For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல சிம்பிள் லெஹங்கா!

பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல சிம்பிள் லெஹங்காக்களை தேர்வு செய்ய டிப்ஸ்

|

பார்ட்டியில் க்ராண்ட் லுக் இருக்க வேண்டும் என்பதை விட சிம்பிள் லுக் இருந்தால் போதும். அதுதான் இப்போதைய ட்ரெண்ட் என்று சிலாகிக்கிறார்கள் நம் பெண்கள்! அவர்களுக்காக லெஹங்காவில் ஜொலிக்கவும் எப்படியான லெகங்காவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான சில பயனுள்ள டிப்ஸ்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரேவ் பிரவுன் :

ப்ரேவ் பிரவுன் :

சிம்பிளாக அதே நேரத்தில் ப்ரேவ் லுக் கிடைக்க வேண்டுமானால் ப்ரவுன் நிற லெஹங்காவை தேர்ந்தெடுக்கலாம். எல்லா நிறத்திலான சருமத்திற்கும் இது பொருந்தும்.

Image Courtesy

டூ டோன் :

டூ டோன் :

சில்க் லெஹங்கா அல்லது சோலி கிராண்ட் லுக் கொடுத்திடும். கிராண்ட் லுக் வேண்டுபவர்கள் இரண்டு வெவ்வேறு நிறத்திலான லெஹங்காவை தேர்வு செய்யலாம். பாட்டம் லைட் கலரிலும் ஷால் டார்க் கலரிலும் இருக்க வேண்டும்.

Image Courtesy

க்ரிஸ்ப் வொயிட் :

க்ரிஸ்ப் வொயிட் :

வெள்ளை நிறம் எப்போதுமே ஏஞ்சலிக் லுக் கொடுக்கும். வெள்ளை நிறத்துடன் வேறு நிறங்கள் சேராமல் முழுவதும் வொயிட் க்ரஸ்டு மெட்டீரியலில் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். பார்ட்டிகளுக்கு இந்த உடை பெஸ்ட் சாய்ஸ். வெள்ளை நிறத்திற்கு டாப் ஹெவி வொர்குடனும் பாட்டம் குறைந்த அளவிலான டிசைன்களுடன் இருந்தால் அழகாக இருககும்.

Image Courtesy

கார்ஜிய்ஸ் ப்ளாக் :

கார்ஜிய்ஸ் ப்ளாக் :

இந்த நிறத்தில் லெஹங்கா அணிந்து சென்றால் பார்ட்டியின் அட்ராக்‌ஷன் நீங்களாகத்தான் இருப்பீர்கள்! லாங் ஸ்கர்ட் அல்லது காக்ரா அணியலாம் இதில் ஃப்ளோரல் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் கண்களைக் கவரும். இதற்கு நெட் துப்பட்டா அணியலாம்.

Image Courtesy

ப்ரிட்டீ பிங்க் :

ப்ரிட்டீ பிங்க் :

பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த நிறம். எந்த நிகழ்ச்சிக்கும் இதை அணியலாம். தனித்துவமாய் எடுத்துக் காட்டும். ஹெவி வொர்க் இன்றி, டிசைன் சிம்பிளாக இருந்தாலே போதும். ஃப்ரீ ஹேர் விடாமல் முடியை லாக் செய்து ஹேர் ஸ்டைல் எதாவது செய்யலாம்.

Image Courtesy

போல்ட் ப்ளூ :

போல்ட் ப்ளூ :

டார்க்காக இருப்பவர்கள் இந்த நிறத்தை தவிர்த்துவிடுங்கள். எலக்ட்ரிக் ப்ளூ, பெப்சி ப்ளூ, ஸ்கை ப்ளூ என நீல நிறத்திலேயே பல இருக்கின்றன. பாட்டம் இருக்கும் நிறத்தை விட காண்ட்ராஸ்ட்டான வேறு நிறத்தில் ஷால் தேர்ந்தெடுத்திடுங்கள். ஷால் லைட் கலரில் இருக்கட்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion tips
English summary

Tips to select lehanga colours

Here,we give some ideas to wear simple party wear lehangas
Story first published: Wednesday, July 26, 2017, 16:11 [IST]
Desktop Bottom Promotion