Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அம்பானி வீட்டு விழாவிற்கு கவர்ச்சியைத் தெறிக்கவிடும் லெஹெங்கா உடையில் வந்த கிம் கர்தாஷியன்...!
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி, பிற நாட்டு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்கு அமெரிக்க தொழிலதிபரும், கோடீஸ்வர பெண்மணியும், மாடலுமான கிம் கர்தாஷியன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டார்.
கிம் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். அடிக்கடி இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பலவிதமான போட்டோசூட்டுகளை எடுத்து வெளியிட்டவாறு இருப்பார். சொல்லப்போனால் இவரை கவர்ச்சிப் புயல் என்றும் கூறலாம். ஏனெனில் அந்த அளவில் இவர் கவர்ச்சியை தெறிக்கவிடுவார்.

முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ள கிம் மற்றும் கோல் கர்தாஷியன், ஜூலை 12 ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் மட்டுமின்றி, ஜூலை 13 ஆம் தேதி நடக்கும் சுப ஆசிர்வாத் விழாவிலும் கலந்து கொள்கின்றனர். இதற்காக இவர்கள் தாஜ் ஹோட்டலில் இருந்து அழகான பாரம்பரிய இந்திய உடையணிந்து புறப்பட்டுள்ளனர்.
கிம் கர்தாஷியன் ஆனந்த் அம்பானி திருமணத்தின் போது மனீஷ் மல்ஹொத்ராவின் சிவப்பு நிற சமகால புடவையையும், அவரது சகோதரி கோல் மனீஷ் மல்ஹொத்ராவின் கான்செப்ட் புடவையையும் அணிந்திருந்தனர். இரண்டாம் நாள் நடக்கும் சுப ஆசிர்வாத் விழாவில் கலந்து கொள்வதற்காக கிம் கர்தாஷியன் பிரபல டிசைனரான தருண் தஹிலியானியின் டஸ்டி பீச் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஜரி ப்ரோகேட் லெஹெங்காவை அணிந்திருந்தார். அதே சமயம் அவரது சகோதரி கோல் கர்தாஷியன் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் பார்பிகோர் மற்றும் பேர்ல்கோரின் கலவையை வெளிப்படுத்தும் லெஹெங்காவை அணிந்திருந்தார்.
முக்கியமாக கிம் மற்றும் கோல் கர்தாஷியனின் ஆபரணங்களைப் பற்றி கூற வேண்டுமானால், இருவருமே வைர நகைகளில் ஜொலித்தார்கள். அதுவும் கிம் அணிந்திருந்த வைர மூக்குத்தி அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
மேலும் கிம் அணிந்திருந்த வைர காதணி, நெக்லேஸ், நெற்றிச்சுட்டி போன்றவை இவரை இன்னும் தேவதைப் போன்று காட்டியது. அதேப் போல் கோல் கர்தாஷியன் அணிந்திருந்த வைர நெக்லேஸ், காதணி மற்றும் நெற்றிச்சுற்றி, இவரை கடல்கன்னி போன்று காட்டியது.
கிம் கர்தாஷியன் மற்றும் கோல் கர்தாஷியன்- இவர்கள் இருவருள் எவருடைய தோற்றம் உங்களுக்கு பிடித்துள்ளது என்று கூறுங்கள்.



Click it and Unblock the Notifications
