Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கேன்ஸ் விழாவின் 2-வது நாளில் செக்ஸியான உடையில் வந்த சாரா அலி கான் மற்றும் மிருணால் தாகூர்!
Cannes 2023: 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
கேன்ஸ் விழாவின் முதல் நாளில் சாரா அலிகான், ஊர்வசி ரவுடேலா, இஷா குப்தா, மனுஷி சில்லர் ஆகியோர் சிவப்பு கம்பள விரிப்பில் பல அசத்தலான உடைகளை அணிந்து வந்திருந்தனர். இந்நிலையில் கேன்ஸ் விழாவின் இரண்டாம் நாளில் மீண்டும் சாரா அலி கான், ஊர்வசி ரவுடேலா மற்றொரு அழகான உடையில் வந்திருந்தனர்.

அதுமட்டுமின்றி நடிகை மிருணால் தாக்கூரும் இரண்டாம் நாள் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டார். கீழே கேன்ஸ் திரைப்பட விழாவின் இரண்டாம் நாளில் கலந்து கொண்ட இந்திய பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மிருணால் தாகூர்
நடிகை மிருணால் தாகூர் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார். இந்த மிகப்பெரிய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் போது, இவர் இரட்டை டிசைனர்களான ஃபல்குனி ஷேன் பீக்காக் டிசைன் செய்த லாவெண்டர் நிற ப்ரீ ட்ராப்ட் நெட் புடவை மற்றும் பிராலெட் ஜாக்கெட்டை அணிந்திருந்தார். இந்த புடவையில் இவர் மிகவும் க்யூட்டாக மட்டுமின்றி, கிளாமராகவும் இருந்தார். அதுவும் இந்த புடவைக்கு இவர் மேற்கொண்டிருந்த ஸ்மோக்கி ஐ மேக்கப் மற்றும் சில்வர் காதணிகள் மற்றும் சில்வர் நிற ஹீல்ஸ் இவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
சாரா அலி கான்
சாரா அலி கான் கேன்ஸ் விழாவின் முதல் நாளில் அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்த எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்கா சோளியில் வந்திருந்தார். இரண்டாம் நாளில் கலந்து கொள்ளும் போதும் இரட்டை டிசைனர்களான அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லாவின் மோனோகுரோம் புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த ஃப்யூசன் புடவைக்கு இவர் அணிந்து வந்த ஹால்டர் நெக் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். முக்கியமாக இந்த உடைக்கு இவர் அணிந்திருந்த கருப்பு வெள்ளை ஸ்ட்ரிங் நெக்லேஸ் மற்றும் சிறிய காதணி, இவரது அழகை கூட்டி காட்டியது.
ஊர்வசி ரவுடேலா
ஊர்வசி ரவுடேலா கேன்ஸ் விழாவின் முதல் நாளில் அழகான மற்றும் பல அடுக்கு சுருக்கங்களைக் கொண்ட அடர் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார். அதுவும் இந்த கவுனிற்கு இவர் அணிந்து வந்த முதலை ஸ்டேட்மெண்ட் நெக்பீஸ் இவர் மீது ஈர்ப்பை அதிகரித்தது. அந்த வகையில் கேன்ஸ் விழாவின் 2 ஆவது நாளிலும் ஊர்வசி ரவுடேலா கலந்து கொண்டார். இப்போது இன்னும் அதிக சுருக்கங்கள் கொண்ட ஆரஞ்சு நிற கவுனை அணிந்து வந்திருந்தார். அதுவும் இந்த கவுனிற்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல், இவரது அழகை அதிகரித்துக் காட்டின.
உங்களுக்கு சாரா அலி கான், மிருணால் தாகூர் மற்றும் ஊர்வசி ரவுடேலா இவர்களுள் யாருடைய லுக் பிடித்துள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications


