உங்களுக்கு பிடிச்ச நடிகை தூங்கி எழுந்ததும் எப்படி இருப்பாங்க தெரியுமா? இந்த போட்டோஸ் பாருங்க!

Posted By: Staff
Subscribe to Boldsky

உண்மையான அழகு என்ன? அகத்தின் அழகு தான் உண்மையான அழகு என்ற போதிலும், பெண்ணிடம் முகத்தின் அழகும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி பார்த்தால் ஒரு பெண்ணின் உண்மையான முக அழகு அவள் உறங்கி எழுந்த நிலையில் தான் பார்த்து அறியப்படும்.

உலக புகழ்பெற்ற நடிகைகளின் இந்த உண்மை அழகை வெளிக்கொண்டு வர வெரோனிக் வியால் என்ற புகைப்பட கலைஞர் முயச்சித்தார். அதன் ரிசல்ட் தான் இந்த புகைப்படத் தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தட்ஜனா படிட்ஸ்!

தட்ஜனா படிட்ஸ்!

தட்ஜனா படிட்ஸ் (Tatjana Patitz) ஜெர்மனை சேர்ந்த ஃபேஷன் நடிகை மற்றும் மாடலாவார். இவர் 1980-90களில் சர்வதேச ஃபேஷன் உலகில் நிறைய சாதித்துள்ளார். பல ஃபேஷன் டிசைனர்கள், பல ரேம்ப் வாக் மற்றும் பல முன்னணி நாளேடுகளுக்கு இவர் மாடலிங் செய்துக் கொடுத்துள்ளார்.

ஜெனிபர் பேல்ஸ்!

ஜெனிபர் பேல்ஸ்!

இவர் முன்னாள் பதின் வயது மாடல் மற்றும் நடிகையாவார். ஜெனிபர் 1983ம் ஆண்டு வெளியான ரொமாண்டிக் டிராமா ஃப்ளாஷ் டான்ஸ்ல் அலெக்சாண்டரா என்ற பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

லோன் ஸ்கை!

லோன் ஸ்கை!

லோன் ஸ்கை Say Anything என்ற படத்தில் நடித்த பிரிட்டிஷ் - அமெரிக்க நடிகையாவார். இவர் VH1ன் டாப் நூறு சிறந்த பதின் வயது நட்சத்திரங்கள் பட்டியலில் 84வது இடத்தைப் பிடித்திருந்தார்.

மில்லா ஜோவோவிச்!

மில்லா ஜோவோவிச்!

ரெசிடென்ட் ஈவில், தி ஃபிவ்த் எலிமென்ட் போன்ற படங்கள் மூலம் உலக பிரபலம் பெற்ற நடிகை மில்லா ஜோவோவிச். இவர் ஒரு அமெரிக்க மாடல், நடிகை, ஃபேஷன் டிசைனர் மற்றும் இசை கலைஞர் ஆவார். இவர் பல சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளார்.

சோஃபியா கபபோலா!

சோஃபியா கபபோலா!

சோஃபியா கர்மினா கப்போலா எனும் இவர் ஒரு அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகையாவார். இவர் லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் என்ற படத்திற்கு ஆஸ்காரின் சிறந்த ஒரிஜனல் ஸ்க்ரீன்ப்ளே விருதினை பெற்றவர்.

டெமி மூர்!

டெமி மூர்!

டெமி மூர் அமெரிக்காவை செர்ந்டாஹ் பிலிம் மேக்கர், நடிகை, மாடல் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் நடிப்பை தொடர தனது மேல்நிலை பள்ளியை உதறி வந்தவர். 16 வயதில் இருந்து இவர் நடித்து வருகிறார். ப்ளேம் இட் ஆன் ரியோ என்ற படத்தின் மூலம் இவர் தனது திறமையை நிரூபித்தார்.

ஏஞ்செலினா ஜூலி!

ஏஞ்செலினா ஜூலி!

அமெரிக்காவை சேர்ந்த நடிகை, ஃபிலிம் மேக்கர் மற்றும் மனிதநேர ஆர்வலர் ஏஞ்சலினா ஜூலி. இவர் ஆஸ்கர், கோல்டன் குளோப் மற்றும் பல உலக விருதுகளை வென்றிருக்கிறார். ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெற்ற நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

ஜூலியன் மூர்!

ஜூலியன் மூர்!

ஜூலியன் மூர் ஒரு பிரிட்டிஷ் - அமெரிக்க நடிகை. இவர் உணர்ச்சிப் பூர்வமான படங்களில் நடித்தவர். ஜூலியன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாரல் ஹன்னா!

டாரல் ஹன்னா!

டாரல் ஹன்னா அமெரிக்காவை சேர்ந்த நடிகை. இவர் ஸ்பிளாஸ், ரோக்ஸான், பிளேட் ரன்னர், வால் ஸ்ட்ரீட், கில் பில் மற்றும் ஸ்டீல் மேக்னொலியஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

All Image Credits: veroniquevial

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How They Look After Wake in The Morning? Hollywood Actress Photoshoot by Véronique Vial!

How They Look After Wake in The Morning? Hollywood Actress Photoshoot by Véronique Vial!
Story first published: Monday, March 26, 2018, 15:20 [IST]