Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பிரம்மாண்டமாக நடந்த சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானியின் திருமண போட்டோக்கள்!
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானிக்கும் 2023 பிப்ரவரி 7 ஆம் தேதி ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானிக்கும் 2023 பிப்ரவரி 7 ஆம் தேதி ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் தங்களது திருமண போட்டோக்கள் தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டனர்.

கியாரா அத்வானியும், சித்தார்த் மல்ஹோத்ராவும் 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த ஷேர்ஷா என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். இந்த படம் இவர் இருவரும் ஒன்றாக நடித்த முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் சித்தார்த் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்திலும், கியாரா அவரது காதலி டிம்பிளாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பின் சித்தார்த்தும், கியாராவும் காதலித்து வருவதாக கூறப்பட்டன. ஆனால் அதை அவர்கள் இருவருமே ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது இந்த ஜோடி ரியல் ஜோடியாகியுள்ளது.
கீழே இன்ஸ்டாவில் வெளியிடப்பட்ட சித்தார்த்-கியாராவின் திருமண போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கியாராவின் லெஹெங்கா
கியாரா அத்வானி திருமணத்தின் போது பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த மிகவும் கிராண்ட்டான பிங்க் நிற லெஹெங்காவை அணிந்திருந்தார். இந்த லெஹெங்காவில் கியாரா தேவதை போன்று காட்சியளித்தார். இந்த லெஹெங்காவிற்கு பொருத்தமாக வைரம் மற்றும் மரகத கற்கள் பதிக்கப்பட்ட நெக்லேஸ் மற்றும் காதணிகளை அணிந்திருந்தார்.

சித்தார்த் ஷெர்வானி
சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தின் போது ஏஸ் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த சந்தன நிறத்தில் கோல்டன் நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஷெர்வானியை அணிந்திருந்தார்.

கணவருக்கு அன்பு முத்தம்
இது திருமணத்திற்கு பின் தன் கணவருக்கு கியாரா அத்வானி அன்புடன் தந்த முதல் முத்தம்.

ஆசை மனைவிக்கு முதல் முத்தம்
இது திருமணத்திற்கு பின் தனது ஆசை மனைவிக்கு சித்தார்த் மல்ஹோத்ரா தனது முதல் முத்தத்தை கொடுத்த போது எடுத்தது.
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications