Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2023 கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளில் கலந்து கொண்ட இந்திய பிரபலங்கள்!
Cannes 2023: 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது பிரான்ஸில் மே 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த பிரமாண்டமான திரைப்பட விழாவில் உலகெங்கிலும் உள்ள பல மொழி திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளில் சாயிப் அலி கானின் மகளான சாரா அலி கான், இஷா குப்தா, மனுஷி சில்லர் மற்றும் ஊர்வசி ரவுடேலா ஆகியோர் பல அட்டகாசமான ஆடைகளை அணிந்து வந்து, சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

கீழே கேன்ஸ் விழாவின் முதல் நாளில் சிவப்பு கம்பள விரிப்பில் நடந்த இந்திய பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
சாரா அலி கான்
நடிகை சாரா அலி கான் மிகவும் பிரபலமான டிசைனர்களான அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்த கையால் எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்கா சோளி அணிந்து வந்திருந்தார்.
இந்த உடைக்கு இவர் கழுத்தில் ஆபரணங்கள் எதுவும் அணியாமல், காதுகள் மற்றும் ஒற்றை கையில் மட்டும் வைர ஆபரணங்களை அணிந்திருந்தார். மொத்தத்தில் இந்த உடையில் ஒரு இந்திய மகாராணி போன்று காணப்பட்டார்.
இஷா குப்தா
நடிகை இஷா குப்தாவும் கேன்ஸ் விழாவின் முதல் நாளில் கலந்து கொண்டார். அப்போது அவர் மிகவும் செக்ஸியான தோற்றத்தைத் தரக்கூடிய அழகான வெள்ளை நிற நிக்கோலஸ் ஜெப்ரான் கவுனில் வந்திருந்தார். இந்த கவுனானது டீப் லோப் நெக் கொண்டதோடு, டீப் தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்தது.
இந்த உடைக்கு இவர் ஃபிரெட் பாரிஷ் ஜூவல்லரியில் வைர மோதிரம் மற்றும் காதணிகளை அணிந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு அளவான மேக்கப் போட்டு, கொண்டை போட்டிருந்தது, இவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
மனுஷி சில்லர்
மனுஷி சில்லர் ஃபொவரி என்ற ஃபேஷன் பிராண்ட்டைச் சேர்ந்த ஸ்ட்ராப்லெஸ் மற்றும் தரை நீள வெள்ளை நிற கவுனை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடையானது தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்தது.
இந்த கவுனிற்கு கழுத்தில் பச்சை நிற சோக்கர் நெக்பீஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட் மோதிரத்தை அணிந்து வந்திருந்தார். ஆனால் காதுகளில் இவர் எந்த காதணியையும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.
ஊர்வசி ரவுடேலா
ஊர்வசி ரவுடேலாவும் கேன்ஸ் விழாவின் முதல் நாளில் கலந்து கொண்டார். அப்போது அவர் அடர் பிங்க் நிற பல சுருக்கங்களைக் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த கவுனிற்கு இவர் கழுத்தில் சற்று வித்தியாசமாக முதலை டிசைனைக் கொண்ட நெக்பீஸை அணிந்திருந்தார்.
மேலும் காதுகளில் வளையத்தை அணிந்திருந்தார். முக்கியமாக இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த கொண்டை ஹேர் ஸ்டைல், இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டின.



Click it and Unblock the Notifications



