இதோ உங்களுக்காக!
முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அழகான பல இந்திய பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்து முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தை ஜொலிக்க வைத்தனர்.



Click it and Unblock the Notifications