Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பொன்னியின் செல்வன் 2 புரோமோசனுக்கு பல க்யூட்டான உடைகளில் வந்து கிறங்க வைத்த த்ரிஷா!
Ponniyin Selvan 2: இன்னும் ஓரிரு நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம் 2 வெளிவரவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் புரோமோசனுக்காக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்றோர் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார்கள்.
இந்த ஒவ்வொரு புரோமோசனிலும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா, பல அட்டகாசமான உடைகளில் வந்து பலரையும் கிறங்க வைத்தார். 39 வயதாகியும் த்ரிஷா இன்னும் இளமை குறையாத தோற்றத்துடன், சொல்லப்போனால் இன்னும் அழகு மெருகேறி க்யூட்டாக காணப்படுகிறார்.

ஏனெனில் இந்த பொன்னியின் செல்வன் புரோமோசனில் இவரைக் காணும் போது, ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இவரது அழகை கண்டு வியந்தனர். அந்த அளவில் நடிகை த்ரிஷா வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத அளவில் அழகாக இருந்தார்.
மேலும் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் மிகவும் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த விருது விழாவிற்கு வரும் போதும், த்ரிஷா வேற லெவலில் வந்து அனைவரையும் கவர்ந்தார்.
கீழே பொன்னியின் செல்வன் நடிகை த்ரிஷாவின் சில அசத்தலான மற்றும் க்யூட்டான போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களுக்கு த்ரிஷாவின் எந்த லுக் பிடித்துள்ளது என்று சொல்லுங்கள்.
இது பொன்னியின் செல்வன் 2 புரோமோசனுக்காக ஒரு விருது விழாவில் கலந்து கொள்ளும் போது த்ரிஷா மேற்கொண்ட ஸ்டைல். த்ரிஷா இந்த வெள்ளை நிற கவுனில் தேவதைப் போன்று மிகவும் அழகாக உள்ளார் என்றே கூறலாம். அதுவும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப், ஹேர் ஸ்டைல், ஆபரணங்கள் அனைத்தும் இவரது அழகை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.
இது சமீபத்தில் நடந்த பிகைண்ட்வுட் கோல்ட் விருது விழாவிற்கு த்ரிஷா மேற்கொண்டு வந்த ஸ்டைல். இந்த விருது விழாவில் இவர் PS1-ல் சிறப்பாக நடித்ததற்காக பிகைண்ட்வுட்டின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். த்ரிஷா இந்த மெருன் நிற உடையில் பொறாமை படும் அளவில் க்யூட்டாக இருந்தார்.
இது பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர் வெளியீட்டின் போது த்ரிஷா மேற்கொண்டு வந்த ஸ்டைல். எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இந்த நீல நிற சில்க் புடவையில் த்ரிஷா தேவதை போன்று காணப்பட்டார். த்ரிஷா அணிந்து வந்த இந்த புடவையின் விலை 1.30 லட்சம் தெரியுமா? ஆனால் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு ஏற்ற உடை தான்.
இது சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த பொன்னியின் செல்வன் 2 செய்தியாளர் சந்திப்பிற்கு த்ரிஷா வந்த போது எடுத்தது. த்ரிஷா இந்த சந்தன நிற உடையில் மிகவும் அழகாக பெண்களே பொறாமை படும் வகையில் க்யூட்டாக இருந்தார்.
இது கோயம்புத்தூரில் பொன்னியின் செல்வன் 2 புரோமோசன் நிகழ்ச்சிக்கு த்ரிஷா மேற்கொண்டு வந்த ஸ்டைல். இந்நிகழ்ச்சிக்கு த்ரிஷா நீல நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட அனார்கலி சூட்டில் வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு அழகாக கொண்டை போட்டு, மல்லிகைப் பூ வைத்து, பிங்க் லிப்ஸ்டிக் போட்டு வந்தது, இவரை இன்னும் சிறப்பாக காட்டியது.
இது டெல்லியில் நடந்த பொன்னியின் செல்வன் 2 புரோமோசன் நிகழ்ச்சிக்கு த்ரிஷா அணிந்து வந்த உடை. இந்த ப்ரெளன் நிற புடவைக்கு, சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து, காதுகளுக்கு பெரிய காதணியை அணிந்து, மெரூன் நிற லிப்ஸ்டிக் போட்டு, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்து, த்ரிஷாவை இன்னும் அழகாக காட்டியது எனலாம்.
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications





