Just In
- 10 hrs ago
வார ராசிபலன் (29.05.2022-04.06.2022) - இந்த வாரம் வியாபாரிகள் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
- 11 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்...
- 22 hrs ago
மட்டன் சுக்கா
- 22 hrs ago
இந்த சைவ உணவுகளால் உங்கள் ஆயுள் குறையும் ஆபத்து அதிகரிக்கிறதாம்... ஜாக்கிரதையா சாப்பிடுங்க...!
Don't Miss
- News
சடலங்கள் மீட்கப்பட்ட ஏரி.. ‘பிணநீர்’ விற்பனையை ஆரம்பித்து சர்ச்சையில் சிக்கிய பெண்!
- Movies
வெளிநாட்டில் கணவர்.. இயக்குநருடன் ரொம்ப நெருக்கம்.. நடிகையின் லீலை எங்க போய் முடியப் போகுதோ?
- Finance
இந்தியா - பாகிஸ்தான் முக்கியப் பேச்சுவார்த்தை.. ஹைட்ரோபவர் திட்டம்..!
- Sports
ஐபிஎல் இறுதி போட்டி - குஜராத் வெற்றி வாய்ப்புக்கு 4 காரணம்.. விதியை மாற்ற கூடிய வீரர்கள் பட்டியல்
- Automobiles
உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!
- Technology
ஐபோன் 14 தொடர் எப்போது அறிமுகம்?- விலை, சிறப்பம்சங்கள் இதுதானா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட நம்ம ஜெனீலியாவா இது?... அந்த அழகோட ரகசியம் இதுதானாமே!
லாக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் நடிகை ஜெனிலியா சிவப்பு நிற உடையில் தேவதை போன்று இருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
2 மகன்களுக்கு தாயான ஜெனிலியா மீண்டும் முழுநேரம் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

ஃபேஷன் ஷோ
ராம்ப் வாக்
ஜெனிலியா மும்பையில் நடந்த லாக்மி ஃபேஷன் வீக் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு சரோஜ் ஜலன் வடிவமைத்த சிவப்பு நிற உடை அணிந்து ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்தார். ஜெனிலியா ராம்ப் வாக் செய்ததை பார்த்து அனைவரும் அசந்து போய்விட்டனர். அந்த அளவுக்கு அவர் அழகாக இருந்தார். அவரை பார்த்தால் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்றே கூற முடியவில்லை.

5 ஆண்டுகள்
ரித்தேஷ்
ஜெனிலியா 5 ஆண்டுகளுக்கு பிறகு ராம்ப் வாக் செய்துள்ளார். லெஹங்கா சோலி அணிந்து அதற்கு பொருத்தமான நகைகள் அணிந்திருந்தார் ஜெனிலியா. அதன் பிறகு அவர் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் சேர்ந்தும் ராம்ப் வாக் செய்தார். கணவருடன் ராம்ப் வாக் செய்தபோது பூப்போட்ட வெள்ளை நிற சேலை அணிந்திருந்தார்.

உடை
அழகு
சிவப்பு நிற உடையை போன்றே சேலையிலும் ஜெனிலியா மிகவும் அழகாக இருந்தார். சொல்லப் போனால் குறைவான மேக்கப்புடன் சேலையில் தான் ஜெனிலியா தேவதை போன்று இருந்தார். அவர் சேலை உடுத்தி கால்களில் ஷூ போட்டிருந்தாலும் அதுவும் ஸ்டைலாகத் தான் இருந்தது. ஜெனிலியாவை தேடி மராத்தி ஸ்க்ரிப்ட்டுகள் வந்துள்ளதாம். இத்தனை ஆண்டுகளாக குழந்தைகளை கவனித்துக் கொள்ள வசதியாக படங்களில் கவுரத் தோற்றத்தில் மட்டுமே வந்த ஜெனிலியா இனி முழு நேரம் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஜெனிலியா கடைசியாக ஃபோர்ஸ் 2 படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார்.
MOST READ: ஒரு வருடத்தில் 7 பெரும் தூண்களை இழந்த பாஜக... அது பற்றிய தொகுப்பு இதோ உங்களுக்காக...

ரகசியம்
டிப்ஸ்
ஜெனிலியா இன்னும் அப்படியே இருப்பதற்கு அவரின் உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம். அவர் நிறைய மீன்கள் சாப்பிடுகிறார். ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல் அவ்வப்போது கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுகிறார். மேலும் நிறைய தண்ணீர் குடிக்கிறார். நேரத்திற்கு தூங்குவது, அதிகாலையில் எழுவது, ஒர்க்அவுட் செய்வது தான் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் ஆகும்.