For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரட்சித் தலைவி அம்மா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த காஞ்சி பட்டுப்புடவையில் வந்த கங்கனா!

டிகை கங்கனா ரனாவத் புரட்சித் தலைவி அம்மா டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்னைக்கு வந்துள்ளார். அப்போது அவர் பாரம்பரிய உடையான அழகிய பட்டுப்புடவை அணிந்து வந்து மரியாதை செலுத்தினார்.

|

மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'தலைவி'யில் நடிகை கங்கனா ரனாவத் ஜெலலலிதாவாக நடித்துள்ளார். அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இத்திரைப்படமானது செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் புரட்சித் தலைவி அம்மா டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்னைக்கு வந்துள்ளார்.

Kangana Ranaut Wore Orange Coloured Saree To Visit Puratchi Thalaivi Amma Dr J. Jayalalitha Memorial

அப்போது நடிகை கங்கனா ரனாவத் பாரம்பரிய உடையான அழகிய பட்டுப்புடவை அணிந்து வந்து மரியாதை செலுத்தினார். இந்த போட்டோக்களை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக நடிகை கங்கனாவிற்கு மற்ற உடைகளை விட, புடவையில் மிகவும் அழகாக இருப்பார். இப்போது புரட்சித் தலைவியைக் காணச் சென்ற போது 'தலைவி' நாயகி கங்கனா ரனாவத் மேற்கொண்டு வந்த சில ஸ்டைல்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு நிற பட்டுப்புடவை

ஆரஞ்சு நிற பட்டுப்புடவை

இது தான் புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தும் போது கங்கனா ரனாவத் அணிந்திருந்த புடவை. இவர் அணிந்துள்ள ஆரஞ்சு நிற புடவையானது காஞ்சிப் பட்டுப்புடவை. இந்த புடவை சிவப்பு நிற பார்டர் கொண்டிருந்தது. கங்கனா இந்த புடவைக்கு ஹை நெக் மற்றும் காலர் ஜாக்கெட்டை அணிந்திருந்தார். இது அவருக்கு ஒரு சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

மேக்கப்

மேக்கப்

கங்கனா ரனாவத் இந்த புடவைக்கு அளவான மேக்கப் போட்டிருந்தார். மேலும் இந்த புடவையின் அழகை மேம்படுத்திக் காட்டும் வகையில் கழுத்திலும், காதிலும் முத்துக்களைக் கொண்ட நெக்லேஸ் மற்றும் காதணியை அணிந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

கங்கனா ரனாவத் இந்த ஆரஞ்சு நிற புடவைக்கு ஏற்றவாறு நேர் உச்சி எடுத்து கொண்டை போட்டு, அந்த கொண்டையைச் சுற்றி மல்லிகைப் பூக்களை சூடியிருந்தார். இது இவரது தோற்றத்தை முழுமையாக்கியதோடு, அவரது அழகை மேலும் கூட்டி காண்பித்தது என்றே கூற வேண்டும்.

இப்போது புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்திற்கு சென்று கங்கனா ரனாவத் மரியாதை செலுத்திய போது எடுத்த சில போட்டோக்களைக் காண்போம்.

மலர்வளையம்

மலர்வளையம்

இது கங்கனா ரனாவத் மலர் வளையத்தை தூக்கிக் கொண்டு நினைவிடத்திற்கு செல்லும் போது எடுத்த போட்டோ.

அம்மா சின்னம்

அம்மா சின்னம்

இது இரட்டை இலைச் சின்னத்தை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காண்பிப்பது போன்று, கங்கனா ரனாவத் காட்டிய போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy: instagram

English summary

Kangana Ranaut Wore Orange Coloured Saree To Visit Puratchi Thalaivi Amma Dr J. Jayalalitha Memorial

Kangana recently shared one of her pictures when she was ready to visit Puratchi Thalaivii Amma Dr J Jayalalithaa Memorial in Chennai. She wore an orange coloured Kanjivaram saree with a red border and paired it with a high neck and glass-sleeved blouse of the same colour. Take a look.
Story first published: Saturday, September 4, 2021, 18:38 [IST]
Desktop Bottom Promotion