Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
அட நம்ம ஜெனீலியாவா இது?... அந்த அழகோட ரகசியம் இதுதானாமே!
ஃபேஷன் ஷோவில் தேவதை போன்று இருந்த ஜெனிலியா: அழகின் ரகசியம் பற்றித் தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
லாக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் நடிகை ஜெனிலியா சிவப்பு நிற உடையில் தேவதை போன்று இருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
2 மகன்களுக்கு தாயான ஜெனிலியா மீண்டும் முழுநேரம் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

ஃபேஷன் ஷோ
ராம்ப் வாக்
ஜெனிலியா மும்பையில் நடந்த லாக்மி ஃபேஷன் வீக் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு சரோஜ் ஜலன் வடிவமைத்த சிவப்பு நிற உடை அணிந்து ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்தார். ஜெனிலியா ராம்ப் வாக் செய்ததை பார்த்து அனைவரும் அசந்து போய்விட்டனர். அந்த அளவுக்கு அவர் அழகாக இருந்தார். அவரை பார்த்தால் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்றே கூற முடியவில்லை.

5 ஆண்டுகள்
ரித்தேஷ்
ஜெனிலியா 5 ஆண்டுகளுக்கு பிறகு ராம்ப் வாக் செய்துள்ளார். லெஹங்கா சோலி அணிந்து அதற்கு பொருத்தமான நகைகள் அணிந்திருந்தார் ஜெனிலியா. அதன் பிறகு அவர் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் சேர்ந்தும் ராம்ப் வாக் செய்தார். கணவருடன் ராம்ப் வாக் செய்தபோது பூப்போட்ட வெள்ளை நிற சேலை அணிந்திருந்தார்.

உடை
அழகு
சிவப்பு நிற உடையை போன்றே சேலையிலும் ஜெனிலியா மிகவும் அழகாக இருந்தார். சொல்லப் போனால் குறைவான மேக்கப்புடன் சேலையில் தான் ஜெனிலியா தேவதை போன்று இருந்தார். அவர் சேலை உடுத்தி கால்களில் ஷூ போட்டிருந்தாலும் அதுவும் ஸ்டைலாகத் தான் இருந்தது. ஜெனிலியாவை தேடி மராத்தி ஸ்க்ரிப்ட்டுகள் வந்துள்ளதாம். இத்தனை ஆண்டுகளாக குழந்தைகளை கவனித்துக் கொள்ள வசதியாக படங்களில் கவுரத் தோற்றத்தில் மட்டுமே வந்த ஜெனிலியா இனி முழு நேரம் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஜெனிலியா கடைசியாக ஃபோர்ஸ் 2 படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார்.

ரகசியம்
டிப்ஸ்
ஜெனிலியா இன்னும் அப்படியே இருப்பதற்கு அவரின் உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம். அவர் நிறைய மீன்கள் சாப்பிடுகிறார். ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல் அவ்வப்போது கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுகிறார். மேலும் நிறைய தண்ணீர் குடிக்கிறார். நேரத்திற்கு தூங்குவது, அதிகாலையில் எழுவது, ஒர்க்அவுட் செய்வது தான் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் ஆகும்.



Click it and Unblock the Notifications

