Just In
- 2 hrs ago
உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகள சரியா சாப்பிட்டு வந்தா இனி முடி கொட்டாதாம்!
- 3 hrs ago
இந்த சத்து நிறைந்த உணவுகள தினமும் சாப்பிட்டீங்கனா...உங்க நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்!
- 3 hrs ago
கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி
- 4 hrs ago
பணம் கையில சேரமாட்டீங்குதா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க...
Don't Miss
- Movies
ஆற்றில் கவிழ்ந்த கார்.. சமந்தாவுக்கு என்ன ஆச்சு.. படக்குழு விளக்கம் !
- Sports
"ஓ.. அந்த கோபம் தான் காரணமா" சஞ்சு சாம்சன் குஜராத்தை அலறவிட்டதன் பின்னணி.. ராஜஸ்தானுக்கு அடித்த லக்
- News
"மத்திய அரசு திட்டங்களில் தமிழக அரசு ஊழல்!" பாஜக நாராயணன் பகீர்.. திராவிட மாடல் குறித்தும் அட்டாக்
- Finance
உணவு, பிட்காயின், தங்கம், வெள்ளியை வாங்கி வைங்க.. ஏன்.. பிரபல எழுத்தாளர் சொல்லும் காரணத்தை பாருங்க!
- Automobiles
உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
- Technology
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்ஸ்டாவில் கண்ணைக் கவரும் செக்ஸியான புடவையில் எடுத்த போட்டோவை வெளியிட்ட காஜல்!
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். இவர் அணியும் உடைகள் அனைத்துமே அட்டகாசமாக இருக்கும். இவர் எந்த வகையான உடையை அணிந்தாலும், அதில் அவர் மிகவும் அழகாக காட்சியளிப்பார். குறிப்பாக இவர் புடவையில் மிகவும் செக்ஸியாக இருப்பார். இவர் அணியும் அனைத்து புடவைகளுமே அழகாக இருக்கும்.
பொதுவாக காஜல் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். என்ன தான் திருமணமானாலும், இவர் தினமும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதுபுது போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன்வசம் வைத்தும் வருகிறார். அந்த வகையில் காஜல் அகர்வால் நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் புடவை அணிந்த ஒரு போட்டோவை வெளியிட்டார். அந்த புடவையில் அவர் மிகவும் சிக்கென்று அழகாக காட்சியளித்தார். இந்த புடவையை இவர் ஒரு திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அணிந்திருந்தார். கீழே இன்ஸ்டாவில் காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலிவ் க்ரீன் கிளாசிக் புடவை
இது தான் காஜல் அகர்வால் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட போட்டோ. இதில் இவர் ஆலிவ் க்ரீன் கிளாசிக் புடவை அணிந்திருந்தார். இந்த புடவையில் இலைக் கிளைகள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தன. இந்த புடவையை வடிவமைத்தது டிசைனர் அர்பிதா மெஹ்தா ஆவார். இந்த புடவையின் விலை ரூ. 62,000 மற்றும் இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது தான்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்
காஜல் இந்த ஆலிவ் க்ரீன் புடவைக்கு கோவரி ஷெல் பதிக்கப்பட்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த புடவையின் ஜாக்கெட்டை விட காஜல் இந்த புடவையை அணிந்திருந்த விதம் தான் அவரது கவர்ச்சியைக் கூட்டிக் காட்டியது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
காஜல் அகர்வால் இந்த புடவைக்கு ஏற்றவாறு கன்னங்களுக்கு லேசாக பிங்க் நிற பிளஷ் அடித்து, கண்களுக்கு காஜல் போட்டு, உதட்டிற்கு மின்னும் லிப் கிளாஸ் போட்டிருந்தார்.

ஆபரணங்கள்
காஜல் அகர்வால் இந்த புடவைக்கு கழுத்தில் எவ்வித ஆபரணமும் அணியாமல், டிசைனர் ரித்திகா சச்தேவா வடிவமைத்த மினரலியைச் சேர்ந்த அழகிய பெரிய காதணி மற்றும் பிற நகைகளை அணிந்திருந்தார். இந்த ஆபரணங்கள் சிம்பிளாக காணப்பட்டாலும், தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டின.

காலணி
காஜல் அகர்வால் இந்த புடவைக்கு ஏற்றவாறு கால்களில் பியோ ஷூக்களை அணிந்திருந்தார். மொத்தத்தில் இந்த புடவை கோடைக்காலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி அல்லது பிற நிகழ்ச்சியின் போது அணிவதற்கு ஏற்றதாக இருக்கும். உங்களுக்கு காஜல் அகர்வால் அணிந்திருந்த இந்த புடவை பிடித்துள்ளதா?