ஷாமா சிக்கந்தர் லேட்டஸ்ட் லுக்ஸ்

Posted By: Aashika
Subscribe to Boldsky

தற்போது நீண்ட நாட்கள் வெக்கேஷனில் இருக்கும் நடிகை ஷாமா சிக்கந்தரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலாவுக்குச் சென்ற இடங்களில் எடுக்கும் ஸ்டைலிஷ்ஷான புகைப்படங்களை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போல்கா :

போல்கா :

ஷாமா போல்கா டாட்ஸ் உடையுடன் இரண்டு போட்டோக்களை பகிர்ந்திருக்கிறார். ஒன்று ஸ்விட்சர்லாந்தில் எடுத்தது, இன்னொன்று இத்தாலியில்.

ஸ்விட்சர்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஞ்சள் நிறத்தில் கருப்பு நிற போல்கா டாட்ஸ் கொண்ட கவுன் அணிந்திருந்தார். கருப்பு நிறத்தில் லாங் ஸ்ட்ரிப்புடன் ஸ்லிங் பேக் மற்றும் கூலர்ஸுடன் கச்சிதமாக இருந்தார். இவற்றுடன் இந்த உடைக்கு ஏற்றவாறு ஹேர் பன் ஹேர்ஸ்டைலில் இருந்தார்.

இன்னொரு போல்காவில், வெள்ளை நிறத்தில் கருப்பு நிற போல்கா டாட்ஸ் கொண்ட ஷார்ட்டும் அதற்கு மேட்சிங்காக நீல நிற பேண்ட்டும் அணிந்திருந்தார்.

ராயல் ப்ளாக் :

ராயல் ப்ளாக் :

கருப்பு வண்ண உடையில் ஏராளமான புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு மட்டும் இங்கே.

ஸ்விட்சர்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் ராபர்ட் காவல்லி டாப்ஸ் அணிந்திருந்தார். அவற்றுடன் எட்ரோ ஸ்க்ர்ட் மற்றும் பேக் பெர்ப்பெக்டாக பொருந்தியிருக்கிறது. ஆடையில் செலுத்திய கவனத்தை அப்படியே அணியும் நகைகளுக்கு செலுத்தியிருக்கிறார் ஷாமா.

டோல்ஸே மற்றும் கபானா காதணிகள், சாட்டிலைட் மோதிரம், ஃபெர்காமொ வாட்ச் மற்றும் மைக்கேல் கொர்ஸ் ஓபன் ஃபூட் பூட்ஸ் என ராயல் லுக்கில் இருந்தார் ஷாமா.

ஹங்கேரியில் இருக்கும் புதபெஸ்ட் பாலம் அருகில் நின்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ப்ளாக் ட்யூப் கவுனில் கிறங்கடிக்கிறார் ஷாமா. மேலே நீல நிற ஷ்ர்க், ஹைபன் இடது கையில் இரண்டு ஸ்டிரிப் வாட்ச் என ஸ்டைலிஷான லுக்கில் இருந்தார்.

க்ளாஸி லூக் :

க்ளாஸி லூக் :

டோல்சே மற்றும் கபானாவின் ஹை நெக் ப்ளாக் டாப் மற்றும் பிங்க் நிறத்தில் ஃப்ளோரல் ஸ்கர்ட் அணிந்து க்ளாஸி லுக் கொடுத்திருக்கிறார் ஷாமா. இந்த லுக்கை இன்னும் எடுத்துக் காட்டும் விதமாக க்ரே நிறத்தில் ஸ்னீக்கர் அணிந்திருந்தார்.

பேரழகி :

பேரழகி :

இந்த ஒப்ரா லுக்கில் பேரழகியாக ஜொலிக்கிறார் ஷாமா. இதில் ப்ரியங்கா சோப்ரா முக ஜாடை தெரிகிறதா? அதற்கு காரணம் இவர் அணிந்திருக்கும் ரால்ஃப் லவ்ரன் டாப் மற்றும் ஸ்கின் ஹக்கிங் பேண்ட் தான்.

இவற்றுடன் அவர் அணிந்திருக்கும் பெரிய அளவிலான ஜாரா காதணிகள் அழகை எடுத்துக் காட்டியது.

மைக்கேல் கோர்ஸின் ஷூ பல படங்களில் காண முடிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion bollywood actress
English summary

Shama Sikander's latest vacation looks

Shama sikander's slaying looks in her latest vacation.
Story first published: Monday, July 24, 2017, 13:20 [IST]