For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பு கலர் புடவை கட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கஜோல்

|

பாலிவுட்டின் பிரபல நடிகையான கஜோல் விநாயகர் சதுர்த்திக்கு கருப்பு கலர் புடவைய கட்டி அவங்க சோசியல் மீடியா பக்கத்துல போட்டோ போட்டு அசத்திட்டாங்க. அவங்க புடவைய கட்டுற விதமும் அத தேர்வு செய்ற விதமும் சொல்லுது கஜோல்க்கு புடவை மேல எவ்வளோ ஆசை இருக்குனு. நாம வீட்டுல சாதாரண நாட்களில் கருப்பு டிரஸ் அணிந்தவே அம்மாக்கள் நம்மள திட்டியே தீத்துருவாங்க. இதுல நல்ல நாட்களில் கருப்பு டிரஸ் போட்டு சுத்துன அவ்ளோதான் வசைபாடி விடுவார்கள்.

விநாயகர் சதுர்த்திக்கு கலர் கலரா டிரஸ் போட்டு சுத்தி இருப்போம். இப்போ கருப்பும் கோல்டன் கலர் புடவை கட்டி அசத்திய கஜோல் பற்றி பார்ப்போம். முகேஷ் அம்பானியின் ஆன்டிலாவில் நடந்த விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தாங்க கஜோல் வோட இந்த அழகான கருப்பு மற்றும் தங்க கிளாசிக் புடவை புகைப்படம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புடவை

புடவை

கஜோலின் இந்த புடவையை வடிவமைத்தவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா என்பதில் சந்தேகம் இல்லை. இவர் தான் பாலிவுட் நடிகைகளுக்கான ஆடை வடிவமைப்பாளராக திகழ்கிறார். எனவே, இந்த முறை மணீஷ் மல்ஹோத்ரா அவர்கள் கஜோலுக்கு தங்கம் மற்றும் கருப்பு ஆகியவற்றின் சரியான கிளாசிக் கலவையை அற்புதமான வகையில் தேர்வுசெய்துள்ளார். இந்த ஆடை ஆஸ்தா ஷர்மாவால் கையால் நெய்யப்பட்டதாகும். கருப்பு புடவை பளபளக்கும் தங்க எல்லை மற்றும் சிக்கலான கருப்பு வடிவங்களால் நெய்யப்பட்டுள்ளது. ஒரு நிவி பாணியில் அலங்கரிக்கப்பட்ட கஜோல், புடவையை ஸ்லீவ்லெஸ் கொண்ட கருப்பு ஜாக்கெட்யுடன் ஜோடி செய்து அணிந்து இருந்தார். அது கஜோலின் புடவை அழகை மேலும் கூட்டியது.

MOST READ: கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ

அணிகலன்கள்

அணிகலன்கள்

கஜோலின் அணிகலன் வலுவான மற்றும் துல்லியமாக அழகை பெற்று இருந்தது. கஜோல் தன் கழுத்தில் எந்த வித நகையும் அணியவில்லை. இப்போது கழுத்தில் ஒன்றும் அணியாதது தான் பேஷனாக மாறி வருகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கஜோல் இருக்கிறார். அதற்கு பதிலாக, கஜோல் கண்களை கவரும் தங்க நிற காதணிகளுடன் பிரதிபலித்தார். அந்த புடவைக்கும் மிக பொருத்தமாக அமைந்ததோடு காஜலின் முகத்திற்கு ஏற்ற சரியான ஒன்றாக காதணிகள் இருந்தன. இது கஜோலின் தோற்றத்தை முற்றிலும் உயர்த்தியது.

MOST READ: அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே?

மேக்கப்

மேக்கப்

கஜோல் நடுவில் பிரிக்கப்பட்ட நேர்த்தியான ஹேர் ஸ்டைல் ஒன்றை செய்து இருந்தார். மிக எளிமையான மேக்கப் ஒன்றைத் தனது புடவைக்கு ஏற்றவாறு தேர்ந்து எடுத்து போட்டு இருந்தார். கஜோலை இணைந்த புருவங்களுடன் பார்க்கும் போது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கண்களை கவர்ந்த வண்ணம் இருந்தது. மேலும் கஜோல் நியூடூ லிப்ஸ்டிக் கொண்டு உதடுகளை வண்ணமாக்கினார். இது கஜோலுக்கு இயற்கையான அழகை கொடுத்தவாறு இருந்தது. மிக அழகாக கேமராக்களுக்கு போஸ் கொடுத்து கஜோல் புன்னகையுடன் ஈர்த்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: style fashion ஸ்டைல்
English summary

Kajol Devgan Makes Us Want To Buy A Classy Black And Golden Sari Just Like Hers

Bollywood star, Kajol Devgan's sari game is undoubtedly one of the best in movie industry. Her eternal love for saris is quite evident on her Instagram feed. Last night, the actress attended the Ganesh festival celebrations at Mukesh Ambani's Antilla in a beautiful black and golden sari.
Story first published: Wednesday, September 4, 2019, 17:30 [IST]