Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
கண்ணாடி உடையில் வெள்ளாவி பெண், விருது விழாவில் சுடசுட வந்த நடிகை!
கண்ணாடி உடையில் வெள்ளாவி பெண், விருது விழாவில் சுடசுட வந்த நடிகை!
நியா ஷர்மா இந்தி தொலைக்காட்சி நடிகைகளில் பிரபலமானவர். இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மட்டுமே பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக மில்லியன் பின்தொடர்பாளர்கள் வைத்துருப்பவர் நியா ஷர்மா. தான் எங்கு என்றாலும், என்ன செய்தாலும் அத சமூக தள முகவரிகளில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு தெரிவிப்பதை பழக்கமாக வைத்திருப்பவர் நியா ஷர்மா.
பெரும்பாலும், ஒரு பிரபலங்களை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அவரை வெறுப்பவர்களும், போட்டி நடிகர்களின் ரசிகர்களும் கூட பின்தொடர்வார்கள். காரணம் எப்படா வாய்ப்பு கிடைக்கும் கேலி, கிண்டல் செய்யலாம் மீம் போடலாம் என்று காத்திருப்பார்கள். அப்படியான ஒரு காத்திருப்புக்கு தான் நியா ஷர்மா சமீபத்தில் தீனியாகி இருக்கிறார்.

கோல்டன் விருதுகள்!
சமீபத்தில் கோல்டன் விருதுகள் 2018 விருது விழா நடந்தது. அதில் கலந்து கொள்ள சென்றிருந்த நியா ஷர்மா வெள்ளை நிற ட்ரான்ஸ்பரன்ட் கவுன் அணிந்து சென்றிருந்தார். இடுப்புக்கு கீழ் மொத்தமாக கண்ணாடி போல தான் இருந்தது அந்த உடை. இதை ஃபேஷன் டிசைனர்கள், ரசிகர்கள், திரை நட்சத்திரங்கள் ரசித்தாலும். கேலி, கிண்டல் செய்யவும் ஒரு கூட்டம் இருந்தது.

வர்ஸ்ட்!
அசிங்கமாக இருக்கிறார், எப்போதும் ஸ்மார்டாக இருப்பவர், இந்த உடையில் நன்றாக இல்லை. இது ஒரு மோசமான உடை, கேவலமாக இல்லையா, கொடுமையாக இருக்கிறது, இந்த மேக்கப்பில் பேய் போல இருக்கிறார் என்று என்று கமென்ட்டில் ரசிகர்கள் தங்கள் ஆசை தீர ரியா ஷர்மாவை தீட்டி தீர்த்தனர். பிரபலம் என்று வந்துவிட்டாலே இது எல்லாம் சகஜம் என்றாகிவிட்டது. ரஜினி, கமல், அமீர், அமிதாப் போன்றவர்களே சமூக தளங்களில் வறுத்தெடுக்கப்படும் போது, நியா ஷர்மா எல்லாம் எம்மாத்திரம்.

கோல்டன் அவார்ட்ஸ்!
கோல்டன் அவார்ட்ஸ் என்பது வட இந்தியாவில் தரப்படும் ஒரு விருது விழா. எப்படி சினிமா நட்சத்திரங்களுக்கு பிலிம்பேர் விருது வழங்குகிறார்களோ, அப்படி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு இந்த கோல்டன் விருது வழங்குகிறார்கள். இந்த விழா கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது.

நடிப்பு!
நியா ஷர்மா டிவி தொடர்களிலும், வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டில் இருந்து டிவி தொடர்களில் நடித்து வரும் நியா ஷர்மா, கடந்த 2012 முதல் மிகவும் பிரபலமானார். நிறைய விருதுகளும் வென்று இருக்கிறார்.
ஸ்டார் பரிவார் விருது, இந்தியன் டெலிவிஷன் அகாடமி விருது, ஸீ (ZEE) விருது, டெலிவிஷன் ஸ்டைல் விருது என பல விருதுகள் வென்றுள்ளார் நியா ஷர்மா.

ஆசிய அழகி!
கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் முறையே டாப் ஐம்பது ஆசியாவின் செக்ஸியான பெண்கள் வரிசையில் நியா ஷர்மா மூன்றாவது மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலை வெளியிட்டவர்கள் பிரிட்டிஷ் சார்ந்த ஈஸ்டர்ன் ஐ நியூஸ் பேப்பர் நிறுவனத்தார் ஆவர்.

மாடலிங்!
நடிப்பு என்பது மட்டுமின்றி நியா ஷர்மா மாடலிங்கும் செய்து வருகிறார். இவர் Quco ஹேர் பர்ஃபியூம் மற்றும் ஸ்ப்ரைட் குளிர்பானம் போன்றவற்றின் விளம்பரங்களில் தோன்றி இருக்கிறார். இதுப்போக இந்தி தொலைகாட்சி ரியாலிட்டி நிகழ்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறார் நியா ஷர்மா.
All Image Source:niasharma90 /instagram

விதியோ!
இப்படி ட்ரான்ஸ்பர் உடை அணிந்து வந்து நியா ஷர்மா தான் முதன்முதலாக ரசிகர்கள் மத்தியில் தவறான கமெண்டுகள் பெற்றிருக்கிறார் என்றால்.. இல்லவே இல்லை. இதற்கு முன் தமன்னா உட்பட பல நடிகைகள் இப்படியான உடையில் தோன்றி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளனர். ஹாலிவுட்டில் இதெல்லாம் சகஜம். கர்சீப் போன்ற துணையை உடையாக அணிந்து வந்தாலும், அதை ஃபேஷன் என்று எடுத்துக் கொள்வார்கள். ஏன் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
Image Source: bollywood / Instagram

என்ன செய்ய?
ஆனால், இந்தியாவில் ரசிகர்கள் அதை ஃபேஷன் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. முக்கியமாக தொலைகாட்சிகளில் நடிப்பவர்களை தங்கள் வீட்டில் ஒருவராய் காணும் பழக்கம் கொண்டிருக்கும் நமம்வர்கள் இப்படியான ஃபேஷன் உடைகளில் தோன்றினால் திட்டித்தீர்க்க தான் முனைகிறார்கள்.
ஒன்று, நட்சதிரங்களை பிரபலமாக மட்டும் காணும் பழக்கம் வரவேண்டும். இல்லை நட்சத்திரங்கள் அவர்கள் பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், இப்படியான டிரால்கள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடும்.



Click it and Unblock the Notifications