Just In
- 2 hrs ago
இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா?
- 3 hrs ago
காற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கணுமா? அப்ப மறக்காம இத சாப்பிட கொடுங்க…
- 3 hrs ago
உலகறிந்த தமிழன் சுந்தர் பிச்சை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்...!
- 5 hrs ago
இந்தியாவின் பெருமை என்று நீங்கள் நினைக்கும் இந்த விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகள்தானாம் தெரியுமா?
Don't Miss
- News
வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்
- Finance
நூதனமா பேசுறாரே இந்த பாஜக எம்பி! ஆட்டோமொபைல் துறைல சரிவுன்னா ஏன் இவ்வளவு டிராபிக் ஜாம்!
- Movies
அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது!
- Automobiles
வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு!
- Sports
என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
- Education
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்
- Technology
பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அழகிய பட்டுப்புடவை அணிந்து கணவர் ரன்வீருடன் திருப்பதி பெருமாளை தரிசித்த தீபிகா!
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான மற்றும் ரொமான்டிக்கான தம்பதிகள் தான் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவருக்கும் காதலித்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளின் திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது.
பெரும்பாலும் பிரபலங்கள் தங்களின் முதல் திருமண விழாவைக் கொண்டாடுவதற்கு வெளிநாடுகளுக்கு செல்வது தான் வழக்கம். ஆனால் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்களின் முதல் திருமண நாளன்று முதலில் திருப்பதி பெருமாளை சந்தித்து ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து நேற்றே இவர்கள் கிளம்பிவிட்டனர். இன்று தங்களது திருமண நாளன்று குடும்பத்தினருடன் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
இங்கு திருப்பதி பெருமாளை தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களும், தீபிகா படுகோனேவின் தோற்றம் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

சப்யசாச்சி புடவை
இது தான் தீபிகா படுகோனே திருப்பதிக்கு அணிந்து வந்த சிவப்பு நிற பட்டுப்புடவை. இந்த புடவை டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்தது. தீபிகா அணிந்திருந்த சிவப்பு நிற புடவை கோல்டன் ஜரிகையால் அழகாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. தீபிகா படுகோனே தனது திருமண நாளன்று அணிந்து வந்த இந்த சிவப்பு நிற புடவை அவருக்கு மணப்பெண் தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

ஹை-நெக் ஜாக்கெட்
தீபிகா படுகோனே இந்த சிவப்பு நிற புடவைக்கு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைன் அற்புதமாக இருந்தது. அதுவும் கோல்டன் ஜரிகை கொண்ட ஹை-நெக் ஜாக்கெட் அணிந்தது அவரது தோற்றத்தை மிகவும் சிறப்பாக காட்டியது.

மேக்கப்
தீபிகா சிவப்பு நிற பட்டுப் புடவைக்கு மேற்கொண்ட மேக்கப் அற்புதமாக இருந்தது. இவர் உதட்டிற்கு கோரல் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, லேசாக கன்னங்களுக்கு ப்ளஷ் அடித்து சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டிருந்தார். மேலும் நெற்றியின் உச்சியில் குங்குமத்தை வைத்திருந்தது, அவரை மங்களகரமாக காட்டியது எனலாம்.

ஹேர் ஸ்டைல்
தீபிகா படுகோனே தான் அணிந்து வந்த பட்டுப்புடவைக்கு கொண்டை போட்டிருந்தார். இதில் ஒரு குறை என்னவென்றால், மல்லிகைப் பூ இல்லாதது தான். அது மட்டும் வைத்திருந்தால், இன்னும் அழகாக இருந்திருப்பார்.

ஆபரணங்கள்
தீபிகா சப்யசாச்சியின் சிவப்பு நிற பட்டுப் புடவைக்கு ஏற்றவாறு, தங்க ஆபரணங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார். அதில் கழுத்தையொட்டி நெக்லேஸ் மற்றும் நீளமான ஆரம் அணிந்து, காதுகளுக்கு பெரிய ஜிமிக்கி கம்மல் அணிந்திருந்தது, அட்டகாசமாக இருந்தது.

ரன்வீர் சிங்
நடிகர் ரன்வீங் சிங் கூட தீபிகா படுகோனேவிற்கு இணையாக அற்புதமாக காணப்பட்டார். அதுவும் அவர் ஷெர்வானி அணிந்து, மேலே பட்டு பார்டர் கொண்ட பிங்க் நிற ஷால், காதுகளுக்கு வளையம் அணிந்து மாப்பிள்ளை தோற்றத்தில் சிறப்பாக காட்சியளித்தார்.

புன்னகை
இது திருப்பதி பெருமாளை தரிசித்த பின் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே சந்தோஷத்தில் புன்னகைக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ.

குடும்பம்
இது திருப்பதியில் குடும்பத்தினருடன் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே சேர்ந்து எடுத்த போட்டோ.