Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
2022 சைமா விருது விழாவிற்கு அசத்தலான உடையணிந்து வந்த பிரபலங்கள்!
2022 சைமா விருது விழாவிற்கு அசத்தலான உடையணிந்து வந்த சில பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவான சைமா விருது விழா கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்றது. இந்த திரைப்பட விருது விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய துறைகளில் உள்ள நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் திறமையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடந்த சைமா விருது விழாவிற்கு பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

பொதுவாக விருது விழா என்று வரும் போது, அதில் விருதுகளைப் பற்றி மட்டுமின்றி, விருது விழாவிற்கு வரும் பிரபலங்களின் தோற்றங்களும் அதிகம் பேசப்படும். ஏனெனில் பிரபலங்களின் அனைவரும் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல அழகிய உடைகளை அணிந்து வருவார்கள். அந்த வகையில் 2022 சைமா விருது விழாவிற்கு அசத்தலான உடையணிந்து வந்த சில பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரியா சக்ரபோர்த்தி
சைமா விருது விழாவிற்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி அழகான ஷீர் புடவை அணிந்து வந்திருந்தார். இந்த ஷீர் புடவையானது அழகான சீக்வின் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ரியா இந்த புடவைக்கு தொங்கும் பெரிய காதணிகளை அணிந்து, நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைத்துக் கொண்டு வந்தார்.

நித்தி அகர்வால்
நித்தி அகர்வால் சைமா விருது விழாவிற்கு அட்டகாசமான உடையணிந்து வந்திருந்தார். அதுவும் இவர் ஹாட் பிங்க் நிற ஹாஃப் ஷோல்டர் மற்றும் தை ஹை ஸ்லிட் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் காதுகளில் சிறிய தோடு மற்றும் கையில் பிரேஸ்லெட் அணிந்திருந்தார்.

பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே சைமா விருது விழாவிற்கு வெள்ளை நிற ஹாஃப்-ஷோல்டர் கவுனில் வந்து அசத்தினார். இந்த விருது விழாவில் இவர் "Youth Icon South" என்னும் விருதைப் பெற்றார். பூஜா ஹெக்டே இந்த கவர்ச்சிகரமான கவுனிற்கு பொருத்தமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு, கால்களுக்கு கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

லட்சுமி மஞ்சு
தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு கிளாமரான சில்வர் நிற சீக்வின் கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது டீப் நெக்லைன் கொண்டது. லட்சுமி இந்த உடைக்கு நீளமான காதணிகளை அணிந்து, கைக்கு கஃப் பிரேஸ்லெட்டை போட்டு வந்திருந்தார்.

ஹன்சிகா மோத்வானி
குட்டி குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி சைமா விருது விழாவிற்கு வெள்ளை நிற ஷீர் சீக்வின் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த தை-ஹை ஸ்லிட் கவுனிற்கு ஹன்சிகா அளவான மேக்கப் போட்டு, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு க்யூட்டாக வந்திருந்தார்.

ரன்வீர் சிங்
நடிகர் ரன்வீர் சிங் அழகான வெள்ளை நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு கருப்பு நிற கண்ணாடி மற்றும் நீல நிற லோபர் அணிந்து வந்தது இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக காட்டியது.

அல்லு அர்ஜுன்
ஸ்டைலிஷ் பேன் இந்தியா ஸ்டாரான அல்லு அர்ஜுன் சைமா விருது விழாவிற்கு கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார். இந்த சூட்டிற்கு இவர் அணிந்து வந்த கருப்பு கண்ணாடி இவரை இன்னும் ஹேண்ட்சம்மாக காட்டியது.

விஜய் தேவரகொண்டா
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் தேவரகொண்டா சைமா விருது விழாவிற்கு கருப்பு வெல்வெட் சூட் அணிந்து வந்திருந்தார்.

யாஷ்
கே.ஜி.எஃப் நடிகரான யாஷ் சைமா விருது விழாவிற்கு தனது மனைவியான ராதிகா பண்டிட் உடன் வந்திருந்தார். யாஷ் வெள்ளை நிற பிளேஷர் மற்றும் அதற்கு பொருத்தமான டேப்பர்டு பேண்ட் அணிந்து வந்திருந்தார். முக்கியமாக இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ராக்கி பாய் தோற்றம் இன்னும் அட்டகாசமாக இருந்தது.

கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் சைமா விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் வர்சிட்டி ஜாக்கெட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications