Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
2023 ஆஸ்கர் விருது விழாவிற்கு செக்ஸியான கருப்பு நிற கவுனில் வந்த தீபிகா படுகோனே!
2023 ஆஸ்கர் விருது விழாவிற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தைப் பற்றியும், நாட்டு நாட்டு பாடல் குறித்தும் அறிமுகம் கொடுத்தார்.
Oscars 2023: திரையுலகில் மிகவும் கௌரவமான மற்றும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. 2023 ஆம் ஆண்டிற்கான 95 ஆவது அகாடமி விருதான ஆஸ்கர் விருது விழாவானது 2023 மார்ச் 13 ஆம் தேதி அதிகாலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது விழாவை நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.

இந்த ஆஸ்கர் விருதிற்கு ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் நாமினேட் செய்யப்பட்டதோடு, ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்துள்ளது. இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தைப் பற்றியும், நாட்டு நாட்டு பாடல் குறித்தும் அறிமுகம் கொடுத்தார்.
அப்போது தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் கடல்கன்னி போன்ற உடையணிந்து வந்திருந்தார். கீழே 2023 ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை தீபிகா படுகோனே மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற கவுனில் தீபிகா
நடிகை தீபிகா படுகோனே 2023 ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ளும் போது லூயிஸ் உய்ட்டனின் கருப்பு நிற ஆஃப் ஷோல்டர் வெல்வெட் கவுனை அணிந்து வந்திருந்தார். ஆஸ்கரின் சிவப்பு கம்பளத்தில் தீபிகா இந்த கருப்பு நிற கவுனில் வந்தது, அவரை பளிச்சென்று வெளிக்காட்டியதோடு, விழாவிற்கு வந்தோரின் கவனத்தை ஈர்க்கும் படி கிளாமராகவும், செக்ஸியாகவும் காணப்பட்டார்.

கடல்கன்னி ஸ்டைல் கவுன்
தீபிகா படுகோனே அணிந்திருந்த கருப்பு நிற வெல்வெட் கவுன் ஆஃப் ஷோல்டரைக் கொண்டதோடு, ஃபுல் ஸ்வீவ்வுடன் ஓபரா கையுறைகளையும், ப்ளங்கிங் நெக்லைனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கவுன் உடலை ஒட்டியவாறு ஆரம்பித்து, கீழே தரையைப் பெருக்கும் வகையில் பெரிய ஸ்கர்ட்டை கொண்டிருந்தது. இதனால் தீபிகா படுகோனே கடல்கன்னி போன்று அழகாக காணப்பட்டார்.

தீபிகாவின் மேக்கப்
தீபிகா படுகோனே இந்த கவுனிற்கு அதிகமாக மேக்கப் எதுவும் போடாமல், கண்களுக்கு ஐ-லைனர், நியூடு ஐ-ஷேடோ மட்டும் போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிளஷ் அடித்து, உதடுகளுக்கு நியூட் லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

தீபிகாவின் ஹேர் ஸ்டைல்
தீபிகா படுகோனே ஆஸ்கர் விருது விழாவிற்கு கருப்பு நிற கவுனிற்கு நேர் உச்சி எடுத்து, மெஸ்ஸி கொண்டை போட்டு வந்திருந்தார். இது இவரை இன்னும் எளிமையாகவும், அழகாகவும் வெளிக்காட்டியது.

தீபிகாவின் ஆபரணங்கள்
தீபிகா படுகோனே இந்த வெல்வெட் கவுனிற்கு ஸ்டேட்மென்ட் மோதிரங்கள், பிரேஸ்லெட் மற்றும் நெக்லேஸ் என்று அழகான வைர ஆபரணங்களை அணிந்து வந்தது, இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ராம்சரணுடன் தீபிகா
இது ஆஸ்கர் விருது விழாவின் போது ஆர்ஆர்ஆர் படத்தில் கதாநாயகனான ராம்சரணுடன் சேர்ந்து நடிகை தீபிகா படுகோனே எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications