பயணத்திலும் ஸ்டைலை வெளிப்படுத்தும் கங்கனா ரனாவத்!

Posted By: Staff
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய    ட்வீட் செய்ய    ஷேர் செய்ய கருத்துக்கள்   மெயில்

கங்கனா ரனாவத் எப்போது அழகும் எளிமையும் நிறைந்தவர். அவரை நாம் பல அவதாரங்களில் பார்த்திருந்தாலும் எப்போதும் நமக்கு அலுப்புத் தட்டியதில்லை. அண்மையில் அவரை விமான நிலையத்தில் பார்க்க நேர்ந்தது. உண்மையைக் கூற வேண்டுமென்றால் பயணத்திற்குத் தேவையான பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என அவரின் பயண ஏற்பாடுகளைக் காணும் போது புரிந்தது.

அவர் அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் காட்சியளித்தார். அவரின் உடை அவரின் படங்களைப் போலவே ரம்மியமாக இருந்தது.

பிரிண்ட்டட் காட்டன் உடை: அவருடைய நீளமான பிரிண்ட்டட் காட்டன் உடை இடது புறத்தில் பிரிப்புடனும் (சிலிட்) அவருடைய நெக்லெஸ்ஸை சுற்றிய கருப்பு நிற நூல் வேலைப்பாடுடனும் ஒரு சோர்வைத் தரும் பயணத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. அது சவுகரியமானதாகவும் ஆனால் அதே நேரம் அவரின் ஸ்டைலுக்கு சற்றும் குறைவின்றியும் அமைந்திருந்தது.

Kangana Ranaut's Travel-Vogue

பிரவுன் பூட்கள்: ஷூ விரும்பிகளே நல்ல கவனியுங்க.. அவர் தன் உடைக்கு பொருந்தும் கச்சிதமான பூட்களை தேர்வு செய்திருந்தார். பூட் கலருக்கு பிரவுன் எப்போதும் சரியான ஒன்று என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Kangana Ranaut's Travel-Vogue

ப்ளேசர்: நீங்கள் உங்கள் பயணத்தைத் துவங்கியவுடன் திரும்பிப் பார்ப்பதற்கு வாய்ப்பே இருக்காது. நீங்கள் செல்லும் இடத்தில் தட்பவெப்பம் குறைவாக இருந்தால் உங்களுக்கு இது அவசியமானதாக இருக்கும்.

Kangana Ranaut's Travel-Vogue

அருமையான கண்ணாடி (சன் க்ளாஸ்): பெருசா நீங்க நகையெல்லாம் கொண்டு போக வேண்டாம். ஜஸ்ட் ஒரு செட் நல்ல ஷேடில் கண்ணாடி இருந்தாப் போதும்.

Kangana Ranaut's Travel-Vogue

கறுப்புக் கைப்பை: ஆம்.. நீங்க பயணம் செய்யும்போது ஒரு நல்ல ஹேண்ட்பேக் தேவைப்படும். இதற்கு கங்கனா ஒரு சூப்பரான ஸ்லிங் பேக்கினை தேர்ந்தெடுத்திருந்தார். பயணத்தில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ள உகந்த அளவில் அது இருந்தது.

Kangana Ranaut's Travel-Vogue

இப்பப் புரியுதா.. இவங்க எப்பவுமே எப்படி ஸ்டைலா தெரியறாங்கனு.

Please Wait while comments are loading...
Subscribe Newsletter