Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
காதலருடன் கேரள புடவையில் ரொமான்டிக்காக ஓணம் கொண்டாடிய நயன்தாரா!
2020 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகையை நயன்தாரா தனது அம்மா மற்றும் காதலருடன் சேர்ந்து பாரம்பரிய கேரள புடவையில் கொண்டாடியுள்ளார்.
கேரளாவில் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் சொந்த ஊரான கொச்சினுக்கு சென்றுள்ளார். அதுவும் கொரோனா பரவலால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், தனி விமானம் மூலம் தனது காதலருடன் கொச்சினுக்கு வந்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகையை நயன்தாரா தனது அம்மா மற்றும் காதலருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். மேலும் ஓணம் பண்டிகை அன்று அவர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு, அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போது நயன்தாராவின் ஓணம் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது "நானும் ரவுடி தான்" திரைப்படத்தில் இருந்து தான். அதன் பின் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாட கொச்சினுக்கு தனி விமானம் மூலம் சென்று, அந்த போட்டோக்களையும் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

நயனின் ஓணம் லுக்
நயன்தாரா ஓணம் பண்டிகையன்று கோல்டன் நிற கட்டம் போட்ட கேரளா புடவையை அணிந்து, தேவதை போன்று காணப்பட்டார். இந்த புடவைக்கு பொருத்தமாக கோல்டன் நிற ஜாக்கெட்டையும் அணிந்திருந்தார்.

நயன்தாராவின் மேக்கப்
நயன்தாரா இந்த கேரள புடவைக்கு மேக்கப் அதிகம் போடாமல் சிம்பிளாக கண்களுக்கு காஜல், உதட்டிற்கு லிப் கிளாஸ் போட்டு, நெற்றியில் சிவப்பு நிற சிறிய பொட்டு மட்டும் வைத்திருந்தார்.

ஆபரணங்கள்
நயன்தாரா இந்த கேரள புடவைக்கு ஆபரணங்கள் அதிகம் அணியவில்லை. மாறாக காதுகளுக்கு அழகிய ஜிமிக்கியும், கைகளுக்கு வளையல் என்று சிம்பிளான தோற்றத்தையே மேற்கொண்டிருந்தார்.

ஹேர் ஸ்டைல்
நயன்தாராவின் ஹேர் ஸ்டைல் குறித்து கூற வேண்டுமானால், இரண்டு வகையான ஹேர் ஸ்டைலில் போட்டோக்களை எடுத்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் கொண்டை போட்டு மல்லிகைப் பூ வைத்த மாதிரியும், மற்ற போட்டோக்களில் சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டும் உள்ளார்.

அம்மா மற்றும் காதலருடன் நயன்
இது நயன்தாரா தனது அம்மா மற்றும் காதலருடன் சேர்ந்து ஒரு குடும்பமாக எடுத்த போட்டோ. ஓணம் ஸ்பெஷலாக இயக்குநர் விக்னேஷ் சிவனும் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்திருந்தார்.

செல்பீ
வழக்கமாக எங்கு சென்றாலும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒரு செல்பீ போட்டோ எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் போடுவார்கள். அப்படி தான் இந்த ஓணம் பண்டிகை நினைவாகவும் ஒரு அழகான செல்பீயை எடுத்துள்ளனர்.

செம ஜோடி
இது ஜோடியாக ஷோபாவில் ரொமான்டிக்காக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்தவாறு எடுத்த போட்டோ. இந்த மாதிரியான போட்டோ இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள நெருக்கமான காதலை வெளிப்படுத்துகிறது எனலாம்.



Click it and Unblock the Notifications