Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
Oscars 2025: ஆஸ்கர் விருது விழாவிற்கு கவர்ச்சிகரமான உடையில் வந்த பிரபலங்கள்! உங்களுக்கு யாரை பிடிச்சிருக்கு?
Oscars 2025: திரைத்துறையின் மிகவும் உயரிய விருது தான் ஆஸ்கர் விருது. திரைத்துறையில் உள்ள ஒவ்வொரு கலைஞருக்கும் இந்த விருதைப் பெறுவது ஒரு கனவாக இருக்கும். இப்படிப்பட்ட ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆஸ்கர் விருதின் 97 ஆவது ஆண்டு விருது விழா லாஸ் ஏஞ்சல்சின் டாஃபி அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிவப்பு கம்பள விருது விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த 2025-ம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவை நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் தொகுத்து வழங்குகிறார். இந்த மாபெரும் விருது விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

பொதுவாக விருது விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொள்ளும்போது, அவர்களின் ஆடைகள் அதிகம் பேசப்படுவதுண்டு. இந்த 2025 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் சிறந்த ஆடைகளை அணிந்து வந்த பிரபலங்களின் தோற்றங்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
டெமி மூர்
2025 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை டெமி மூர் சில்வர் நிற மின்னும்படியான மற்றும் சிக்கென்று உடலை இறுக்கும்படியான ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து வந்துள்ளார். இந்த உடையானது டீப்-லோ நெக்கை கொண்டிருப்பதால், அவருக்கு சற்று கவர்ச்சிகரமான தோற்றத்தையும் கொடுத்தது.
செலினா கோம்ஸ்
அமெரிக்க நடிகையும், பாடகியுமான செலினா கோம்ஸ் 2025 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் போது, மெட்டாலிக் பிங்க் நிற ரால்ப் லாரன் கவுனில் அசத்தலாக வந்திருந்தார்.
ஜூலியான் ஹஃப்
அமெரிக்கன் பாடகியும், நடிகையுமான ஜூலியான் ஹஃப் 2025 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவின் போது மிகவும் அற்புதமான கவுனை அணிந்து வந்திருந்தார். அதுவும் இவர் ஒற்றை தோள்பட்டை கொண்ட டியோர் கவுன் அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.
லிசா
2025 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவிற்கு BLACKPINK பாடகி லிசா, சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் போது டக்ஸீடோ உடையில் வந்திருந்தார். இந்த உடை சிம்பிளாக இருந்தாலும், இதில் லிசா மிகவும் க்யூட்டாக உள்ளார்.
அரியானா கிராண்டே
அமெரிக்கன் நடிகையும், பாடகியுமான அரியானா கிராண்டே 2025 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவிற்கு வினோதமான வடிவில் கட்டமைக்கப்பட்ட ஸ்கர்ட் கொண்ட ஆடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் பொம்மை போன்று இருந்தார்.



Click it and Unblock the Notifications