Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
பேட்லா புடவையில் ஒரு கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்தினார் பிரியங்கா சோப்ரா.
பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் உலகளவில் அறியப்பட்ட ஒரு நட்சத்திரம். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி, பெண்கள் நல உரிமை, பாலின சம உரிமை, பெண்ணியம் சார்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்.

சமூக அக்கறையோடு பல சூழல்களிலும் செயல்பட்டு வரும் பிரியங்காவை கவுரவிக்கும் வகையில் யுனிசெஃப் விருது கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடைபெற்ற யுனிசெஃப் 'ஸ்நோஃப்ளேக் பால்' நிகழ்வில் பிரியங்காவுக்கு "டேனி கே மனிதாபிமான விருது" வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற 18 ஆவது மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் சினிமாவில் பிரியங்காவின் பங்களிப்புக்காக மற்றொரு விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ராவின் உடை
இந்நிகழ்வில், பேட்லா புடவையில் ஒரு கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்தினார் பிரியங்கா சோப்ரா. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பிரியங்காவை திரும்பி பார்க்க வைத்தது. இந்த புடவையில் மிக அழகாக தோற்றமளித்தார் பிரியங்கா. அழகான மற்றும் திருமணப் புடவை போன்றும் இருந்தது.

புடவை மீதான காதல்
நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் புடவை அணிவதை காட்டிலும், இந்திய விழாக்கள் முதல் சர்வதேச திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழா வரை புடவைகள் மீதான தனது அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் நடிகைகள். புடவையின் மீதான முடிவில்லாத காதலை எல்லா பெண்களும் கொண்டிருப்பார்கள். அந்த வகையில், பிரியங்கா சோப்ராவும் புடவையின் மீது கொண்ட காதலால் அழகாக காட்சியளிக்கிறார்.

தங்க நிறப் புடவையில் ஜொலித்த பிரியங்கா
வெள்ளை மற்றும் தங்க நிறம் கொண்ட புடவையில் பிரியங்கா அழகாக ஜொலித்தார். புடவையில் தங்க நிற பார்டரில் முகாய்ஷ் வேலை இருந்தது. இந்த புடவையை டிசைனர் அபு ஜனி சந்தீப் கோஷ்லா வடிவமைத்தார். மிகவும் நுணுக்கமான வேலைபாடுகளுடன் நன்றாக வடிமைக்கப்பட்டு இருக்கிறது.

மார்டன் ஜாக்கெட்
பிரியங்கா சோப்ரா தங்களுடைய புடவைக்கு அழகான ஒரு தனித்துவமான மார்டன் ஜாக்கெட் வடிவமைப்பை தேர்வு செய்துள்ளார். வெள்ளை மற்றும் தங்க துணியால் ஆன பட்டை போன்ற டிசனுடன் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த ஜாக்கெட் அவரின் பின் அழகை மேலும் கூட்டுகிறது.

நெக்லேஸ் மற்றும் மோதிரம்
பளபளப்பான புடவையில் அழகாக ஜொலிக்கும் பிரியங்கா, மேலும் தன்னுடைய தோற்றத்தை வசீகரிக்க ஒரு வைர சோக்கர் நெக்லேஸ் அணிந்து வந்துள்ளார். அவரின் புடவையின் நிறத்திற்கும் நெக்லேஸும் அழகாக அமைந்து உச்ச அழகை எட்டியுள்ளார். கை விரல்களில் அழகான மோதிரங்களையும் அவர் அணிந்திருந்தார். வேறு எந்த ஆபரணங்களையும் அவர் அணியவில்லை.

இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக்
தன்னுடைய தோற்றத்தை அழகாக காட்ட பல டிசைன்கள் கொண்ட புடவையும், ஒரு நெக்லேஸும் அணிந்து எளிமையாக வைத்திருந்தார் பிரியங்கா. அவரது அலங்காரத்திற்கு ஏற்ற வகையில், இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தன் அழாகான உதடுகளில் பூசி, அவருடைய அழகால் நம்மை புல்லரிக்க வைக்கிறார்.

மேக் அப்
அழகான தடிமான புருவம், கண்களுக்கு மை, எளிமையான ஹேர் ஸ்டைல் என அளவாக மேக்கப் போட்டு, வசீகரிக்கும் பார்வையால் பிரகாசமாக ஜொலிக்கிறார் பிரியங்கா சோப்ரா. அழகிய வேலைபாடுகள் கொண்ட புடவைக்கு ஏதுவாக அழகான மார்டன் ஜாக்கெட் அணிந்து விழாவில் அனைவரின் கவனத்தையும் தன் திருப்பியுள்ளார் பிரியங்கா.



Click it and Unblock the Notifications
