Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
பிங்க்-ஆரஞ்சு புடவையில் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்!
கோமாளி திரைப்படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்டத்திற்கு காஜல் அழகான பிங்க் மற்றும் ஆரஞ்சு கலந்த புடவையை அணிந்து வந்திருந்தார்.
தென்னிந்திய நடிகைகளுள் பிரபலமான ஓர் நடிகை தான் காஜல் அகர்வால். இவர் நீண்ட நாட்களுக்குப் பின் கோமாளி திரைப்படத்தில் நடித்தார். கோமாளி திரைப்படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்டத்திற்கு காஜல் அழகான பிங்க் மற்றும் ஆரஞ்சு கலந்த புடவையை அணிந்து வந்திருந்தார்.

காஜல் அகர்வாலுக்கு மார்டன் உடைகள் மட்டுமின்றி புடவையும் அற்புதமான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் இவருக்கு எந்த உடைக்கு எந்த மாதிரியான ஸ்டைலைப் பின்பற்றுவது என்பது நன்கு தெரியும். ஆகவே இந்த பிங்க் ஆரஞ்சு புடவைக்கு அற்புதமான ஆபரணங்கள் மற்றம் ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி, பல அசத்தலான போஸ்களைக் கொடுத்து எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.
இங்கு காஜல் அகர்வாலின் தோற்றங்கள் குறித்தும், அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிங்க்-ஆரஞ்சு சில்க் புடவை
இது தான் காஜல் அணிந்திருந்த பிங்க்-ஆரஞ்சு நிற சில்க் புடவை. இந்த புடவையில் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கோடுகள் போடப்பட்டிருந்தன. மேலும் இந்த புடவையின் ஒரு பக்கத்தில் பெரிய பிங்க் பார்டர் கொண்டிருந்தது. இந்த புடவையானது டிசைனர் ஸ்ரீஜா ராஜகோபாலன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த டிசைனர் தான் காஜலின் விருப்பமான டிசைனராம்.

ஜாக்கெட்
காஜல் இந்த சில்க் புடவைக்கு பிங்க் நிற முழங்கையளவு கை கொண்ட மற்றும் ஹை போட் நெக் ஜாக்கெட் அணிந்திருந்தது, அவரின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

மேக்கப்
காஜல் பிங்க்-ஆரஞ்சு சில்க் புடவைக்கு சிம்பிளான மேக்கப்பை போட்டிருந்தார். அதில் கண்களுக்கு ஐ-லைனர், உதடுகளுக்கு மின்னும் பிங்க் நிற லிப் க்ளாஸ், கன்னங்களுக்கு லேசாக ப்ளஷ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஹேர் ஸ்டைல்
காஜல் பிங்க் ஆரஞ்சு சில்க் புடவைக்கு நேர் உச்சி எடுத்து, போனிடைல் போட்டிருந்தார். சிம்பிளான ஹேர் ஸ்டைலாக இருந்தாலும், இவர் அணிந்திருந்த புடவைக்கு அந்த ஹேர் ஸ்டைல் பொருத்தமாக இருந்தது எனலாம்.

ஆபரணங்கள்
காஜல் அகர்வால் தான் அணிந்திருந்த பிங்க்-ஆரஞ்சு நிற சில்க் புடவைக்கு ஃபேன்ஸி ஆபரணங்களை அணிந்திருந்தது, அவரது தோற்றத்தை மிகவும் சிறப்பாக காட்டியது. மேலும் காஜல் தனது கை விரலுக்கு வைர மோதிரம் ஒன்றையும் அணிந்திருந்தார்.

நெயில் பாலிஷ்
காஜல் தான் அணிந்திருந்த புடவைக்கு மேட்ச்சாக தன் விரல்களுக்கு பிங்க் அல்லது ஆரஞ்சு நிறத்தில் நெயில் பாலிஷ் போடாமல், சிவப்பு நிற நெயில் பாலிஷ் போட்டிருந்தார்.

பறக்கும் முந்தானை
இது காஜல் போட்டோவிற்கு தனது புடவை முந்தானை பறக்கும்படியான போஸ் கொடுக்கும் போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
