பட்டு பாவாடையில் ஜொலிக்கும் தங்க தலைவி ஓவியா - படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பல விஷயங்களில் ஈர்க்கப்பட்டார். இதற்கு காரணம் நேரடியாக பேசும் குணம், புரளி பேசாதிருந்தது, நடனம், அவரது ஃபேஷன் உடைகள் என பலவன கூறலாம்.

என்ன தான் ஃபேஷன் உடைகளில் ஈர்ப்பாக இருந்தாலும், நம்ம ஊர் உடைகளில் தான் பெண்கள் மிகவும் அழகாக தெரிவார்கள். அதிலும் நமது பாரம்பரிய உடைகளான புடவை, தாவணி, பட்டு பாவாடைகளில் கூடுதல் அழகு தென்படும்.

அப்படி, பட்டு பாவாடையில் தங்கம் போல் ஜொலிக்கும் ஓவியாவின் ஃபேஷன் போட்டோஷூட் படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு - ஆரஞ்சு!

சிவப்பு - ஆரஞ்சு!

சிவப்பு, ஆரஞ்சு, தங்க நிற கலவையிலான பட்டு பாவாடையில் புன்னகை மலர ஓவியாவின் போஸ். இது அவர் முன்னர் நடித்த படத்திற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்.

வளையல்!

வளையல்!

சிவப்பு நிறத்திற்கு கான்ட்ராஸ்ட்டாகவும், பட்டு பாவாடையின் பார்டர் நிறத்திற்கும் ஏற்ப பச்சை வளையல் எடுப்பாக அமைந்திருக்கிறது.

சங்கிலி!

சங்கிலி!

மலையாள பெண்களின் அடையாளமாக திகழும் சந்தன பொட்டு. அவர்களுக்கே உரித்தான அந்த சின்ன டாலர் சேர்த்த ஒற்றை சங்கலி ஓவியாவிற்கு மேலும் அழகூட்டும் வண்ணம் அமைந்திருந்தன.

பச்சை தாவணி!

பச்சை தாவணி!

சோலைவன பின்னணி அமைப்பில் பூத்த மலராக வெட்கப்பட்டு நிற்கும் ஓவியா. பச்சை தாவணியில் புன்னகை தவழ இயற்கை அழகுடன்.

Image Courtesy: Arshal Photography

கம்பீரம்!

கம்பீரம்!

பாரம்பரிய உடை பெண்களின் அழகை மட்டுமல்ல, கம்பீரத்தையும் எடுத்துக்காட்டும் என கூறும்படி கம்பீரமாக அமர்ந்திருக்கும்ஓவியாவின் போஸ்.

Image Courtesy: Arshal Photography

சிவப்பு!

சிவப்பு!

சிவப்பு, சற்றே கவர்ச்சியும் சேர்த்து பெண்களை அழகுப்படுத்தி காட்டும் நிறம். சிவப்பு நிற பாவாடை சட்டை உடையில் நடிகை ஓவியா.

ஒன்ஸ் மோர்!

ஒன்ஸ் மோர்!

ஓவியாவின் பிளஸ் பாயின்ட் அவரது புன்னகை. கட்டுப்படுத்தாமல், வாய் நிறைய சிரிக்கும் அமைப்பு எல்லாருக்கும் கிடைக்காது. அமைந்தாலும் எல்லாரும் அப்படி சிரிக்க மாட்டார்கள். ஓவியாவின் சிரிப்பே அவரது சிறப்பு!

தங்கமே!

தங்கமே!

தலை நிறைய மல்லிகை பூவுடன்,ஆரஞ்சு நிற தாவணி உடையில் நடிகை ஓவியா. அவர் நடித்த படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட படம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bigg Boss Princess Oviya in Silk Skirt - Fashion Photos!

Bigg Boss Princess Oviya in Silk Skirt - Fashion Photos!