2023 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான ஷெய்னிஸ் பலாசியோஸ் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Miss Universe 2023: 72 ஆவது பிரபஞ்ச அழகி போட்டியானது மத்திய அமெரிக்க நாடான சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடைபெற்றது. இந்த பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

அந்த போட்டியில் 2023 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் வெற்றி பெற்றார். 23 வயதான ஷெய்னிஸ் பலாசியோஸ் ஒரு டிவி தொகுப்பாளர் மற்றும் மாடலும் கூட.

Miss Universe 2023 Winner Is Sheynnis Palacios From Nicaragua

இவர் 2023 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை வென்று வரலாற்று சாதனையைப் புரிந்துள்ளார் எனலாம். ஏனெனில் இதுவரை நிகரகுவா நாட்டை சேர்ந்த எவரும் இப்பட்டத்தைப் பெற்றதில்லை. இவர் முதன்முறையாக வென்றதோடு, நிகரகுவா நாட்டில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவருக்கு 2022 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் முடி சூட்டினார். இரண்டாவது இடத்தை தாய்லாந்து நாட்டின் ஆண்டனியோ ப்ரொசில்ட்டும், மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் மராயோ வில்சனும் வென்றனர்.

72 ஆவது பிரபஞ்ச அழகி போட்டிக்கு மொத்தம் 90 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவில் இருந்து சண்டிகரைச் சேர்ந்த 23 வயதான ஸ்வேதா ஷ்ரத்தா பங்கேற்றார். இந்த போட்டியின் இறுதி சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்படும் 20 அழகிகளில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வேதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.

இறுதிச்சுற்று பதில்

பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பலாசியோசிஸ் நச்சென்று பதில் அளித்து வெற்றி பெற்றார். அது என்ன கேள்வியென்றால், வாழ்க்கையில் யாருடன் ஒரு நாளை கழிக்கத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு 18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் தத்துவஞானி மற்றும் பெண்ணியவாதியான மேரி வோஸ்டோன்கிராஃப்ட்டை தேர்ந்தெடுப்பதாக கூறினார். அதற்கு காரணம் இவர் எல்லைகளை உடைத்தெறிந்து பல பெண்களுக்கு வாய்ப்பளித்ததாக கூறினார்.

2023 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான ஷெய்னிஸ் பலாசியோஸ் யார்?

* ஷெய்னிஸ் பலாசியோஸ் அழகான வெளித்தோற்றத்தைக் கொண்டிருப்பதோடு மட்டுமின்றி, இவர் ஒரு மாஸ் கம்யூனிகேசன் பட்டதாரி மற்றும் ஒரு கைப்பந்து வீரரும் கூட.
* இவர் ஏற்கனவே மிஸ் டீன் நிகரகுவா 2016 மற்றும் மிஸ் வேர்ல்ட் நிகரகுவா 2020 போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.
* 90 நாடுகளைச் சேர்ந்த அழகிகளுடன் தனது அழகான போட்டியிட்டு இறுதிச்சுற்று வரை வந்த பலாசியோஸ், இறுதிச்சுற்று கேள்வியின் போது தனது புத்திசாலித்தனம் மற்றும் பாலின சமத்துவத்தின் அவசியத்தை எடுத்துரைத்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
* முக்கியமாக இவர் 2021 ஆம் ஆண்டின் உலக அழகி போட்டியின் முதல் 40 இடங்களில் ஒரு நல்ல இடத்தில் இருந்தவர்.

பிரபஞ்ச போட்டியின் இறுதி போட்டியின் போது ஷெய்னிஸ் பலாசியோஸ் நிகரகுவா நாட்டின் கொடியை பிரதிபலிக்கும் வகையில் படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட நீளமான ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்திருந்தார்.

Image Courtesy: twitter

Story first published: Sunday, November 19, 2023, 13:18 [IST]
Desktop Bottom Promotion