Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா!
2020 கிராமி விருது விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவரான நிக் ஜோனஸ் உடன் கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா சோப்ரா பார்ப்பவர்கள் வாயைப் பிளக்கும் வகையிலான உடையை அணிந்து வந்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இசை கலைஞர்களுக்காக நடத்தப்படும் ஓர் விருது விழா தான் கிராமி விருது. சமீபத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு ஏராளமான நடிகர், நடிகைகள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். பொதுவாக விருது விழாக்களுக்கு வரும் போது, பெண் பிரபலங்கள் தங்களை அட்டகாசமாக வெளிக்காட்டுவதற்கான பல வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வருவார்கள்.

கிராமி விருது விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவரான நிக் ஜோனஸ் உடன் கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா சோப்ரா பார்ப்பவர்கள் வாயைப் பிளக்கும் வகையிலான உடையை அணிந்து வந்திருந்தார்.
சொல்லப்போனால் பிரியங்கா சோப்ரா இப்படியொரு உடையை அணிந்து வருவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டோம். அப்படிப்பட்ட உடையை கிராமி விருது விழாவிற்கு பிரியங்கா அணிந்து வந்திருந்தார். இப்போது 2020 கிராமி விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைக் காண்போம்.

ரால்ப் மற்றும் ருஸ்ஸோ உடை
பிரியங்கா சோப்ரா 2020 கிராமி விருது விழாவிற்கு பிரபல டிசைனர்களான ரால்ப் மற்றும் ருஸ்ஸோ வடிவமைத்த உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் முன்புறம் தொப்புள் வரை தெரியும்படியான மிகவும் லோ நெக்லைன் கொண்டது.

பிராலெஸ்
பிரியங்கா சோப்ரா இந்த கவுனிற்கு பிரா எதுவும் அணியாமல், தனது பரந்த மனதுடன் ஹாயாக வந்திருந்தார். தொப்புள் வரை உடையின் நெக்லைன் இறங்கி இருப்பதால், இது இவரை படு கிளாமராக காட்டியது.

தொப்புள் வளையம்
பிரியங்கா சோப்ரா ரால்ப் மற்றும் ருஸ்ஸோ கவுனில் தொப்புள் தெரியுமாறு இருப்பதால், தனது தொப்புளை அழகாக்கும் வகையில் வளையத்தை மாட்டிக் கொண்டு வந்திருந்தார். இது அவரது தொப்புளை சற்று ஹை-லைட் செய்து காட்டியது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
பிரியங்கா சோப்ராவின் மேக்கப்பைப் பற்றி கூற வேண்டுமானால், இவர் கண்களுக்கு கண் மை போட்டு, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ் டிக், கன்னங்களுக்கு லேசாக பிங்க் பிளஷ் மற்றும் கண்களுக்கு பிங்க் ஐ-ஷேடோ அடித்து வந்திருந்தார். மேலும் சைடு உச்சி எடுத்து, ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்
பிரியங்கா சோப்ரா இந்த உடைக்கு வைர காதணிகளை மட்டும் அணிந்து வந்திருந்தார். கை விரலுக்கு மோதிரங்களை அணிந்து வந்திருந்தார். மேலும் கை விரல் நகங்களுக்கு நெயில் ஆர்ட் போட்டிருந்தார்.

நிக் ஜோனஸ்
நிக் ஜோனஸ் கோல்டன் நிற கோட் போட்டு, கோல்டன் காலர் கொண்ட டி-சர்ட் போட்டு, கால்களுக்கு கோல்டன் நிற ஷூ அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications