For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா? அப்போ இத கடைபிடிங்க

நாம் மற்றவர்களை விடத் தோற்றத்தில் மற்றும் வயதில் இளமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். அதேபோல் ஆஃபீஸ் சென்றாலும் வெளி இடங்களுக்குச் சென்றாலும் மற்றவர்களை விட சற்று ஸ்பெஷலாக இருக்க வேண்டு

|

எப்போதும் நாம் மற்றவர்களை விடத் தோற்றத்தில் மற்றும் வயதில் இளமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். அதேபோல் ஆஃபீஸ் சென்றாலும் வெளி இடங்களுக்குச் சென்றாலும் மற்றவர்களை விட சற்று ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இதற்கு நீங்கள் விலையுயர்ந்த ஆடைகளையே அல்லது மேக்கப் சாதனங்களையோ வாங்க வேண்டிய அவசியமில்லை.

Strategies For Looking Your Best

இதற்கு உங்கள் அன்றாட பழக்க வழக்கங்களை நீங்கள் முறையாக கடைப் பிடித்தாலே நீங்கள் மிக இளமையாக இருக்கலாம். இந்த பழக்கங்கள் உங்களுக்குத் தன்னம்பிக்கை மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அப்போது தான் மற்றவர்களை விட நீங்கள் தனியாகத் தெரிவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்குதல்

தூங்குதல்

மிக முக்கியமான ஒன்று நீங்கள் தினமும் தேவையான அளவு நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளவில்லையென்றால் உங்கள் உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலில் உங்கள் கண்களுக்குக் கீழே கருவளையங்கள், இமைவீக்கம் மற்றும் உடல் ஆற்றல் இழத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தூங்க செல்லும் போது மொபைல் மற்றும் டிவி போன்றவற்றைத் தள்ளிவைத்து விட்டு நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டுமானால் உங்கள் மெத்தையின் தேர்வும் முக்கியம்.

 உணவு

உணவு

அடுத்து மிக முக்கியமான ஒன்று உங்கள் உணவைத் திட்டமிட்டு உண்பது. நீங்கள் உண்ணும் உணவில் பெரும்பாலும் கார்போஹைட்ரெட் மற்றும் சர்க்கரைகள் இருந்தால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உங்களை நீங்களே விரும்பாத அளவிற்கு விரைவில் கொழுப்புகள் உடலில் சேரும். இந்த உணவுகள் உங்கள் உடல் எடையை அதிகரித்து உங்கள் சருமத்தையும் பாதிக்கும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவதை கடைப்பிடியுங்கள். இந்த ஆரோக்கியமான உணவுகள் உங்களின் உடல் நல ஆரோக்கியத்தையும் சருமத்தையும் பாதுகாக்கும். நீங்கள் உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி முதலில் ஒரு அட்டவணையைத் தயார் செய்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் முழுமையாக உங்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் உண்ணும் உணவில் சிறு சிறு மாற்றங்களை முதலில் கொண்டுவாருங்கள். எடுத்துக்காட்டாக அடிக்கடி பாஸ்ட் புட்களைச் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதனைத் தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுங்கள். நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண ஆரம்பித்த பிறகு உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களை நீங்களே உணருவீர்கள்.

 உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உங்களின் உணவுக் கட்டுப்பாட்டுடன் மிகவும் முக்கியமான ஒன்று உடற்பயிற்சி செய்வது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முதலில் நீங்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது உங்களின் உடல் எடை குறையும். உங்கள் உடலின் தோற்றத்தை நீங்கள் மாற்ற விரும்பினால் கண்டிப்பாக உடற்பயிற்சியை கடைபிடியுங்கள். அத்துடன் ஆரோக்கியமான உணவை உண்ணுவதை கடை பிடியுங்கள். உங்கள் தோற்றத்தில் நீங்கள் மாற்ற விரும்பும் மிகப்பெரிய விஷயம் உடல் எடை என்றால், ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியும் சிறந்த வழி. நீங்கள் சாப்பிடுவதை விட அதிகமான கலோரிகள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் வெளியேற்றப்படும் இதனால் நீங்கள் விரைவில் உங்கள் எடை இழக்க முடியும். உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லையெனில் நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்வு செய்து அவற்றை கடைப்பிடியுங்கள்.உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் இரத்தத்தில் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இந்த எண்டோர்பின்கள் உங்கள் மனநிலையை மேம்படுத்தும். உங்களுக்கு ஏற்படும் இந்த நல்ல மனநிலையினால் தன்நம்பிக்கையை அதிகரிக்கும்.

அத்துடன் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வேர்வை பற்றிக் கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு எவ்வளவு வேர்க்கிறதோ உங்கள் உடலுக்கு அவளோ நன்மை உள்ளது.

ஆடைகள்

ஆடைகள்

ஆடைகளில் உங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் அணியும் ஆடை புதிய டிரெண்ட் ஆன ஆடையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் தோற்றத்திற்கும் உடலுக்கும் எது பொருத்தமாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும் அவற்றைத் தேர்வு செய்து அணியுங்கள். நீங்கள் முறையான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறையை கடைப்பிடித்து உடல் எடை குறைந்தால் மீண்டும் உங்களுக்கு பொருத்தமான ஆடையை வாங்கி அணியுங்கள். நல்ல தூக்கம், நல்ல ஆடை, நல்ல உணவு நல்ல உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்து மற்றவர்களை விட எப்போதும் புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியான சிரிப்புடனும் இருந்து அடுத்தவர்களை கவர்ந்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion dress actress
English summary

Strategies For Looking Your Best

We all want to look our best. No one likes leaving the house looking sick, disheveled, or dirty. But looking your best requires work, and not all of us have the best habits for doing so. Luckily, these habits are easy to develop, and they can do wonders for not only your appearance, but your self confidence and your overall health.
Desktop Bottom Promotion