Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2023 கேன்ஸ் விழாவிற்கு தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்து கெத்து காட்டிய மத்திய அமைச்சர்!
Cannes 2023: உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் மே 16 ஆம் தேதி, அதாவது நேற்று தொடங்கிறது. இந்த திரைப்பட விழாவானது மே 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கேன்ஸ் திரைப்பட விழாவின் உலகின் பல பகுதிகளில் இருந்தும் திரைப்படங்கள் திரையிடப்படும்.
அந்த வகையில் இந்தியாவின் சார்பாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக இவர் மே 21 ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு, மே 22 ஆம் தேதி பிரான்ஸை அடைவார்.

மே 22 முதல் மே 24 வரை நடக்கும் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்வார். அதன் பின் கேன்ஸ் விழாவில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்வார். பின்னர் மே 25 ஆம் தேதி காலை டெல்லியை அடைவார். முக்கியமாக எல் முருகன் அவர்கள் கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவிலும் கலந்து கொண்டார்.
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடந்த விழாவில் இந்திய குழுவை வழிநடத்தும் போது அமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்கள் தமிழ் பாரம்பரியத்தின் அடையாளமான வேஷ்டி சட்டையை அணிந்து வந்திருந்தார். அதோடு, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்து பங்கேற்பதில் தமிழனாய் பெருமிதம் கொள்வதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எல்.முருகன் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் இந்த சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது மேற்கத்திய ஆடைகளை தேர்வு செய்யாமல், பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை தேர்ந்தெடுத்திருப்பது, அவரது பற்றை நன்கு வெளிப்படுத்துகிறது.
மேலும் இவர் அணிந்திருந்த சட்டையின் இடப்பக்கத்தில் தேசியக் கொடியும், வலது பக்கத்தில் ஜி20 லோகோவும் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக இந்த எம்பிராய்டரியானது தனது உள்ளூர் தையல்காரரால் செய்யப்பட்டது என்றும், தனது சட்டையில் மூவர்ணக் கொடியை எம்பிராய்டரி செய்து அணிவதில் பெருமிதம் கொள்வதாகவும் ஏஎன்ஐயிடம் தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள இந்த சமயத்தில் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது தேசியக் கொடியுடன், ஜி20 சின்னம் பொறிக்கப்பட்ட வேஷ்டி சட்டையை அமைச்சர் டாக்டர் எல், முருகன் அணிந்து கலந்து கொள்வது, நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும், தமிழனுக்கும் பெருமிதமாக உள்ளது.
வேட்டி அல்லது வேஷ்டி தமிழர்களின் பாரம்பரிய உடை மட்டுமின்றி, ஆண்களின் அழகை மேம்படுத்திக் காட்டும் உடையும் கூட. பொதுவாக இது செவ்வக வடிவத்தில் இருக்கும். தமிழக மக்கள் பெரும்பாலும் வெள்ளை நிற வேஷ்டியைத் தான் அணிவார்கள். ஆனால் அதை தினமும் அணிபவர்கள் குறைவு. இருப்பினும் முக்கிய விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது வெள்ளை நிற வேஷ்டியையே பெரும்பாலும் அணிவார்கள்.



Click it and Unblock the Notifications