Latest Updates
-
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா
விருது விழா ஒன்றில் நீல நிற மின்னும் கவுனில் ரசிகர்களின் வாய் பிளக்க வைத்த மாளவிகா மோகனன்!
கடந்த வருடம் மும்பையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில் கலந்து கொள்ளும் போது ஒரு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான கவுன் ஒன்றை மாளவிகா மோகனன் அணிந்து வந்திருந்தார்.
இளைய தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி தான் மாளவிகா மோகனன். இவர் ஒரு மலையாள நடிகை. மலையாளத்தில் பிரபலமான இவர் தமிழில் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தால் தமிழ் ரசிகர்கள் பலரை ஈர்த்துள்ளார். அதோடு இவர் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பதுடன், அவ்வப்போது போட்டோக்களைப் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.

பொதுவாக மாளவிகா மோகனனுக்கு அனைத்து வகையான உடைகளுமே பொருத்தமாக இருக்கும். கடந்த வருடம் மும்பையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில் கலந்து கொள்ளும் போது ஒரு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான கவுன் ஒன்றை மாளவிகா மோகனன் அணிந்து வந்திருந்தார். இந்த தோற்றம் மாளவிகா மோகனனை படு கவர்ச்சியாக வெளிக்காட்டியது. அதோடு இது அவரது மறக்க முடியாத தோற்றங்களுள் ஒன்று எனவும் கூறலாம்.
ஏனெனில் அவர் அணிந்து வந்த உடையானது எந்நேரம் வேண்டுமானாலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தது. கீழே மாளவிகா மோகனனின் மறக்க முடியாத அந்த தோற்றம் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நீல நிற கவுன்
இது தான் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவிற்கு மலையாள நடிகை மாளவிகா மோகனன் அணிந்து வந்த நீல நிற ஸ்டாப்லெஸ் மின்னும் ப்ரோம் கவுன். விழாவின் போது மாளவிகா மோகனன் இந்த கவுனில் அனைவரது பார்வையையும் ஈர்க்கும் வண்ணம் படு ஹாட்டாக இருந்தார்.

கவுனின் முன் மற்றும் பின்புறம்
மாளவிகா மோகனன் அணிந்திருந்த கவுனின் பின்புறம் கவர்ச்சியாக முதுகு தெரியும் படி இருந்தது. முன்புறமோ மிகவும் லோ நெக் கொண்டு, இன்னும் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டும் வகையில் இருந்தது.

மேக்கப்
மாளவிகா மோகனன் இந்த நீல நிற உடைக்கு பொருத்தமாக கண்களுக்கு நீல நிற மேக்கப் போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிங்க் பிளஷ் அடித்து, உதட்டிற்கு வெளிரிய பிங்க் லிப் க்ளாஷ் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
ஹேர் ஸ்டைல் பற்றி கூற வேண்டுமானால், மாளவிகா மோகனன் நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு, கூந்தலின் முனைகளில் லேசாக கர்ல்ஸ் செய்து வந்திருந்தார்.

ஆபரணங்கள்
மாளவிகா மோகனன் நீல நிற கவுனிற்கு ஆபரணங்கள் எதுவும் அணியவில்லை. காதுகளுக்கு மட்டும் நீளமான வைர காதணியை அணிந்து வந்திருந்தார்.

போட்டோசூட்
இது நீல நிற லோ நெக் கொண்ட கவர்ச்சியான மின்னும் கவுனில் மாளவிகா மோகனன் எடுத்த மேலும் சில போட்டோக்கள்.



Click it and Unblock the Notifications
