For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடடே! நம்ம நியூஸ் ஆங்கர் அனிதா சம்பத்தா இது??? - # Stylish Tamizhachi Photos

|
News Anchor Anitha Sampath Latest Photos

இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃபேஸ்புக், ட்விட்டர்னு இன்டர்நெட்டுலயும், வீடியோ கேம்லயும் முங்கி, மூழ்கிக் கிடந்த ஒரு இளைஞர் கூட்டம், இப்ப சன் நியூஸ் சேனல் முன்னாடி நாட்டு நடப்ப பார்த்து தெரிஞ்சுக்க உட்கார்ந்திருக்குன்னா, அதுக்கு நம்ம அம்மணி தான் காரணம்.

சர்கார் படத்துல இவங்க வந்துட்டு போனாலும், போனாங்க. இவங்களுக்கு அப்படி ஒரு ஃபேன் ஃபாலோயிங் சோசியல் மீடியாவுல. ஜிம்மிக்கி கம்மல் ஷெரில், கண்ணழகி ப்ரியா பிரகாஷ்க்கு அப்பறமா, இன்டர்நெட்டுல கொழுந்துவிட்டு எரிஞ்ச வைரல் நபர் அனிதா சம்பத் தான்.

அடுத்தடுத்து அனிதா என்ன நடக்குதுன்னு கவனிக்கிறதுக்குள்ள இவங்க நியூஸ் வாசிக்கிற வீடியோ, அதோட ஸ்க்ரீன் ஷாட் படங்கள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்னு பரவ ஆரம்பிச்சது. முக்கியமா, இவங்களோட அந்த புடவை ரசனை, அழகு வேகுவா இளைஞர்களா ஈர்த்துச்சு.

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, நல்ல போயிட்டிருந்த ஃபேமஸ குறைக்க, இவங்க சாதாரணமாவாக்கிங் போனப்ப எடுத்த ஏதோ போட்டோவ போட்டு, மேக்கப் போட்டா தான் அழகினு கிளப்பிவிட்டாங்க சில விஷக்கிருமிகள்.

அனிதாங்கிற பேரு வெச்சாலே தைரியம் அதிகமா தான் இருக்கும் போலனு நிரூபிக்கிற மாதிரி. தன்னோட இன்னொரு மேக்கப் இல்லாத போட்டோ ஒன்னு அப்லோட் பண்ணி, உங்க தங்கை, தாய், தாரம், எல்லாரையும் மேக்கப்போடா இருந்தா தான் ரசிப்பீங்க, விரும்புவீங்கன்னா, அப்படி யாரோட அன்பும் எனக்கு தேவை இல்ல. இது தான் நான்னு, பொளேர்னு வெச்ச மாதிரி ஒரு பதிவு பண்ணாங்க.

சும்மா விடுவாங்களா, நம்ம பசங்க... வீர தமிழச்சின்னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. அனிதா சம்பத் வைரல் ஆகிறது பிடிக்காம, மேக்கப் இல்லாத போட்டோவ போட்டவங்களுக்கு கோடான கோடி நன்றி தான் சொல்லணும். அதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி அனிதா போட்ட பதிவு பலரையும் நிஜமாவே அனிதாவ விரும்ப வெச்சது.

இப்போ, ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லைங்க ஹலோ, ஷேர் ஷாட்னு எல்லா சோசியல் மீடியா பிளாட்ஃபார்ம்லயும் அனிதா சம்பத் செம்ம வைரல் செலிபிரிட்டி ஆயிட்டாங்க. சினிமா ஹீரோயினிக்கு நிகரா, இவங்க போட்டோஸ்க்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேர்ஸ் எல்லாம் பறக்குது.

இதுல, நீங்க கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா? இதுநாள் வரைக்கும் நீங்க அனிதா சம்பத் புடவைல அடடே அழகா இருக்காங்களேனு நெனச்சுட்டு இருந்திருப்பீங்க. மாடர்ன் ட்ரெஸ்ல மேடம் அடடடடடடா அழகோ அழகா இருக்காங்க.

தன்னோட சோசியல் மீடியா பக்கங்கள்ல அவங்க பதிவு பண்ண அந்த போட்டோஸ் தான் நாம இந்த தொகுப்புல பார்க்க போறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

இசை அமைப்பாளர் யூவன் ஷங்கர் ராஜாவுடன் லைட் ஆரஞ்சு கேசுவல் உடையில் அனிதா சம்பத்.

#2

#2

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

பாடகர், நடிகர் மற்றும் நடிகை சங்கீதாவின் கணவர் க்ரிஷ் உடன் ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட்டில் அனிதா சம்பத்.

#3

#3

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

பிரபல நடன அமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடுவர் கலா அவர்களுடன் ராயல் ப்ளூ உடையில் அனிதா சம்பத்.

MOST READ: பண்டைய இந்தியாவின் மோசமான 'கலவி' விளையாட்டு, இப்படி எல்லாமா செஞ்சுருக்குங்க பக்கிங்க!

#4

#4

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

யாரந்த ஏழு பேர் என்று கேட்டவுடன் பட்டு, பட்டென்று பதில் சொல்லி அசத்திய பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் உடன் கருப்பு நிறைய ட்ரெண்டி உடையில் அனிதா சம்பத்.

#5

#5

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

நடிகர் விஜய் சேதுபதி உடன் அனிதா சம்பத்.

#6

#6

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

கருப்பு நிற உடையில் ஜாலியாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் அனிதா சம்பத்தின் மற்றுமொரு புகைப்படம்.

#7

#7

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

பிவிஆர் சினிமாஸில் ராயல் ப்ளூ ஸ்கர்ட்டில் ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் அனிதா சம்பத்.

#8

#8

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

மேக்கப் பற்றி எழுந்த ட்ராலுக்கு பதிலடி கொடுத்து சந்தா சம்பத் வெளியிட்ட புகைப்படம்.

MOST READ: சிரிக்கும் புத்தரை வீட்டில் இந்த இடத்தில் வைத்தால் உங்களுக்கு துரதிர்ஷ்டம் ஏற்படுமாம்

#9

#9

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

மியூசிக்.லி புகழ் காஜோல் உடன் இன்டர்நெட் சென்சேஷனல் அனிதா சம்பத்.

#10

#10

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

என்ன தான் மாடர்ன் ட்ரெஸ்ல கியூட்டா இருந்தாலும், பட்டு புடவையிலல சர்வ லட்சணமும் பொருந்திய தமிழ் பொண்ணா அசத்தலா இருக்காங்க. இது எல்லா பொண்ணுகளுக்கும் பொருந்தும்.

#11

#11

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

சிக்சாக் டிசைன் பட்டு புடவையில் கேண்டிட் மாதிரி போஸ் கொடுக்கும் அனிதா சம்பத். நீங்க எப்படி போஸ் கொடுத்தாலும் அழகுதானுங்க.

#12

#12

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

கருப்பு நிற காட்டன் புடவையில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

#13

#13

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

நியூஸ் வாசிப்பது மட்டுமல்ல, மேடைகளில் வீர ஆவேசமாக பேசவும் அனிதா சம்பத் அவர்களுக்கு பிடிக்குமாம். அப்ப கூடிய சீக்கிரம் ஒரு பட்டி மன்றத்துல பார்க்குற வாய்ப்பு கிடைக்கும் போல.

#14

#14

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

சர்கார் ஷூட்டிங் ஸ்பாட் போலயே... இயக்குனர் ஏஆர். முருகதாஸ் அவர்களுடன் அனிதா சம்பத்.

MOST READ: எப்போதும் எதற்காகவும் நம்பவே கூடாத ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? ஜாக்கிரதையா இருங்க

#15

#15

Image Source and Courtesy : Anitha Sampath / Helo

எங்க வீட்டு குத்துவிளக்கே, நீ கெடச்சா என் வாழ்க்க கெத்துன்னு பாடிக்கிட்டே சன் நியூஸ்ல அனிதா சம்பத் செய்தி வாசிக்கிறத ரசிச்சு கேட்டுக்கிட்டு இருக்கு ஒரு கூட்டம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion ஃபேஷன்
English summary

Different Looks of News Anchor Anitha Sampath

Here we have shown some different Looks of recent internet sensational News Anchor Anitha Sampath, Which is posted on her social media platform helo account.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more