Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Budget 2026: இதுவரை பட்ஜெட் நாளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்த புடவைகள்!
Budget 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இன்று நிதியமைச்சர் 9 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். வரலாற்றிலேயே முதல்முறையாக 9 ஆண்டுகளாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நபர் மற்றும் முதல் பெண்மணி ஆவார்.
ஒவ்வொரு ஆண்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும், அவரது இந்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அவர் பட்ஜெட் நாளில் அணிந்து வரும் புடவைகளும் அனைவராலும் பேசப்படுவதுண்டு.

ஏனெனில் இவர் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் நாளில் இந்தியாவின் பல்வேறு கைத்தறி மரபுகள், பிராந்திய நெசவுகளை பிரதிபலித்து, கலைஞர்களை ஆதரித்து, பொருளாதார கருப்பொருள்களுடன் ஒத்துப்போகும் வகையிலான புடவைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டு முதலாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இப்போது இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்த புடவைகள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் 2019
2019 ஆம் ஆண்டில் நடந்த பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் கோல்டன் பார்டர் அடர் பிங்க் நிற மங்கல்கிரி புடவையை அணிந்து வந்திருந்தார். அதோடு பட்ஜெட் தாக்கல் செய்ய லெட்ஜர் பேப்பர்களை பிரீஃப்கேஸில் வைத்து கொண்டு வருவதற்கு பதிலாக அந்த பேப்பர்களை தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பாஹி கட்டாவில் கொண்டு வந்தார்.
பட்ஜெட் 2020
2020 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிர்மலா சீதாராமன் நீல பார்டர் கொண்ட மஞ்சள்-கோல்டன் நிறங்கள் கலந்த பட்டுப் புடவையை அணிந்து வந்திருந்தார்.
பட்ஜெட் 2021
நிர்மலா சீதாராமன் 2021 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பச்சை பார்டர் கொண்ட சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி புடவையை அணிந்து வந்திருந்தார்.
பட்ஜெட் 2022
2022 ஆம் ஆண்டின் பட்ஜெட் நாளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்டரில் வெள்ளி நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒருவித மெரூன் நிற கைத்தறி பொம்காய் புடவையை அணிந்திருந்தார். இந்த புடவை ஒடிசாவில் தயாரிக்கப்படும் புடவையாகும்.
பட்ஜெட் 2023
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கருப்பு மற்றும் கோல்டர் பார்டர் கொண்ட சிவப்பு நிற பட்டுப் புடவையை அணிந்து வந்திருந்தார்.
பட்ஜெட் 2024
2024 ஆம் ஆண்டின் பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காந்தா எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட நீல நிற டஸ்ஸர் பட்டுப் புடவையை அணிந்தார். பின்னர், தங்கம் மற்றும் மெஜந்தா பார்டர்களுடன் கூடிய வெள்ளை நிற மங்களகிரி புடவையை அணிந்தார்.
பட்ஜெட் 2025
கடந்த 2025 ஆம் ஆண்டின் பட்ஜெட் நாளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி பரிசளித்த வெள்ளை நிற சேலையை அணிந்திருந்தார், அதில் பீகாரைச் சேர்ந்த மதுபனி மீன் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இடம் பெற்றிருந்தன.



Click it and Unblock the Notifications






