For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆத்தாடி இது புது டிடி (எ) திவ்யதர்ஷினி - ஃபேஷன் ஜங்க்ஷன்!

  By Staff
  |

  பெரும்பாலான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு செல்லப்பெண் டிடி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் மட்டுமல்ல, இவரது அக்கா பிரியதர்ஷினியும் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி தான். ஆரம்பத்தில் துடுக்கு பெண்ணாக இல்லை, திடீரென்று தான் டிடி இப்படி சரவெடி போல கலகலப்பாக பேசுகிறார் என்று அவரும், அவரது வட்டாரத்தை சேர்ந்த நபர்களும் கூறுகிறார்கள்.

  2014ம் ஆண்டு தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் டிடி. ஆரம்பத்தில் இனிதே சென்றுக் கொண்டிருந்த இவர்கள் இல்லற பயணம் ஒரு வருடத்துலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ காரணமானது. முன்னர் மறுத்தாலும், சென்ற வருடம் இவர்கள் இருவரம் பரஸ்பர விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனைவருக்கும் அறிந்த செய்தியாகிவிட்டது.

  ஒருபுறம் இல்லற வாழ்க்கையில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும், தனது வேலையில் கில்லியாக இருக்கிறார் டிடி. திருமணத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி டிடி தமிழகத்தின் நபர் ஒன் தொகுப்பாளினி என்ற இடத்தை தன்வசம் வைத்திருக்கிறார். எத்தனை நேரம் பேச வேண்டும் என்றாலும் சலிப்பின்றி நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுப்பு வழங்கும் குணம் கொண்டவர். ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் கொஞ்சம் பதுங்கி இருந்தவர். இப்போது பாய்ந்து விளையாடுகிறார்.

  எங்கு சென்றாலும், புதிய உடை அணிந்தாலும் அதை உடனே தனது ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள டிடி மறப்பதே இல்லை. இதோ! டிடியின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் இருந்து அவரது சில மாறுபட்ட ஃபேஷன் லுக்ஸ்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சிவப்பு காலா?

  சிவப்பு காலா?

  கத்திரி வெயில் காலத்தில் சிவப்பு நிற வேஷ்டி மற்றும் பிளாக் செக்டு ஷர்ட் மற்றும் கருப்பு நிற கண்ணாடியுடன் காலா லுக்கில் இருக்கும் டிடி. ஸ்டேடஸ்ல் மைக்கல் ஜாக்சன் ரசிகை மற்றும் கத்திரி வெயிலுக்கு இது தான் ஏற்ற காஸ்டியூம் என்று பதிவிட்டுருக்கிறார்.

  அடுத்து நீலநிறம்!

  அடுத்து நீலநிறம்!

  வீட்டில் சிவப்பு வேஷ்டி, ஷர்டில் கலக்கிய டிடி. அடுத்து வேலை அலுவலகத்தில் நீலநிற வேஷ்டி மற்றும் லைட் ஒயிட் ப்ளூ ஷர்ட்டில் ஸ்டைலிஷ் கண்ணாடியுடன். இம்முறை தான் விஜய் டிவி புரடக்ஷன் மேனேஜர் இந்த ஒரு போட்டோவுக்காக ரொம்ப நடிக்கிறார் என்ற ஸ்டேடஸ் உடன் இந்த லுக்கை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுருக்கிறார்.

  ஃபேஷன் டிசைனர்!

  ஃபேஷன் டிசைனர்!

  சிட்னிஸ்லேடன் எனும் பிரபல தென்னிந்தியா ஃபேஷன் டிசைனர் உடன். லைட் பிங்க் ஷார்ட்ஸ் ஸ்கர்ட்டில் டிடி. தி மெஜிஷியன் சிட்னிஸ்லேடன் ஈஸ்டர் விருந்து அளித்தமைக்கு நன்றி. எப்போதும் நீ என்னுடன் இனிமையாக நடந்துக் கொள்கிறாய். லவ் யு சித். கடவுள் உன்னை ஆச்வதிப்பார் என்று கூறி ஸ்டேடஸ் பதிவிட்டுள்ளார் டிடி.

  விருது விழா!

  விருது விழா!

  ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்த ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சி பத்தாவது விஜய் விருதுகள் வழங்கியது. இந்த விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது, மேடைக்கு பின் தனது கோல்டன் நிற ஷோல்டர் லெஸ் கவுன் உடையில், உடன் தொகுப்பாளர்களாக பணியாற்றிய கோபி மற்றும் ம.க.பா உடன் டிடி.

  கருப்பு!

  கருப்பு!

  அது என்னமோ தெரியவில்லை... வெள்ளை நிறத்திலான பெண்கள் கருப்பு உடை அணியும் போது கருப்பும் ஜொலிக்கிறது. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஃபேஷன் டிசைனுடு ஃபுல் கவுனில் ஜொலிக்கும் டிடி. பெரிதாக நகையில் கவனம் செல்லுத்தாமல் கருப்பு நிறத்திற்கு எடுப்பாக கம்மல் மட்டும் அணிந்திருக்கிறார். இந்த ஆடையை டிடிக்காக டிசைன் செய்தவர் அவரது நெருங்கிய தோழர் சிட்னிஸ்லேடன்.

  அழகு!

  அழகு!

  என்ன தான் கவுன், ஸ்கர்ட் எல்லாம் போட்டா பொண்ணுங்க அழகா இருந்தாலும்... அந்த புடவை கட்டும் போது வெளிப்படும் அழகே தனி. ஸ்டுடியோ விருபா என்ற புதிய காட்டன் புடவை கலக்ஷன் லான்சிங் போது சாண்டல் நிற புடவை மற்றும் சிவப்பு நிற வெல்வட் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் அணிந்து. அதுக்கு மேட்சிங்காக தோடு கம்மல் அணிந்து டிடி.

  லாஸ்ட் பட் நாட்.....

  லாஸ்ட் பட் நாட்.....

  லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் லுக் ஆப் டிடி. லைட் பிரவுன் நிற புடவை மற்றும் பிங்க் நிற ஸ்லீவ் ஜாக்கெட் உடன். மாடர்ன் பிளஸ் கிளாஸிக் லுக்கில் டிடி. இந்த புகைப்படத்தை எடுத்தவர் வெங்கட்ராம் எனும் பிரபல இந்திய புகைப்பட கலைஞர் ஆவார். பெரும்பாலான தமிழ் நட்சத்திரங்களின் ஃபேப்பரைட் வெங்கட்ராம்.

  All Image Source:ddneelakandan / Instagram

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  DD Aka Dhivya Darshini Neelakandan's Recent Fashion Pic From Instagram Posts

  Famous Television Anchor DD Aka Dhivya Darshini Neelakandan's Recent Fashion Pic From Instagram Posts
  Story first published: Monday, June 25, 2018, 18:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more