Latest Updates
-
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா?
பார்ப்போரின் வாயைப் பிளக்க வைக்கும் செக்ஸியான உடையை அணிந்து வந்த பிரபலங்கள்!
ஒட்டுமொத்த உடலும் அப்பட்டமாக தெரியுமாறான உடையை ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி, இந்திய பிரபலங்களும் அணிந்து திகைக்க வைத்துள்ளனர்.
ஃபேஷன் என்பது அன்றாட அடிப்படையில் ஏற்படும் பரிணாம வளர்ச்சியாகும். உடுத்தும் உடைகளில் இருந்து, அணியும் காலணிகள் வரை, அனைத்திலும் தற்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஃபேஷன் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது பல பிரபலங்கள் அணிவதற்கே கூச்சப்படும் உடைகளை அணிந்து வந்து வாயைப் பிளக்க வைத்துள்ளனர். இம்மாதிரியான உடைகளை அணிவதற்கு என்று ஒரு தில் வேண்டும்.

அப்படி ஒட்டுமொத்த உடலும் அப்பட்டமாக தெரியுமாறான உடையை ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி, இந்திய பிரபலங்களும் அணிந்து திகைக்க வைத்துள்ளனர். கீழே உடல் முழுவதும் தெரியுமாறான கவர்ச்சிகரமான உடையை அணிந்த சில பிரபலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். வாருங்கள் பார்ப்போம்.

சமந்தா அக்கினேனி
தென்னிந்திய நடிகையான சமந்தாவை நாம் இதுவரை பல்வேறு கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து பார்த்திருப்போம். ஆனால் உடல் முழுவதும் தெரியுமாறான இவரது மஞ்சள் நிற நெட்டட் உடை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

சோனம் கபூர்
நடிகை சோனம் கபூர் கூட உடல் முழுவதும் தெரியுமாறான உடையை அணிந்துள்ளார். அதுவும் ஒரு சிவப்பு கம்பள நிகழ்ச்சியின் போது டீப் லோ நெக் கொண்ட ஷீர் கவுன் அணிந்து வந்திருந்தார். சோனம் கபூரின் இந்த உடையைப் பார்க்கும் போது பலரும் அசந்து போயினர்.

தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோனே தனது முதல் ஹாலிவுட் படத்தை நடித்த பின், அதை விளம்பரப்படுத்த கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு கோல்டன் நிற மின்னும் கவுன் அணிந்து வந்திருந்தார். இதுவும் இந்த உடையானது முன்பக்கத்தில் மட்டுமின்றி, பின்பக்கத்திலும் டீப் லோ நெக் கொண்டது.

பிரியங்கா சோப்ரா ஜோனஸ்
பிரியங்கா சோப்ரா ஜோனஸ் தனது கணவருடன் விருது விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, தொப்புள் வரை லோ நெக் கொண்ட வெள்ளை நிற கவுன் அணிந்து வந்திருந்தார். முக்கியமாக இந்த உடையின் போது தொப்புளில் வளையம் ஒன்றையும் அணிந்திருந்தார். இது இவர் இதுவரை அணிந்து வந்த உடைகளிலேயே மறக்க முடியாத ஒரு உடை என்றே கூறலாம்.

பெல்லா ஹடிட்
எப்போதுமே வித்தியாசமாக உடைகளை அணிந்து வரக்கூடியவர் தான் பெல்லா. இவர் ஒருமுறை ஷீர் பாடிசூட் ஒன்றை அணிந்து வந்திருந்தார். இந்த நியூட் நிற பாடிசூட், இவரை படு கவர்ச்சியாக வெளிக்காட்டியதோடு, பலருக்கும் ஒருவித ஆச்சரியத்தை ஏற்படுத்தியது எனலாம்.

ஜெனிபர் லோபஸ்
மெட் கலா நிகழ்ச்சிக்கு, ஜெனிபர் லோபஸ், கிட்டத்தட்ட உடல் முழுவதும் தெரியுமாறான ஒரு ஷீர் உடையை அணிந்து வந்திருந்தார். இந்த மாதிரியான ஒரு உடையை வேறு எவரும் கனவில் கூட அணிந்து வர நினைத்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட உடையில் போல்ட்டாக வந்திருந்தார்.

கெண்டல் ஜென்னர்
சூப்பர் மாடலான கெண்டல் ஜென்னர், சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இந்த உடை உடல் முழுவதும் தெரியும் வண்ணம் படுகவர்ச்சியாக இருந்தது.

பியான்ஸ்
இது மெட் கலா நிகழ்ச்சிக்கு பாடகி பியான்ஸ் வண்ண கற்கள் பதிக்கப்பட்ட ட்ரான்ஸ்பரண்ட் ஷீர் உடையை அணிந்து வந்த போது எடுத்தது. இந்த மாதிரியான உடையை பெரிய விழாக்களில் அணிவதற்கு, பலரும் யோசிப்பார்கள். ஆனால் பியான்ஸ் தைரியமாக அணிந்து வந்தது, அவரது தைரியத்தை நன்கு வெளிக்காட்டுகிறது எனலாம்.

ரிஹானா
பாப் பாடகி ரிஹானா ஒருமுறை CFDA என்ற விருது விழாவிற்கு அணிந்து வந்த ஆடை ஹாலிவுட் உலகத்தையே வாயைப் பிளக்க வைத்தது. அந்த அளவில் உடல் முழுவதும் தெரியுமாறான உடை அணிந்திருந்தார்.

கிம் கர்தாஷியன்
2019 ஆம் ஆண்டு நடந்த ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு கிம் கர்தாஷியன் பல கட்அவுட்டுகளைக் கொண்ட கருப்பு நிற தியரி முக்லர் விண்டேஜ் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் ஹைலைட்டே மேல் பகுதி தான்.



Click it and Unblock the Notifications
