Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2023 ஆஸ்கர் விருது விழாவில் கவர்ச்சியை தெறிக்க விட்ட பிரபலங்கள்!
2023 ஆஸ்கர் விருது விழாவிற்கு கோர்செட் மற்றும் டீப் நெக்லைன் ஆடைகளை அணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. பொதுவாக விருது விழாவில் விருதுகள் மட்டும் அதிகம் பேசப்படுவதில்லை, அந்த விருது விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அணிந்து வரும் ஆடைகளும் அதிகம் பேசப்படும். அதில் பெரும்பாலான பிரபலங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வர முயற்சிப்பார்கள்.

இதுவரை விருது விழாக்களில் ஷீர் ஆடைகளை அணிந்து வந்த பிரபலங்கள், இந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு கோர்செட் மற்றும் டீப் நெக்லைன் கொண்ட ஆடைகளை அதிகம் அணிந்து வந்திருந்தனர். இந்த வகையான ஆடைகள் பிரபலங்களின் கவர்ச்சியை இன்னும் அதிகரித்துக் காட்டின. கீழே 2023 ஆஸ்கர் விருது விழாவிற்கு கோர்செட் மற்றும் டீப் நெக்லைன் ஆடைகளை அணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

லேடி காகா (Lady Gaga)
அமெரிக்க பாடகியும், பாடலாசிரியரும் மற்றும் நடிகையுமான லேடி காகா, ஆஸ்கர் விருது விழாவிற்கு வெர்சேஸின் கருப்பு நிற ஷீர் கோர்செட் ஸ்டைல் கவுனை அணிந்து கிளாமராக வந்திருந்தார்.

ஏஞ்சலா பாசெட் (Angela Bassett)
அமெரிக்க நடிகையும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏஞ்சலா பாசெட், டிசைனர் மொசினோ வடிவமைத்த டீப் லோ நெக் கொண்ட ஊதா நிற கவுனில் பிரகாசமாக ஜொலித்தார்.

ஜானெல்லே மோனே (Janelle Monae)
அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜானெல்லே மோனே டிசைனர் வேரா வாங் வடிவமைத்த கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற உடையில் மிகவும் செக்ஸியாக வந்திருந்தார்.

ஃபேன் பிங்பிங் (Fan Bingbing)
சைனீஸ் நடிகையான ஃபேன் பிங்பிங் டிசைனர் டோனி வார்டு வடிவமைத்த டீப் லோ நெக் கொண்ட சில்வர் நிற உடையில் பொம்மை போன்று வந்திருந்தார்.

எலிசபெத் ஓல்சன் (Elizabeth Olsen)
அமெரிக்க நடிகையான எலிசபெத் ஓல்சன் டிசைனர் கிவன்ச்சியின் கருப்பு நிற டீப் லோ நெக் கொண்ட மின்னும் உடையில் கவர்ச்சியாக வந்திருந்தார்.

மோனிகா பார்பரோ (Monica Barbaro)
அமெரிக்க நடிகையான மோனிகா பார்பரோ ஆஸ்கர் விருது விழாவிற்கு டிசைனர் எலி சாப் வடிவமைத்த நீலம் மற்றும் ஊதா நிறங்கள் கொண்ட டீப் லோ நெக் கொண்ட செக்ஸியான உடையில் வந்திருந்தார்.

அரியானா டிபோஸ் (Ariana DeBose)
அரியானா டிபோஸ் ஒரு அமெரிக்க நடிகை, நடனக் கலைஞர் மற்றும் பாடகி. இவர் 2023 ஆஸ்கர் விருது விழாவிற்கு டீப் V நெக்லைன் கொண்ட ஃபுல் ஸ்லீவ் கொண்ட கவுனை அணிந்து வந்திருந்தார்.

ஈவா லாங்கோரியா (Eva Longoria)
அமெரிக்க நடிகையான ஈவா லாங்கோரியா, டிசைனர் ஜுஹைர் முராத் வடிவமைத்த நீளமான பலூன் ஸ்லீவ்கள் மற்றும் நீளமான ஸ்கர்ட்டைக் கொண்ட ஷீர் உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடை முழுவதும் மெட்டாலிக் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications