Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சித்தார்த்-கியாராவின் திருமண வரவேற்பிற்கு செக்ஸியான புடவையில் வந்து சூடேற்றிய பிரபலங்கள்!!
கீழே சித்தார்த்-கியாராவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபலங்களின் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு யாருடைய லுக் பிடித்துள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சமீபத்தில் தான் சித்தார்த் மற்றும் கியாரா அத்வானியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் சித்தார்த்-கியாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக சில நடிகைகள் மிகவும் செக்ஸியான புடவையில் வந்து வரவேற்பு நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்கினர்.
கீழே சித்தார்த்-கியாராவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபலங்களின் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு யாருடைய லுக் பிடித்துள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அலியா பட் மற்றும் நீது கபூர்
சித்தார்த்-கியாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை அலியா பட், அவரது மாமியார் நீது கபூருடன் கலந்து கொண்டார். அதில் அலியா பட் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் கொண்ட அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நெட்டட் புடவையில் வந்திருந்தார். நீது கபூர் பூ பிரிண்ட் செய்யப்பட்ட பச்சை மற்றும் சிவப்பு நிற உடையில் வந்திருந்தார்.
கஜோல் மற்றும் அஜய் தேவ்கன்
சித்தார்த்-கியாராவின் திருமண வரவேற்பிற்கு கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் தம்பதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு கஜோல் கவர்ச்சியான மற்றும் மின்னும்படியான புடவையில் வந்திருந்தார்.
கரீனா கபூர் மற்றும் கரண் ஜோகர்
நடிகை கரீனா கபூர் தனது நண்பரும் இயக்குனருமான கரண் ஜோகருடன் சித்தார்த்-கியாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது கரீனா கபூர் பிங்க் மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த ஷீர் புடவையில் வந்திருந்தார்.
திஷா பதானி
நடிகை திஷா பதானி சிஸ்லிங் டர்க்கைஸ் ப்ளூ சீக்வின்ட் பேக்லெஸ் டாப் மற்றும் மேட்சிங்கான தை-ஹை ஸ்லிட் கவுனை அணிந்து செக்ஸியாக வந்திருந்தார்.
மீரா ராஜ்புத்
நடிகை மீரா ராஜ்புத் தனியாக திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார். அப்போது அவர் ஹால்டர் நெக் ஜாக்கெட்டுடன் மின்னும் பழுப்பு நிற புடவையில் கவர்ச்சியாக வந்திருந்தார்.
கிரிதி சனோன்
நடிகை கிரிதி சனோன் பலரும் வாயைப் பிளக்கும் படி கோல்டன் நிற மின்னும் ஷீர் புடவையில் வந்திருந்தார்.
ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி புடவை கவுனில் சித்தார்த் கியாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வருண் தவான் மற்றும் நடாஷா தலால்
வருண் தவான் தனது மனைவி நடாஷா தலாலுடன் கியாரா சித்தார்த் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார். அப்போது நடாஷா லாவெண்டர் நிற லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார்.
ராஷி கன்னா
நடிகை ராஷி கன்னா அடர் பிங்க் நிற ஷீட் புடவையில் சித்தார்த் கியாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ரித்தேஷ்-ஜெனிலியா
நடிகர் ரித்தேஷ் தனது காதல் மனைவியான ஜெனிலியாவுடன் சித்தார்த் கியாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



Click it and Unblock the Notifications