Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.
அலியா பட் அவர்கள் ஐஃபா விருதுகள் 2019 இல் கலந்து கொண்டு நியூடு நிற கவுன் அணிந்து அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளார். அலியா பட் பிரபல ஹிந்தி நடிகை என்பது நாம் அறிந்ததே ஆனால் அவருக்கு இந்தியத் திரையுலகி
அலியா பட் அவர்கள் ஐஃபா விருதுகள் 2019 இல் கலந்து கொண்டு நியூடு நிற கவுன் அணிந்து அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளார். அலியா பட் அவர்கள் பிரபல ஹிந்தி நடிகை என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவருக்கு இந்தியத் திரையுலகில் நிறைய ரசிகர்கள் பலம் உள்ளது. அதேபோல் அலியாவின் நடிப்புக்கும் பேஷன் ஈர்ப்புக்கும் மயங்காதவர் இல்லை.

டூ ஸ்டேட்ஸ், டியர் ஜின்டாகி, ஸ்டுடென்ட் ஆப் தி இயர் மற்றும் ராஜி போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற படங்களில் ஒன்றாகும். அத்துடன் அலியா பட் சும் சுவிட்க்கும் அவரின் கன்னக்குழி அழகிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அலியா பட்
அலியா பட் ஐஃபா விருதுகள் 2019 இல் கலந்து கொண்ட போது ஒரு நுயூடு நிற கவுன் அணிந்து இருந்தார். அது மிகவும் அழகாக மற்றும் எப்போதும் போல் இல்லாமல் ஒரு புதிய பாணியை பெற்று இருந்தாலும் அலியாவின் தோற்றம் நமக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அலியா எந்த விதமான அலங்கார பொருட்களும் அணியாமல் தனது தோற்றத்தை வெளிப்படுத்தி இருந்தார். அத்துடன் அலியா சற்று பிரகாசமாக இல்லாததும் நமக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் அலியாவின் உடை ஒரு புது பாணியை ஏற்படுத்தியுள்ளது.

நுயூடு கவுன்
அலியா பட்டின் இந்த ஆடையை வடிவமைத்தவர் அமி படேல் ஆவார். ஆலியா பட் அணிந்து இருந்த இந்த கவுன் ஜார்ஜஸ் சக்ரா கவுன் என்று கூறப்படுகிறது. இந்த சக்ரா கவுன் ஸ்ட்ரெப்லெஸ் அற்றதாகவும் மிக லேசான எடை குறைந்த ஒன்றாகவும் இருந்தது. இந்த கவுன் நெடு நெடு வரிகளாக விரிப்புகளை கொண்டு தரை வரை இருந்தது. அத்துடன் பின்புறத்தில் இருந்த விரிப்புகள் அலியா நடக்கும் போது வியக்கத்தகு வகையில் அவளின் ஆடைகள் வியப்பில் ஆழ்த்தியது.

அணிகலன்கள்
முன்னர் சொன்னது போல அலியா எந்தவித அணிகலன்களையும் அணியாமல் தனது தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரே ஒரு அழகான மோதிரத்தை மட்டும் அணிந்து தனது அழகை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வேளை அலியா காதணிகளுடன் வந்து இருந்தால் இன்னும் வெகுவாக நம்மைக் கவர்ந்து இருக்க வாய்ப்புகளுண்டு என்று கருதுகிறோம்.

மேக்கப்
ஆலியா தனது தோற்றத்தைத் தனது ஆடையின் நிறத்திற்கு ஏற்றவாறு ஒப்பனை செய்துள்ளார் என்பது அலியாவின் மேக்கப் பார்க்கும் போதே நமக்குத் தெரிகிறது. ஆனால் அலியாவின் மேக்கப் மிகவும் பளபளப்பாகவும் ப்ரோன்ஸ் நிறத்திலும் இருப்பதால் அவரின் கன்னத்து எலும்புகள் அலியாவின் தோற்றத்தைச் சற்று குறைத்துள்ளது. இருந்தும் அலியா தனது ஆடை மற்றும் கன்னக்குழி சிரிப்பினால் அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை.



Click it and Unblock the Notifications
