அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் சில மூர்க்கத்தனமான தோற்றங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மிகவும் பிரபலமான அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, தனது 30 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரிஹானா தனது பாடல்களைக் காட்டிலும், தனது ஃபேஷன் உடைகளாலும் தான் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் எனலாம். ஏனெனில் அந்த அளவில் ரிஹானா அணியும் உடைகள் அனைத்தும் இருக்கும். சொல்லப்போனால், ரிஹானாவிற்கு பெண் ரசிகர்களை விட ஆண் ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.

ரிஹானாவிற்கு வித்தியாசமான ஃபேஷன் டேஸ்ட் கொண்டவர். இவர் எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும், அந்த விழாவில் உள்ள அனைவரது கண்களும் இவர் மீது படும்படியான உடைகளையே தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். அதுவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, தனது உடல் அங்கங்கள் அப்படியே வெட்டவெளிச்சமாக காண்பிப்பது போன்ற உடைகள் மற்றும் கிட்டத்தட்ட நிர்வாணமாய் வருவது போன்ற உடைகளை அணிந்து வந்து, அங்குள்ளோரை மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாக்குவார்.

இப்படி தனது உடல் மற்றவர்களுக்கு தெரியும்படியான உடை அணிந்து வர ஒரு தைரியம் மற்றும் துணிச்சல் வேண்டும். இது ரிஹானாவிடம் அதிகம் உள்ளது எனலாம். மேலும் இவர் அணிந்து வரும் உடைகள் குறித்து மற்றவர்கள் என்ன சொன்னாலும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், தனக்கு விருப்பமான உடையையே எப்போதும் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.

இக்கட்டுரையில் அமெரிக்க பாப் பாடகி இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மேற்கொண்டு வந்த சில மூர்க்கத்தனமான தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன் நெட் கொண்ட ட்ரான்ஸ்பரண்ட் உடை

மீன் நெட் கொண்ட ட்ரான்ஸ்பரண்ட் உடை

இது சிவப்பு கம்பள விழா ஒன்றில் ரிஹானா கலந்து கொள்ளும் போது அணிந்து வந்த ஒரு வகையான ட்ரான்ஸ்பரண்ட் உடை. இந்த உடையில் ரிஹானாவின் முழு உடலும் அப்பட்டமாக தெரியும் படி இருந்தது. அதோடு இந்த உடையில் ரிஹானா சற்றும் கூச்சமின்றி மிகவும் தைரியமாக பத்திரிக்கையாளர்களுக்கு பலவாறு போஸ் கொடுத்தார். ரிஹானா இந்த உடைக்கு பொருத்தமாக, தனது தலையில் மின்னும் நெட்டட் துணியைக் கட்டிக் கொண்டு, கையில் மொசுமொசு ஸ்கார்ப்பையும் கொண்டு வந்திருந்தார்.

முதலை தோல் பெயிண்ட் லுக்

முதலை தோல் பெயிண்ட் லுக்

ரிஹானாவின் இந்த லுக் நிச்சயம் பலரது வாயைப் பிளக்கச் செய்திருக்கும். உண்மையிலேயே ரிஹானா பிரா அணியவில்லையா என்ற கேள்வி கூட எழும். இது உண்மையே. ரிஹானா பிரா எதுவும் அணியாமல், அவ்விடத்தில் முதலையின் தோல் போன்ற பெயிண்ட் மட்டும் அணிந்து, போட்டோசூட்டிற்கு தைரியமாக போஸ் கொடுத்தார்.

நிர்வாண அவதாரம்

நிர்வாண அவதாரம்

இது போட்டோசூட் ஒன்றிற்காக எந்த ஒரு ஆடையையும் அணியாமல் நிர்வாணமாய், ரிஹானா கொடுத்த போஸ். ரிஹானா தனது அங்கங்களை கையால் மறைத்தவாறு கொடுத்த போஸ், உண்மையில் பலரது மனதில் இப்படியும் போஸ் கொடுப்பார்களா என்று எண்ண வைத்திருக்கும். ரிஹானா உடை தான் எதுவும் அணியவில்லை, ஆனால் கழுத்தில் மெல்லிய தங்க செயின் அணிந்திருந்தார்.

ஸ்டிக்கர்கள்

ஸ்டிக்கர்கள்

இது அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் மற்றொரு டாப்லெஸ் லுக். இதில் ரிஹானா பிரா எதுவும் அணியாமல், வெறும் ஸ்டிக்கரை மட்டும் தனது மார்பகங்களில் ஒட்டியிருந்தார். நல்ல வேளை ரிஹானா கீழே உள்ளாடையை அணிய மறக்கவில்லை. அதோடு ரிஹானா, இந்த தோற்றத்திற்கு கை நிறைய மெட்டாலிக் வளையல்களும், கழுத்தில் மணியும் அணிந்து, தலையில் பலவண்ண ஸ்கார்ப் அணிந்திருந்தார்.

நெட்டட் டாப்ஸ்

நெட்டட் டாப்ஸ்

இது நெட்டட் டாப்ஸ் மற்றம் ஜீன்ஸ் அணிந்து ரிஹானா கொடுத்த போஸ். ரிஹானா ஜீன்ஸ் பேண்ட்டிற்கு ஜிப் எதுவும் போடாமல், சற்றும் கூச்சம் இல்லாமல், நடந்தவாறு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

மீண்டும் நெட்டட் உடை

மீண்டும் நெட்டட் உடை

இது மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, ரிஹானா அணிந்து வந்த நெட்டட் உடை. அதுவும் இந்த உடை ஃபுல் ஸ்லீவ் கொண்டிருந்தது. மேலும் ரிஹானா தான் அணிந்திருந்த நெட்டட் உடையின் நிறத்திலேயே ஸ்கர்ட், காது வளையம், மெட்டபாலிக் சில்வர் சோக்கர் போன்ற அனைத்தையும் போட்டிருந்தார். அதிலும் ரிஹானா இந்த உடைக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தது, அவரை இன்னும் பளிச்சென்று காட்டியது.

அனைத்தையும் விட வித்தியாசமானவை

அனைத்தையும் விட வித்தியாசமானவை

ரிஹானா எப்போதும் வித்தியாசமான உடையைத் தான் அணிவார் என்பதற்கு 2017 ஆம் ஆண்டு நடந்த கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த உடையே போதும். இது வித்தியாசமாக மட்டுமின்றி விசித்திரமாகவும் இருக்கிறது எனலாம். மேலும் ரிஹானா இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் அவரை முற்றிலும் வேறு பட்டதாக காட்டியது எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Outrageous Looks Where Riri Dared To Bare

As Rihanna turned 30, we have compiled the most outrageous looks of the girl who always dares to bare. Have a look.