Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
Lakme Fashion Week 2023: அற்புதமான டிசைனில் செய்யப்பட்ட இந்தியாவின் பாரம்பரிய காதி உடைகளின் தொகுப்பு...
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேஷன் பிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் லேக்மீ ஃபேஷன் வீக் கோலாகலமாக நடந்து வருகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேஷன் பிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் லேக்மீ ஃபேஷன் வீக் கோலாகலமாக நடந்து வருகிறது. நாடு தழுவிய அளவில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய இந்த ஃபேஷன் நிகழ்ச்சி, அற்புதமான டிசைன்களை காட்சிப்படுத்தி ஃபேஷன் பிரியர்களைக் கவர்ந்து வருகிறது.
எப்போதும் போல, லேக்மீ ஃபேஷன் வீக் ஃபேஷன் டிசைனர்கள் தங்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட அற்புதமான டிசைன்களுடன் பங்கேற்கிறார்கள். முதல் நாளில், காதி இந்தியாவைச் சேர்ந்த மாடல்கள் அற்புதமான காதி ஆடைகளை காட்சிப்படுத்தினர். அதன் புகைப்படத் தொகுப்பை மேற்கொண்டு பார்க்கலாம்.
காதி துணிகள் புதிய வடிவமைப்புகள் மற்றும் அதிக வேலைப்பாடுகளுடன் காண்பவரை மகிழ்விக்கின்றன. பாரம்பரிய ஆடைகளை நாகரீகமான, ஸ்டைலான மற்றும் மிகவும் கவர்ச்சியான முறையில் அணியலாம் என்பதைலேக்மீ ஃபேஷன் வீக் நமக்கு காட்டியுள்ளது.
இந்த மஞ்சள் நிற காதி புடவையில் நாகரீகம் காணப்படுகிறது. இந்த மஞ்சள் கலர் புடவை நீல கலர் ப்ளைன் பார்டர் கொண்டது. மேலும் அதற்கு பொருத்தமான ஆரஞ்சு நிற நவநாகரீக பிளவுஸ் அணிந்துள்ளார். மிகக் குறைந்த ஆக்சஸெரீஸ் கொண்ட ஸ்டைலாக இது பார்க்கப்படுகிறது. கூடுதலாக முடி தளர்வாக விடப்பட்டுள்ளது.
கருப்பு கலர் முந்தானை கொண்ட இந்த நீல கலர் புடவை மிகவும் ட்ரெண்டி தோற்றத்தை கொண்டு வருகிறது. சிவப்பு கலர் பார்டர் அற்புதமான தோற்றத்தைக் கொடுத்துள்ளது. மேலும் அதற்கு பொருத்தமான முழு நீள கருப்பு பிளவுஸ் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. கழுத்தில் கருப்பு மணிகளால் ஆன மாலை நல்ல தோற்றத்தைக் கொடுக்கிறது.
ஒரு சாதாரண புடவை பாரம்பரியத்தின் படி இந்த புடவை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு கலர் புடவை கருப்பு நிறத்துடன் சரியாக மேட்ச் ஆகும். இந்த வடிவமைப்பு பாரம்பரிய விழாக்களில் அணிவதற்காகவே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications



